[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 01:30.28 PM GMT ]
இதனையடுத்து பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்குமிடையில் கடுமையான முரண்பாடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேற்குறித்த காட்டுப்பகுதியில் இராணுவத்தினரின் உதவி மற்றும் கண்காணிப்புடன் காட்டுமரங்கள் மற்றும் மணல் அகழப்படுவதாக மக்கள் பொலிஸாருக்கும், பிரதேச செயலகத்திற்கும் பல தடவைகள் முறையிட்டிருந்தனர். எனினும் இந்த விடயத்தில் எவரும் அக்கறை கொள்ளவில்லை.
இந்நிலையில் கடந்த 1 ம் திகதி மேற்குறித்த காட்டுப் பகுதிக்குள் மரங்கள் வெட்டப்பட்டுக் கொண்டிருப்பதாக மக்கள் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்த நிலையில் பொலிஸார் குறித்த பகுதியை முற்றுகையிட்டு இராணுவத்தினரின் பாதுகாப்பில் வெட்டப்பட்டுக் கொண்டிருந்த, மரங்களையும், அவற்றை ஏற்றிச்செல்லத் தயாராக இருந்த தென்னிலங்கை மர வியாபாரிகளுக்குச் சொந்தமான வாகனங்களையும் கைப்பற்றினர்.
எனினும் அந்த மரங்களையும் ,வாகனத்தையும் பொலிஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதற்கு தடைவிதித்த இராணுவத்தினர் பொலிஸாரை அங்கிருந்து செல்லுமாறு கடுமையாக முரண்பட்டனர்.
இதனையடுத்து மேலதிக பொலிஸாரை வரவளைத்த மல்லாவி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இராணுவத்தினரின் எதிர்ப்பினையும் மீறி மரங்களையும், வாகனத்தையும் கைப்பற்றி பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளார்.
இதேபோல் கடந்த வாரம் குறித்த பகுதியில் இந்திய வீட்டுத்திட்ட வேலைகளுக்காக மணல் ஏற்றிக் கொண்டிருந்த, உழவு இயந்திரச் சாரதிகள் கடுமையாக தாக்கப்பட்டு மணலும் மீண்டும் பறிக்கப்பட்டதுடன், அந்தப் பகுதிக்குள் யாரும் வரக் கூடாதெனவும் கடுமையான உத்தரவு இராணுவத்தினரால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த சம்பவத்தில் உழவு இயந்திர சாரதிகள் தம்மை ஏமாற்றுவதாக கூறிய மாந்தை கிழக்கு பிரதேச செயலர், இராணுவம் அவ்வாறு எதுவும் செய்யவில்லை எனவும் வக்காளத்து வாங்கினார்.
இந்நிலையிலேயே தற்போது பெறுமதியான காட்டுமரங்கள் இராணுவ அதிகாரிகளின் ஆதரவுடன் தென்னிலங்கை மர வியாபாரிகளுக்கு விற்கப்படுவதும், அமைச்சர் றிசாட் பதியூதின் ஆதரவுடன் மணல் திருடப்படுவதும் அம்பலத்திற்கு வந்துள்ளது.
இதேவேளை குறித்த கொள்ளைச் சம்பவங்களில் பிரதேச செயலர் மற்றும் பொறுப்புவாய்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பிருப்பதாக மாந்தை கிழக்கு மக்கள் குற்றம் சாட்டியிருக்கின்றனர்.
வன்னியில் இளைஞர், யுவதிகளை சிவில் பாதுகாப்புப் படையில் இணைக்க தீவிர முயற்சிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 மே 2013, 01:39.49 PM GMT ]
இவ்வகையில், போராளிகள் பலரும், ஏனைய இளைஞர், யுவதிகளும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் பண்ணை வேலை, ஆசிரியர் வேலை என்று கூறி இணைக்கப்பட்டுள்ளார்கள்.
இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 400 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் என்று கூறி ஜனாதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ச எம்.பி யால் சிவில் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள்.
இந்நிகழ்வு இன்றைய தினம் முல்லைத்தீவு மல்லாவி, ஜெயபுரம் ஆகய இடங்களில் நாமல் தலைமையில் நடைபெறுகின்றது.
வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இவர்கள் தீவிர பிரசார நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவுள்ளார்கள்.
Geen opmerkingen:
Een reactie posten