[ புதன்கிழமை, 08 மே 2013, 12:05.47 PM GMT ]
கொழும்பு பான்ஸ் பிளேஸில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
அரசாங்கத்திற்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடும் அனைவருக்கும் எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படுகின்றது.
அந்த வகையிலேயே வாய்ப் பேச்சால் எச்சரிக்கை விடுத்த அசாத் சாலிக்கும் அது பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அசாத் சாலி ஏற்கனவே முன் பிணை பெற்றிருந்ததால் பிணை கொடுக்க முடியாத பயங்கரவாத தடைச்சட்டத்தை பிரயோகித்து அவரை தற்போது கைது செய்துள்ளனர்.
அரசாங்கம் மக்களை அச்சுறுத்தும் வழியில் செயற்பட்டால் மக்கள் போராட முனைவார்கள் என்று தான் அசாத் சாலி எச்சரிக்கை விடுத்தார்.
இவ்வாறு நாளை எனக்கோ அல்லது உங்களுக்கோ எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பிரயோகிக்கப்படலாம்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு பல ஐ.நா. குழுக்கள் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்தன.
ஆனால் அரசு அவசரகாலச் சட்டத்தை நீக்கிவிட்டு பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு வலுக்கூட்டி அதை அமுல்படுத்தியுள்ளது.
நாட்டில் இடம்பெறும் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாம் எல்லோரும் போராட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கொமன்வெல்த் மாநாடு- பிரிட்டிஷ் மகாராணியாரின் உதாரணத்தைப் பின்பற்றுக!- இந்திய அரசுக்கு திருமாவளவன் வேண்டுகோள்
[ புதன்கிழமை, 08 மே 2013, 01:11.57 PM GMT ]
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதில்லை என பிரிட்டிஷ் மகாராணியார் முடிவு செய்துள்ளார்.
கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு இதுவரை நடைபெற்றுள்ள அனைத்து மாநாடுகளிலும் கலந்துகொண்ட அவர் இலங்கை மாநாட்டைப் புறக்கணித்திருப்பது வரவேற்புக்குரியதாகும். பிரிட்டிஷ் மகாராணியாரின் இந்த அறிவிப்புக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
கொமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ளக்கூடாது என்று பல்வேறு நாடுகளிலும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ள நிலையில் இந்தியா அம்மாநாட்டில் கலந்துகொள்ளக் கூடாது என்று நாம் ஏற்கனவே வலியுறுத்தி வருகிறோம்.
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை அரசியல் கட்சிகளும் இதைக் கூறி வருகின்றன. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அவர்களும், அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் அவர்களும்கூட இந்தக் கோரிக்கையை வழிமொழிந்துள்ளனர்.
இலங்கையில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதென்பது அங்கு நடைபெற்ற இனப்படுகொலையை அங்கீகரிப்பதாகிவிடும்.
அது மட்டுமின்றி, கொமன்வெல்த் நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள அத்தனை நாடுகளும் அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் தலைமையை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவல நிலை ஏற்படும்.
எனவேதான் இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக்கூடாதெனவும் அவ்வாறு நடத்தப்பட்டால் அதில் இந்தியா கலந்துகொள்ளக் கூடாது எனவும் தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டோம் என இந்திய அரசு உடனடியாக அறிவிக்க வேண்டுமென்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
Geen opmerkingen:
Een reactie posten