தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 25 mei 2013

மட்டு.நகர் வாயிலில் புத்தர் சிலை அமைக்க ஏற்பாடு!- தடுத்து நிறுத்துமாறு யோகேஸ்வரன் எம்.பி, பிரதமருக்கு கடிதம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் பதிவு செய்யப்படலாம்?
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 09:34.27 AM GMT ]
எதிர்வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது உள்ளிட்ட விடயங்களில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பில், ரெலோ மற்றும் இலங்கை தமிழரசு கட்சிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளின் இரண்டாம் சுற்று நேற்று இடம்பெற்றதாக  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதன் போது, இந்த விடயங்கள் தொடர்பில் ஏனைய கட்சிகளுடனும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்த இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் எதிர்வரும் ஜுன் மாதம் வவுனியாவில் நடைபெறவுள்ள இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் பின்னர், கட்சிப் பதிவு தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மட்டு.நகர் வாயிலில் புத்தர் சிலை அமைக்க ஏற்பாடு!- தடுத்து நிறுத்துமாறு யோகேஸ்வரன் எம்.பி, பிரதமருக்கு கடிதம்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 08:19.53 AM GMT ]
மட்டக்களப்பு நகரின் முகவாயிலாக விளங்கும் ஊறணி கொத்துக்குளத்து மாரியம்மன் கோயிலை அண்டிய பிரதான வீதியில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளின் பேரில் புத்தர் சிலை வைக்கப்படுவதற்கு ஒழுங்குகள் நடைபெறுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இச்செயற்பாடானது மாவட்டத்திலுள்ள ஏனைய மதத்தினரை மிகவும் வேதனைப்படுத்தியுள்ளது. இது மத முரண்பாட்டை வளர்க்கும் ஒரு செயற்றிட்டாக உள்ளது. பெரும்பான்மையாக இந்துக்களையும், அடுத்து முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் போன்றோரையும் குறைந்த அளவில் பௌத்தர்களையும் கொண்டதாக இம்மாவட்டம் விளங்குகின்றது.
இப்புத்தர் சிலையை வைக்கும் செயற்பாடானது ஏனைய மதங்களை கடைப்பிடிக்கும் மக்களை மிகமிக வேதைனைப்படுத்தியுள்ளது. இந்நாட்டின் மத விவகார அமைச்சர் என்ற வகையிலும், நாட்டின் பிரதம மந்திரி என்ற வகையிலும் இச்செயற்பாட்டை உடன் நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்பாக வேண்டுகின்றேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், மதவிவகார அமைச்சரும் பிரதமருமான தி.மு.ஜயரத்னவுக்கு அவசரமாக அனுப்பிய மகஜரில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மகஜரில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
மட்டக்களப்பு நகரில் மிகவும் குறுகிய அளவே பௌத்தர்கள் உள்ளனர். இவர்களுக்கு இங்கு உள்ள மங்களராம விகாரை வழிபாட்டு தலம் போதுமானது. அதைவிடுத்து இன ரீதியாகவும், மதரீதியாகவும் பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையில் மட்டக்களப்பு மங்களராம விகாரையின் பிக்குவின் வேண்டுகோளை ஏற்று தாங்களும், வீதி அபிவிருத்தி அதிகார சபையும் வழங்கிய அனுமதியின் பிரகாரம் மட்டக்களப்பு நகரின் வாயிலில் புத்தர் சிலையை நிறுவுவது இங்குள்ள பெரும்பான்மை மதத்தினரை அவமதிக்கும் ஒரு செயல் என்பதை தாங்கள் நன்கு அறிவீர்கள் என நான் கருதுகின்றேன்.
எனவே அனைத்து மதங்களையும் வழிபடுத்தும் ஒரு பொறுப்பு வாய்ந்த அமைச்சர் என்ற வகையிலும், இந்நாட்டின் பிரதம மத்திரி என்ற வகையிலும் நீண்டகால அரசியல் அனுபவத்தை கொண்டவர் தாங்கள் என்ற வகையிலும் இச்செற்பாடு ஏனைய மதங்களிடையே எதிர்காலத்தில் எவ்வாறான பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை தாங்கள் உணர்ந்து கொள்ள முடியும் என்பதை நான் கருதுகின்றேன்.
இப்புத்தர் சிலை தாபிப்பு நடவடிக்கையானது வணக்கத்துக்குரிய புத்த பகவானையும் ஏனைய இன மத மக்களையும் அவமதிக்கும் ஒரு செயற்பாடாக உள்ளது.
வரலாற்று ரீதியாக இலங்கைக்கு இரண்டாவது தடவையாக வருகை தந்த கௌதம புத்தர் சமாதானத்தை தமிழ் மக்களிடையே எற்படுத்தினர். (மாணிக்க ஆசன சண்டை) என்பதை பௌத்தர்களின் முக்கிய நூலான மகாவம்சம் எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் இப்புனித புத்த பகவானை ஒரு இனத்துக்கு எதிராகவோ அல்லது ஏனைய மதங்களுக்கு எதிராகவோ பயன்படுத்துவது புத்த தர்மத்துக்கு செய்யும் பாரிய துரோகச் செயற்பாடாகும்.
உண்மையிலே மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மட்டக்களப்பு மங்களராம பிக்கு இதனை ஒரு இனத்துக்கு எதிராகவும், இவ்வேளை ஏனைய மதங்களுக்கு எதிராகவும் திட்டமிட்டே மேற்கொள்கின்றார் என அறியப்படுகின்றது.
எனவே தாங்கள் இப்புத்தர் சிலை தாபிப்புக்கு வழங்கிய அனுமதியை உடன் நிறுத்தி கௌதம புத்தரின் தர்ம உபதேசத்தின் படி பௌத்தர்களையும், அதன் வழிவந்த புத்த பிக்குகளையும் இயக்கச் செய்யுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.
இவ்வாறான திட்டமிட்ட புத்தர் சிலை தாபிப்பு நடவடிக்கை இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களின் மனங்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து மேற்கொள்ளப்படுமானால் நாங்கள் சாத்வீக ரீதியில் எங்களது மத உரிமையின் அடிப்படையில் அகிம்சை போராட்டங்களை நடாத்த வேண்டிய சூழல் உருவாக்கும்.
இச்சூழ்நிலை காரணமாக இவ்வரசாங்கம் மேலும் இந்நாட்டில் பௌத்த மதம் தவிர்ந்த ஏனைய மத மக்களின் உரிமைகளை பறித்து அடிமைகளாக வைத்திருப்பதை இவ்உலகிற்கு எடுத்துக்காட்டுவதாகவே விளங்குகின்றது.
ஆகவே தயவு செய்து மட்டக்களப்பு நகர வாயிலில் புத்தர் சிலையை நிறுவ எடுக்கும் நடவடிக்கையை விரைவாக தடுத்து நிறுத்தி உதவுமாறு மீண்டும் மீண்டும் வேண்டிக் கொள்கின்றேன் என தமது மகஜரில் மேலும் குhttp://news.lankasri.com/show-RUmryFRYNbfsz.htmlறிப்பிட்டுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten