[ புதன்கிழமை, 08 மே 2013, 11:28.45 AM GMT ]
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டிருக்கின்றார்.
சந்திப்பில் மேலும் அவர் குறிப்பிடுகையில்,
வட,மாகாணசபை தேர்தல் நடைபெறவுள்ளதாக உத்தியோகபூர்வ அறிவுறுத்தல் வெளிவராத நிலையிலேயே வன்முறைச் சம்பவங்கள் ஆரம்பித்திருக்கின்றன.
இது எமக்கு மட்டுமல்லாமல் ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கூட நடக்கின்றது.
இந்த நிலையில் வடக்கில் ஜனநாயக முறைகளுக்கூடான தேர்தல் ஒன்று நடத்தப்படும் என நான் நினைக்கவில்லை.
தேர்தலுக்கு முன்னராக ஒரு சர்வதேச கண்காணிப்பு இங்கு ஏற்படுத்தப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோம். இதனையொரு வேண்டுகோளாகவும் விடுக்க விரும்புகின்றோம்.
மேலும் இந்த தாக்குதலின் பின்னணியில் தமிழ் தேசியத்திற்கு விரோதமான ஜனநாயகத்தை மதிக்காத, ஜனநாயகத்திற்கு குந்தகம் விளைவிப்பவர்கள் மட்டுமே இருக்கின்றார்கள்.
அவர்களை சட்டம் ஒருபோதும் தண்டிக்கப் போவதில்லை. மேலும் மாகாணசபை தேர்தலில் நான் போட்டியிடுவது உறுதியாகியுள்ள நிலையில், என்னை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதற்கு நாம் ஒருபோதும் அஞ்சமாட்டோம் என்றார்.
தமிழ் மக்கள் எதை பாதுகாக்கப் போராடினோமோ இன்று சமாதான காலத்தில் அதனை இழந்து வருகின்றோம்! - பொன். செல்வராசா
[ புதன்கிழமை, 08 மே 2013, 11:50.30 AM GMT ]
வவுணதீவுப் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட செல்வராசா எம்.பி, அங்குள்ள மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்ததுடன் பனையறுப்பான கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு பிளாஸ்ரிக் கதிரைகளை வழங்கி வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சிங்களப் பேரினவாதத்தின் அடக்குமுறையில் இருந்து மீட்சி பெறவும் எமது உரிமைகளை வென்றெடுக்கவும் எமது தலைவர்கள் அஹிம்சை வழியில் போராடி எந்த வித அர்த்தமும் இல்லை என்பதை உணர்ந்த இளைஞர்கள் ஆயுதமேந்திப் போராடினார்கள்.
அந்தப் போராட்டமும் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 65 வருடங்களுக்கும் மேலாக எதனைப் பாதுகாக்க நாம் போராடினோமோ அதனை இன்று சமாதான காலத்தில் இழந்து வருகின்றோம்.
குறிப்பாக வட கிழக்கு எமது தாயகத்தில் திட்டமிட்ட குடியேற்றங்களினுடாக காணிகள் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு, வலிகாம் கிழக்குப் பகுதியில் சுமார் 6400 ஏக்கர் சொந்தக் காணிகளை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வடக்கில் மட்டுமல்ல கிழக்கிலும் தமிழ் மக்களது காணிகள் அத்துமீறிப் பிடிக்கப்பட்டுக் கொண்டு வருகின்றது.
படுவாங்கரை பகுதியில் பெரும்பான்மை இனத்தவர் அத்துமீறி குடியேறி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் மேச்சல் தரைகளையும் சொந்தக் காணிகளையும் இளக்க வேண்டி ஏற்றபட்டுள்ளது.
இக்காணிகளைப் பாதுகாக்க அப்போது ஆட்சியில் இருந்த கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் பெரும்பான்மை மக்களுக்கு வேலி அமைத்துக் கொடுக்கப்பட்டது.
தற்போது இராணுவ முகாம், கடற்படை முகாம் விரிவாக்கத்திற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டும் அரச, தனியார் காணிகள் உட்பட சுமார் 1600 ஏக்கர் காணிகள் சுவிகரிக்கப்பட இருக்கின்றது.
இந்நிலையில் படுவான்கரையில் உள்ள மக்கள் தங்களது காணிகளைப் பாதுகாக்க வேண்டியவர்களாக இருக்கின்றீர்கள். தங்களது வளம் பொருந்திய காணிகளை துப்பரவு செய்து பயிர்ச்செய்கையில் ஈடுபட வேண்டும்.
போராட்டத்தின் வலியையும் வேதனையையும் இழந்த மக்கள் நீங்கள் அதனுடாக பல கஸ்ரங்களை மாத்திரமன்றி உயிரையும் சொத்துக்களையும் இழந்து நிர்க்கதியான நிலையில் இடம்பெயர்ந்து எந்தவித பொருளாதாரமும் இன்றி மீள்குடியமர்த்தப்பட்ட உங்களுக்கு இந்த அரசாங்கம் எந்தவித நிவாரணங்களையும் வழங்கவில்லை.
உங்களது அயராத முயற்சியினால் மீண்டும் முன்னேறி வருகின்றீர்கள். நீங்கள் உங்களது சொந்தக் காலில் நிற்க வேண்டும்.
எத்தனை யுத்தம் வந்தாலும் அழிக்க முடியாத சொத்து கல்விச் சொத்து மாத்திரமே. அந்த சொத்தை உங்களது பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.
எங்கு சென்றாலும் கல்வி எம்முடனே வரும். செல்வம் அதனை உங்களது பிள்ளைகளுக்கு வழங்குங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.
இரண்டாம் இணைப்பு-
கல்முனை வைத்தியசாலை விவகாரம்!- வைத்திய அத்தியட்சர் இடமாற்றம் உறுதி
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடந்த காலத்தில் ஏற்பட்டுவந்த முறுகல் நிலைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் வகையில் அதன் வைத்திய அத்தியட்சர் இடமாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவித்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா, பதிலாக அங்கு கடமையாற்றும் சிரேஸ்ட அதிகாரி ஒருவரை தற்காலிகமாக நிறைவேற்று கடமை அதிகாரியாக நியமிக்க சுகாதார அமைச்சு உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,
கடந்த பல மாதங்களாக கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுவந்த வைத்திய நிர்வாக சீர்கேடு தொடர்பில் பொதுமக்கள் எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர்.இது தொடர்பில் கடந்தமாதம் இடம்பெற்ற சுகாதார அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.இதன்போது குறித்த வைத்தியசாலையின் நிலை தொடர்பில் நான் அந்த கூட்டத்தில் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன மற்றும் செயலாளர் நிகால் ஜயதிலக ஆகியோரின் கவனத்துக்கு கொண்டுவந்தபோது அது தொடர்பில் விசாரணை செய்வதற்காக குழுவொன்றை வைத்தியசாலைக்கு அனுப்புவதாக உறுதியளித்தார்.
இதனடிப்படையில் இருவாரங்களுக்கு முன்னர் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மகிபால ஹேரத் தலைமையில் சென்ற குழு இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டது.
எனினும் விசாரணைகள் இடம்பெற்றபோதிலும் அதுதொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் நேற்று சுகாதார அமைச்சர் தலைமையில் நடைபெற்ற அமைச்சின் ஆலோசனைக்குழு கூட்டத்தில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து தெரிவித்தேன்.
விசாரணை முடிந்துள்ளதால் மருத்துவ அத்தியட்சரை இடமாற்றம்செய்யவுள்ளதாக தெரிவித்தனர்.எனினும் இதன் காலம் குறித்து நான் கேட்டபோது ஒரு வார காலத்துக்குள் அந்த இடமாற்றத்தை செய்வதாகவும் அதற்கு பதிலாக அங்கு கடமையாற்றும் சிரேஸ்ட வைத்திய அதிகாரி ஒருவரை தற்காலிக நிறைவேற்று கடமை அதிகாரியாக நியமிப்பதாகவும் உறுதியளித்தார்.
இதன்போது குறித்த வைத்தியசாலையின் நிலைமை தொடர்பில் ஆராய்ந்து துரித நடவடிக்கையெடுத்த சுகாதார அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்ததாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten