தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

சிவசக்தி ஆனந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை!


இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க மன்மோகன்சிங்கிற்கு ஜெயலலிதா மீண்டும் கடிதம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 06:53.48 AM GMT ]
இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா மீண்டும் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா-இலங்கை இடையே, கடந்த 1974 மற்றும் 1976ம் ஆண்டுகளில் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படி கச்சதீவானது இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையிடமிருந்து கச்சதீவை மீட்க வேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா, தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறார்.
கச்சதீவை மீட்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கிற்கு வலு சேர்க்கும் விதமாக கச்சதீவு குறித்து அனைத்து ஆவணங்களையும் தன் வசம் வைத்துள்ள தமிழக அரசின் வருவாய்த்துறையும் இணைக்கப்பட்டுள்ளது.
மேலும் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்துக் கொடுக்க காரணமான ஒப்பந்தங்களை அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என அறிவிக்கக்கோரியும், 2008ம் ஆண்டு தாக்கல் செய்த மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கச்சதீவை மீட்க வலியுறுத்தி, சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது, தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண கச்சதீவை மீட்பதே ஒரே வழி என அப்போது கூறினார். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் மூலம் பெற்ற வெற்றியைப்போல், கச்சதீவு பிரச்னையில் வெற்றி பெறுவோம் என முதல்வர் சட்டசபையில் பேசினார். மேலும் கச்சதீவை மீட்க வேண்டும் என வலியுறுத்தி ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
இந்நிலையில், கச்சதீவை மீட்க வலியுறுத்தி முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தமிழகத்தின் பாரம்பரிய பகுதியான கச்சதீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சதீவு மற்றும் சுற்றுப் பகுதிகளை இந்தியா தனது ஆளுகைக்குள் கொண்டு வர வேண்டும்.
தமிழக மீனவர்களுக்கு ஏற்படும் வாழ்வாதார பாதிப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். கச்சதீவை மீட்டபிறகு சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு பகுதியை மீண்டும் வரையறை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். மேலும் முதல்வர் தனது கடிதத்துடன், கச்சதீவு தொடர்பாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலையும் இணைத்துள்ளார்.

சிவசக்தி ஆனந்தன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 10:43.26 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கொழும்பில் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று நான்காம் மாடிக்கு அழைக்கப்பட்டு இரண்டு மணி நேரத்துக்கும் அதிகமாக விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டார்.
வவுனியா சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதிகள் அவருக்கு எடுத்த தொலைபேசி அழைப்புக்கள் தொடர்பாகவே அவர் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.

குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு வருமாறு வவுனியா பொலிஸ் நிலையம் ஊடாக அழைப்பாணை அனுப்பப்பட்டதையடுத்தே சிவசத்தி ஆனந்தன் இன்று காலை 10.00 மணிக்கு கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குச் சென்றிருந்தார்.

அவருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் உடன் சென்றிருந்தார்கள்.

காலை 10.00 மணிக்கு ஆரம்பமான விசாரணை 12.15 வரையில் தொடர்ந்ததாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். கடந்த வருடத்தில் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டிருந்த தமிழ்க் கைதிகளிடமிருந்து மீட்கப்பட்ட கைத் தொiலைபேசிகளிலிருந்து பெறப்பட்ட இலக்கங்களின்படி சிவசக்த்தி ஆனந்தனுக்கு அங்கிருந்து பல தொலைபேசி அழைப்புக்கள் வந்ததாகவும், சிவசக்தி ஆனந்தனிடமிருந்து பல அழைப்புக்கள் கைதிகளுக்கு எடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த அதிகாரிகள் அவை தொடர்பாக சிவசக்தி ஆனந்தனிடம் விளக்கம் கேட்டனர். இதன்போது எவ்வாறான விஷயங்கள் பேசப்பட்டன எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்குப் பதிலளித்த ஆனந்தன், தான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதாலும், பல வருடங்களாக குறிப்பிட்ட தொலைபேசியைப் பயன்படுத்துவதாலும் தனது இலக்கம் பலக்குத் தெரியும். அதேவேளையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதால் தனக்கு வரும் அழைப்புக்களுக்கு தான் பதிலளிப்பதாகத் தெரிவித்தார். வவுனியா சிறைச்சாலையில் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து மற்றொரு பாராளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதனுடன் தான் சிறைச்சாலைக்குச் சென்று நிலைமைகளைப் பார்வையிட்டதாகவும் ஆனந்தன் தெரிவித்தார்.

இதனைவிட கைதிகள் தன்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டால், கைதிகளுடைய நலன்கள், வழக்கு விவகாரங்கள் மற்றும் அவர்களுடைய குடும்ப விடயங்கள் தொடர்பாகவே பேசிக்கொள்வதாகவும், அதனைவிட அரசுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பில் பேசிக்கொள்வதில்லை எனவும் சிவசக்தி ஆனந்தன் விளக்கமளித்தார். அதேவேளையில், கைதிகள் சிலர் தொடர்பு கொள்ளும் போது அவர்களது தொலைபேசியில் பணம் இல்லாத நிலையில் தொடர்பு துண்டிக்கப்பட்டால், அவர்களுக்கு தான் மனிதாபிமான அடிப்படையில் அழைப்பு எடுப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten