தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 2 mei 2013

யாழில் மூன்று கடைகள் கொள்ளையர்களால் உடைப்பு – தென்பகுதி இளைஞர்கள் கைது


போலி கடவுச் சீட்டு மூலம் அகதிகளை ஜேர்மனிக்கு அனுப்பிய நபர்கள் கைது
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 03:48.01 AM GMT ]
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை போலி கடவுச்சீட்டுடன் ஜேர்மனிக்கு அனுப்பி வந்த செயற்பாடு ஒன்று முடக்கப்பட்டுள்ளது.
பீ.டீ.ஐ. இணையத்தளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
இவ்வாறான இரண்டு பேர் நேற்றைய தினம் ராமநாதபுரத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்கள் போலியான இந்திய கடவுச் சீட்டுகளை தயாரித்து, தமிழகத்தில் உள்ள அகதிகளை ஜேர்மனிக்கு அனுப்பி வந்துள்ளமை தெரியவந்ததைத் தொடர்ந்து கைதாகியுள்ளனர்.
தமிழக விசாரணை பிரிவு காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொள்கின்றனர்.
அவர்களிடம் இருந்து 11 லட்சம் ரூபாய் பணமும், 60க்கும் அதிகமான போலி கடவுச் சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
யாழில் மூன்று கடைகள் கொள்ளையர்களால் உடைப்பு – தென்பகுதி இளைஞர்கள் கைது
[ வியாழக்கிழமை, 02 மே 2013, 06:21.50 AM GMT ]
யாழில் வர்த்தக நிலையஙகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட தென்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர்
யாழ். நகரப் பகுதியில் உள்ள மின்சார நிலைய வீதியிலுள்ள மூன்று வர்த்தக நிலையங்கள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு உடைக்கப்பட்ட போதிலும் ஒரு கடையில் மட்டும் திருட்டு இடம்பெற்றுள்ளதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.
திருட்டுச் சம்பவம் தொடர்பாக நேற்றுக் காலை கடை உரிமையாளர்கள் யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். இந்த முறைப்பாட்டின் பிரகாரம் சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸ் தடய வியல் நிபுணர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையின் போது, தொலைபேசி விற்பனை நிலையம், தையல்கடை மற்றும், புடவையகம் ஆகிய வர்த்தக நிலையங்கள் உடையக்கப்பட்டமை உறுதி செய்யப்பட்டது. அதில் ஒரு கடையில் மாத்திரம் 7000 ரூபா பணம் திருடப்பட்டுள்ளது. ஏனைய இரு கடைகளையும் உடைத்த திருடர்கள் பூட்டுக்கள் உடைபடாத சந்தர்ப்பத்தில் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் யாழ். பொலிஸார் கூறினர்.
ஒரே நேரத்தில் உடைக்கப்பட்ட 3 வர்த்தக நிலையங்களும் முஸ்லிம்களினது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ். பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கடை உடைத்துக் கொள்ளையிட்ட சந்தேக நபர்கள் தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Geen opmerkingen:

Een reactie posten