[ புதன்கிழமை, 22 மே 2013, 01:46.58 AM GMT ]
தமக்கு சொந்தமான 6381 ஏக்கருக்கு கூடுதலான் பாரம்பரிய தனியார் நிலங்களை சுவீகரிக்க அரசாங்கம் எடுக்கு நடவடிக்கைகளை எதிர்த்தே கடந்த 15 ஆம் திகதி புதன்கிழமை இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய நியாயமான அரசியல் தீர்வொன்றையே தமிழ் மக்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் எதிர்பார்த்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா. சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அந்த மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நீதியரசர் கே. ஸ்ரீஸ்கந்தராஜா முன்னிலையில் நேற்று ஆராயப்பட்டன.
1474 ரிட் மனுக்களையும் ஏற்கவேண்டும் என்பதற்கான ஆதாரங்களை மே மாதம் 27 ஆம் திகதி முன்வைக்குமாறு பணித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் அன்றைய தினத்திற்கே வழக்கையும் ஒத்திவைத்தது.
சட்டப்படி உயர்பாதுகாப்பு வலயம் என ஒன்றும் இல்லை என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் முடிவடைந்து தாம் தமது காணிகளுக்கு சென்ற சமயம் இராணுவத்தினரால் தாம் தடுக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டதாகவும் மனுதாரர்கள் தங்களுடைய மனுக்களில் குறிப்பிட்டுள்ளனர்.
வலிகாமம் வடக்கு,வலிகாமம் கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள காங்கேசன்துறை மேற்கு மற்றும் மத்தி, வீமன்காமம் தெற்கு, தையிட்டி தெற்கு, பலாலி தெற்கு, ஒட்டகப்புலம், வளலாய் ஆகிய கிராமங்களே சுவீகரிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இப்பிரதேசத்தின் ஒரு அதி உயர் பாதுகாப்பு வலயம் என எப்போதும் பிரகடனம் செய்யப்படவில்லை என்பதோடு 2011ஆம் ஆண்டு அவசர கால சட்டம் நீக்கப்பட்ட நிலையில் தற்போது இப்பிரதேசத்தை அதி பாதுகாப்பு வலயம் என பிரகடனப்படுத்துவதற்கோ அல்லது ஏனைய பொது தேவைகளுக்காக இதை சுவீகரிப்பதற்கான எந்த சட்ட அடிப்படையும் கிடையாது' என்பதை மனுதாரார்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் நாட்களில் மேலும் 2,000 பேர் இதே போன்ற மனுகை;களை தாக்கல் செய்யவுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது
சகலருக்கும் ஏற்றவகையில் அரசியலமைப்பை மாற்ற வேண்டும்! இரா.சம்பந்தன்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 08:00.18 PM GMT ]
நீண்ட காலம் நிலைத்திருக்கக் கூடிய அரசியல் தீர்வொன்றை வழங்கும் வகையில் அரசாங்கம் தனது செயற் பாடுகளை மாற்றியமைக்கும் என நம்புவதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் வகைப் பொறுப்புக் கூறல் ஆகியவற்றை கட்டியெழுப்புதல் பற்றிய தீர்மானம் தொடர்பாக 2013 ஏப்ரல் 9 ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோர் கூறிய கருத்துக்கள் தொடர்பில் ஒத்திவைப்புப் பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றும் போதே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
தொடர்ந்தும் உரையாற்றிய இரா. சம்பந்தன்,
நீண்டகாலம் சமாதானம் நிலைத்திருப்பதற்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான அரசியல் தீர்வே பொருத்தமானதாக இருக்கும் இவ்வாறான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு அரசாங்கம் தனது நிலைப்பாடுகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொள்ளும் என நாம் எதிர்பார்க்கின்றோம். தமிழ், முஸ்லிம், சிங்களம் என பல் இனங்களைக் கொண்ட இலங்கையில் சிறுபான்மையினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் வகையில் அரசியலமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தமிழர்களுக்கு என தனியான அடையாளம் உள்ளது. அதேபோன்று சிங்கள மக்களுக்கும் தனியான அடையாளம் உள்ளது.
எனினும், சுதந்திரத்தின் பின்னர் தமிழ் மக்கள் இந்நாட்டின் பிரஜைகள் போல சமமாக நடத்தப்படவில்லை இரண்டாம் பட்ச பிரஜைகளாகவே நடத்தப்பட்டனர்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கையில் அடங்கியுள்ள ஆக்கபூர்வமான பரிந்துரைகள் மனித உரிமைகள் சபையின் தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. காணாமல் போதல்கள் மற்றும் நீதிக்குப் புறம்பான கொலைகள் பற்றிய விசாரணைகள் நம்பத்தகுந்த வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இதுமட்டுமன்றி வடக்கு கிழக்கு மக்களின் காணிப் பிரச்சினைகள், மாகாணங்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பில் அரசியல் தீர்வு, அவசியம் போன்ற காரணங்களுக்காகவே இந்த ஒத்திவைப்புப் பிரேரணையை நான் முன்வைக்கின்றேன்.
வடக்கு கிழக்கு காணி தொடர்பான தற்போது நடவடிக்கைகள் உடனடியாக மாற்ற அரசு விரைந்து செயற்படுவதுடன், மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த பயனுறுதி மிக்க நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என நாம் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten