தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 24 mei 2013

அகதிகளை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய மூவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு


சர்வதேச அழுத்தத்தின் வெளிப்பாடே வடக்கு மாகாண சபைத் தேர்தல்
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:36.23 AM GMT ] [ valampurii.com ]
வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் நடக்குமா? என்ற சந்தேகம் தேவையற்றதாகி விட்டது. வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தியாக வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஜனாதிபதி விலக முடியாது என்பது உறுதியாகியுள்ளது.
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம், முதல் தடவையில் வெற்றயடைந்த போது இலங்கை அரசு அதனை அலட்சியம் செய்தது. மீண்டும் இரண்டாவது தடவையாகவும் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கவனம் செலுத்தாதது போல் இலங்கை அரசு காட்டிக் கொண்டாலும், தீர்மானம் தொடர்பில் உதாசீனப் போக்கைக் கடைப்பிடிப்பது ஆபத்தானது என்பதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­  தலைமையிலான அரசாங்கம் உணர்ந்துள்ளதென்பதை ஏற்றுத் தான் ஆகவேண்டும்.

மூன்றாவது தடவையாகவும் இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஜெனிவாவுக்குக் கொண்டு செல்லப்படும் அளவில் அரசு நடந்து கொள்ளக் கூடாதென்பது அரசுக்கு ஆலோசனை வழங்கும் இராஜதந்திரிகளின் எச்சரிக்கை. ஆக, ஜெனிவாத் தீர்மானமும் இந்தியாவின் அறிவுரைகளும் சேர்ந்து வடக்கு மாகாணசபைக்கான தேர்தலை நடத்தப் போகின்றது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்திவிட்டால், சர்வதேசத்தின் பலமான அழுத்தங்களில் இருந்து ஓரளவுக்கு விடுதலை பெற முடியும் என்று அரசு நம்புகின்றது.
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை நடத்துவது தமிழர்களுக்குத் தனி நாடு வழங்குவதற்குச் சமமானது என இனவாதக் கட்சிகள் சீற்றம் கொண்டாலும் அதுபற்றி அரசு அலட்டிக் கொள்ளாது என்பது திண்ணம்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச­வின் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர் விமல் வீரவன்ச, வடக்கு மாகாண சபைத் தேர்தலைக் கடுமையாக எதிர்க்கிறார். இந்த எதிர்ப்புப்பற்றி ஜனாதிபதிக்கு முன் கூட்டித் தெரியாததல்ல.
அமைச்சர் விமல் வீரவன்சவின் இந்த எதிர்ப்புக்களைச் சுட்டிக்காட்டி காணி, பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாதென ஜனாதிபதி இந்தியாவுக்கும் இதர நாடுகளுக்கும் கூறப் போகிறார்.
அதேநேரம் 13வது திருத்தச் சட்டமூலத்தை நீக்க அனுமதியோம் என அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண போன்றவர்களின் அதட்டல், பொதுபல சேனாவின் வெருட்டல்களுக்கான எதிர்ப்பு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது.

ஆக, அவர்களையும் இவர்களையும் உசுப்பேற்றி வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்துவதும் அதற்கான அதிகாரங்களை வழங்க மறுப்பதுமான திட்டத்தை அரங்கேற்றுவதற்கான ஒத்திகைகளே இப்போது நடந்து கொண்டிருக்கின்றன.
அகதிகளை அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக ஏமாற்றிய மூவரைத் தேடி பொலிஸார் வலைவீச்சு
[ வெள்ளிக்கிழமை, 24 மே 2013, 06:58.17 AM GMT ]
இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய மூன்று பேரை பொலிஸார் தேடிவருகின்றனர்.
கோவை மாவட்டத்தின் குனியமுத்தூர் அருகே வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டுக்கு நேற்று முன்தினம் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட ஏழு பேர் வந்தனர். குனியமுத்தூர் பொலிஸார் அய்யப்பன் வீட்டில் தங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர் இருவர் தப்பியோடினர்.
தர்மபுரி மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சங்கர், ரத்தினராஜ், ஹுசூர் முகாமை சேர்ந்த காந்தகுமார், திருச்சி முகாமை சேர்ந்த நாகதீபன் மற்றும் மதுரை முகாமை சேர்ந்த ரமணன் ஆகியோரே பொலிஸாரிடம் பிடிபட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தப்பியோடியவர்கள் தயா மற்றும் முரளி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பியோடிய இருவரும் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இத்தொகையை சென்னை, வேளச்சேரியை சேர்ந்த கவிஞன் என்பவரிடம் கொடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல, தயா மற்றும் முரளியை கோவைக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். அப்போதுதான், பொலிஸாரிடம் சிக்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து பேரும் நேற்று மாலை கியூ பிராஞ்ச் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தப்பியோடிய தயா, முரளி மற்றும் பணம் வாங்கிய கவிஞன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து தேடி வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Geen opmerkingen:

Een reactie posten