[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 06:26.35 AM GMT ]
கோண்டாவிலைச் சேர்ந்த வங்கியொன்றில் சிற்றூழியராகப் பணிபுரியும் நபரொருவரே இவ்வாறு சங்கை விற்பனை செய்துள்ளார்.
இச் சங்கினை வலம்புரிச் சங்கு என எண்ணி 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தைக் கொடுத்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் வாங்கியுள்ளார்.
பின்னர் இச்சங்கு வலம்புரிச் சங்கு அல்ல என்ற விடயம் தெரிய வந்தபோது சங்கினை வாங்கியவர் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார்.
பொலிஸார் குறித்த நபரைக் கைதுசெய்து யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதவான் குறித்த சந்தேகநபரை 11 நாட்கள் விளக்கமறியலில் வைத்திருக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் மனித உரிமை ஆணைக்குழுவின் புதிய அலுவலகம்!
[ வெள்ளிக்கிழமை, 10 மே 2013, 07:37.42 AM GMT ]
இது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த மனித உரிமை ஆணைக் குழுவில் முறைப்பாடுகளைப் பதிவு செய்ய கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட மக்கள் யாழ். வரவேண்டிய நிலை இருந்தது. இதன் மூலம் பணச் செலவு, நேர விரயம் அவர்களுக்கு ஏற்பட்டது. இதைத் தவிர்க்கு முகமாக நாம் கிளிநொச்சி சுகாதாரப் பணிமனையில் அலுவலகம் ஒன்றை திறந்து வைத்துள்ளோம்.
இங்கு புதன்கிழமைகளில் முறைப்பாடுகளை ஏற்றுக் கொள்கிறோம். ஆனாலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களிலுள்ள பாமர மக்களுக்கும் கிராமப் புறங்களில் உள்ளவர்களுக்கும் இவ் அலுவலகம் பற்றிய தெளிவான தகவல் கிடைக்கப் பெறாமையால் சில வேளைகளில் அலுவலகத்தை தேடி அலைகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், பயன்பாடுகள் போன்றவை பற்றியும் அறியாமலுள்ளனர். இதனால் எமது சேவை பாமர மற்றும் கிராமப்புற மக்களுக்கு குறைவாகின்றது.
எனவே சமூக ஆர்வலர்கள், பொது அமைப்புக்கள், சேவை நிலையங்கள், ஊடகங்கள் என்பன எமது சேவை மற்றும் பயன்பாடு பற்றி மக்களுக்கு அறியத் தருவதன் மூலம் மக்களுக்கான தேவைகள் விரைவாக நிறைவு செய்ய முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten