தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 5 mei 2013

இலங்கைக்கு கச்சதீவின் உரிமத்தை இந்தியா வழங்க நான் உதவி செய்யவில்லை!- கருணாநிதி


கச்சதீவின் உரிமத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கியமைக்கு தாம் உதவி செய்யவில்லை என்று  திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
கட்சி உறுப்பினர்களுக்கு அவர் எழுதியுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இலங்கையிடம் இருந்து கச்சதீவின் உரிமத்தை இந்தியா மீளப்பெற வலியுறுத்தி தமிழக சட்ட சபையில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
இதன் போது உரையாற்றிய முதல்வர் ஜெயலலிதா, கச்சதீவின் அதிகாரத்தை இலங்கைக்கு கையளிப்பதற்கு கருணாநிதி மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைத்ததாக தெரிவித்திருந்தார்.
எனினும் இதனை மறுத்துள்ள கருணாநிதி, 40 வருடங்களுக்கு முன்னர் கச்சதீவின் அதிகாரத்தை இந்தியா இலங்கைக்கு வழங்கும் உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மறுநாள், தாம் இந்த விடயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாட்களில் பிரதமராக இருந்த இந்திராகாந்திக்கு கடிதம் எழுதி இருந்தாக தெரிவித்துள்ளார்.


Geen opmerkingen:

Een reactie posten