[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:58.09 AM GMT ]
கண்டி பேராதனை வீதியில் அமைந்துள்ள தங்க நகை தொழிற்சாலையிலேயே இக் கொள்ளைச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இரவு 8.00 மணியளவில் இராணுவ சீருடைக்கு சமமான உடையில் துப்பாக்கிகளுடன் வந்த சிலர் அங்கு கஜ முத்துக்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி அங்குள்ளவர்களை அச்சுறுத்தி சோதனை செய்வது போன்று நடித்து அங்கு வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டு கோடி ரூபா தங்கக் கட்டிகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இது தொடர்பாக கண்டி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முள்ளிவாய்க்கால் தமிழினவழிப்பும் சர்வதேச நகர்வும்!
[ வியாழக்கிழமை, 23 மே 2013, 02:22.50 AM GMT ]
ஈழத்தமிழர்கள் 2009 ம் ஆண்டு இலங்கையில் ஒரு பாரிய தமிழ் இனவழிப்பு நடக்கப் போகின்றது என்பதை உலகம் பூராவும் சாலை மறியல்கள் மூலமாகவும், உண்ணாவிரதங்கள் மூலமாகவும், எழுச்சி ஊர்வலங்கள் மூலமாகவும் இந்த சர்வதேசத்திற்கு இடித்துச் சொன்னார்கள்.
குறிப்பாக சுவிஸ் நாட்டில் பணிமுடக்கம் (Strike) என்பது குற்றச்செயல் ஆகும் காரணம் அவர்களது அரசியல் யாப்பிலேயே எழுதி எல்லா மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றது, "நாம் பணிமுடக்கம் செய்யமாட்டோம்" என்று. அப்படியிருந்தும் தமிழ்மக்கள் சாலைமறியல், உண்ணாவிரதம் என்பனவற்றை துணிந்து செய்தார்கள், அதைவிடவும் சட்டத்திற்கு புறம்பான பணிமுடக்கம் செய்ததற்கான தண்டப்பணமும் கட்டினார்கள். காரணம் ஈழத்திலே தமது இனம் அழிக்கப்பட்டுவிடக்கூடாதே என்பதற்காக.
ஆனால் இந்த சர்வதேசம் அதை கண்டுகொள்ளவில்லை. அங்கே ஈழத்திலே ஒரு மாபெரும் இனவழிப்பு ஒட்டுமொத்த சர்வதேசத்தின் அங்கீகாரத்துடன் நிகழ்த்தப்பட்டது. 21 ம் நூற்றாண்டின் மிகப்பெரும் இனவழிப்புப் படுகொலை நிகழ்த்தப்பட்டு நான்கு வருடங்கள் கடந்தும் இன்னும் இனவழிப்பு நிகழ்த்தப்பட்டமைக்கான புதிய புதிய ஆதாரங்கள் வந்துகொண்டு தான் இருக்கின்றது. ஆனாலும் இன்னும் இந்த சர்வதேசம் எம்மினத்திற்கு நீதி வழங்க மறுத்தே வருகின்றது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைச் சபையிலே ஏதோ பல்லாங்குழி ஆடுவது போன்று நான் முந்தி நீ முந்தி என்று உப்புக்குச் சப்பில்லாதை தீர்வுத் திட்டங்களை அமேரிக்கா போன்ற நாடுகள் முன்வைப்பதும் அதை சீனா, கியூபா போன்ற நாடுகள் எதிர்ப்பதும் வருடா வருடம் தொலைக்காட்சி காமெடி ஷோ போன்று நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றது.
சிங்களத்தின் மிகப்பெரிய கெட்டித்தனம் என்னவெனில் "பயங்கரவாதத்தை ஒழித்தல்" என்ற மகுடத்தின் கீழ் தனது யுத்த ஏற்பாட்டை ஆரம்பித்தது.
கூடவே சர்வதேச சமூகத்தையும் நம்பவைத்து ஏற்றுக்கொள்ள வைத்தது. பின்னராக தனது நெடுங்கால இலட்சியமான "தமிழின அழிப்பை" மேற்கொள்ள ஆரம்பித்தது. இன அழிப்பா அல்லது பயங்கரவாத ஒழிப்பா என்ற பதத்தை சர்வதேச சமூகம் பகுத்தாய்ந்து இனம்காண முன்பே இன அழிப்பு நடந்தேறிவிட்டது.
சிங்களத்தின் இந்த தந்திரத்தை சர்வதேசம் புரிந்துகொள்ள முன்னர் எமது தமிழர் சார்ந்த அமைப்புகள் புரிந்துகொள்ளல் அவசியமாகின்றது.
ஈழத் தமிழ்மக்களின் சுயநிர்ணயம் சார்ந்து சிந்திக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புகளும், ஈழத்திலுள்ள வடகிழக்கு தமிழர்கள், மலையக தமிழர்கள், இலங்கையின் பிற இடங்களில் சொரியலாக வாழும் தமிழர்கள், பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் (மலேசியா, இந்தியா, மொரீசியஸ் மற்றும் நாடுகள்) உட்பட அனைவருமாக ஒன்றிணைந்து உலக ஒழுங்கியல்களுக்கு ஏற்றவாறு சுயநிர்ணயம் பெறுவதற்கான, பெற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வுத் திட்டத்தை ஒற்றுமையாக ஏற்படுத்த வேண்டும் என்ற செய்தியை கடந்த முள்ளிவாய்க்கால் அனர்த்தம் கற்றுத்தந்த பாடமாக அமைகின்றது.
'தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்'
தமிழர் நடுவம் சுவிஸ்
Geen opmerkingen:
Een reactie posten