[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 11:17.43 AM GMT ]
இதன் பிரகாரம் இன்று அரச ஊழியர்கள் எவரும் வடக்கில் லீவு பெற தடைவிதிக்கப்பட்டு உள்ளது.
அத்துடன் இன்று கடமைக்கு சமூகமளித்துள்ள பணியாளர்களது வரவு பட்டியல்கள் மூன்று தடைவைகளாக தனது கவனத்திற்கு கொண்டுவரப்பட வேண்டுமெனவும் அவர் அதிகாரிகளுக்கு பணித்துள்ளதாக தெரியவருகின்றது.
முன்னதாக நேற்று ஆளுநர் சந்திரசிறியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகாளல் அதிர்ச்சியுற்ற அதிகாரிகள் அத்தகவல்களை தமக்கு கீழுள்ள பணியாளர்களுக்கு அறிவித்ததுடன் லீவு விண்ணப்பங்கள் அனைத்தையும் நிராகரித்து;ளளனர்.
இதனிடையே வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்போரை ஒடுக்க அனுமதிக்கப்பட மாட்டாது என சட்டத்தரணிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
அப்போராட்டத்தில் கலந்து கொள்வோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கு சட்ட ஆலோசனை வழங்கப்படும். போராட்டங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டால் அவர்களுக்கு ஆதரவாக இலவசமாக குரல் கொடுக்கத் தயார் எனவும் அவ்வமைப்பு அறிவித்துள்ளது.
அரசாங்கம் போலிப் பிரச்சாரங்களை செய்த போதிலும் இன்று நடைபெறவுள்ள வேலை நிறுத்தப் போராட்டம் அரசியல் அமைப்பிற்கு அமைவாகவே நடத்தப்படுகின்றது. இதனை எந்த வகையிலும் சட்டவிரோதமான போராட்டமாக கருதப்பட முடியாது.
போராட்டத்தில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால் இலவச அடிப்படையில் நீதிமன்றில் ஆஜராகி அவர்களுக்காக குரல் கொடுக்க தயங்கப் போவதில்லை என சட்டத்தரணிகள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
கிழக்கு மாகாணசபை அமர்வை பிற்போட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சியினா் போராட்டம்!
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 11:23.41 AM GMT ]
இன்று செவ்வாய்க்கிழமை காலை சபை அமர்வு தவிசாளர் ஆரியவதி கலபதி தலைமையில் ஆரம்பமானபோது எதுவித காரணமும் இன்று சபை அமர்வை அடுத்தமாதம் 18ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
எதுவித காரணமும் இன்றி தன்னிச்சையாக தவிசாளர் மேற்கொண்ட அடாவடித்தன நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்தார்.
இந்த போராட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் கலந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.
இன்று மாகாணசபை அமர்வில் மீள்குடியேற்றம்,மின்சார கட்டணம் அதிகரிப்பு உட்பட பல தனி நபர் பிரேரணைகள் சபையில் சமர்ப்பிக்கப்படவிருந்த நிலையில் திட்டமிட்டவகையில் சபை பிற்போடப்பட்டுள்ளதாகவும் மாகாணசபை உறுப்பினர் தெரிவித்தார்.
தவிசாளர் ஆளும் தரப்பு கூட்டத்தை கூட்டி அவர்களுக்கிடையே கலந்தாலோசித்து தன்னிச்சையாக இந்த முடிவை அவர்கள் எடுத்துள்ளதாகவும், இதனை தமது கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என தெரிவித்த அவர், இது தொடர்பில் தொடர்ச்சியாக போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten