தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

13வது திருத்தம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை! செப்டம்பரில் வடக்கு தேர்தல்!- அரசாங்கம்


இலங்கைக்கு சொந்தமான கச்சத்தீவு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட முடியாது: அனுராக் ஜி டப்ளியாள்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:42.20 AM GMT ]
அதிநவீன கருவிகள் மற்றும் நவீன தொலை தொடர்பு சாதனங்களுடன் கூடிய புதிய ரோந்து கப்பல் வைபவ் இந்திய கடலோர காவல் படையில் இணைக்கப்பட்டுள்ளதாக வைஸ் அட்மிரல் அனுராக் ஜி டப்ளியாள் தெரிவித்துள்ளார்.
புதியதாக இணைக்கப்பட்ட வைபவ் ரோந்து கப்பலானது தேடுதல் மற்றும் மீட்புப்பணியில் முக்கிய கவனம் செலுத்தும், இந்த கப்பல் தடைகள் எதுவும் இன்றி, அதாவது அனைத்து வகையான காலநிலைகளிலும் ரோந்து செல்லும் வகையில் நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தற்போது 11 ரோந்து கப்பல்கள் கிழக்கு மற்றும் மேற்கு, அந்தமான் தீவுப்பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண்டுள்ளன.
இலங்கை கடற்படையினரால், இந்திய மீனவர்கள் தாக்கபப்டுவது குறித்து இலங்கை கடலோர காவல்படை மற்றும் இலங்கை கடற்படையினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
தவறுதலாக எல்லை தாண்டும் இந்திய மீனவர்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடத்தப்படாத வண்ணம் அவர்களை மீட்டு இந்திய கடலோர காவல்படையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கச்சத்தீவு பகுதியில் இந்திய கடலோர காவல்படையோ, அல்லது கடற்படையோ ரோந்து பணியில் ஈடுபட முடியாது. ஏனெனில் அது இலங்கைக்கு உட்பட்ட பகுதியாகும் என வைஸ் அட்மிரல் அனுராக் ஜி டப்ளியாள் தெரிவித்தார்.

13வது திருத்தம் தொடர்பில் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை! செப்டம்பரில் வடக்கு தேர்தல்!- அரசாங்கம்
[ புதன்கிழமை, 22 மே 2013, 04:14.48 AM GMT ]
வடமாகாணத்துக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். அதில் எந்தவித மாற்றமும் கிடையாது. 13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருக்கின்ற போதிலும் அதிகுறித்து அலட்டிக் கொள்ளத் தேவையில்லை என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இவ்விவகாரம் தொடா்பாக தேவைப்பட்ட நேரத்தில் அரசாங்கம் உரிய முடிவுகளை மேற்கொள்ளும் என்று வெளிவிவகார அமைச்சர் பேராசியர் ஜீ.எல்.பீரிஸ் நேற்று சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஐ.நா. அறிக்கை மற்றும் வடக்கு, கிழக்கின் காணி விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணைக்கு பதிலளித்து பேசுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் பீரிஸ் இங்கு மேலும் கூறுகையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கொண்டுவந்துள்ள பிரேரணையை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இங்கு சுட்டிக்காட்டப்படுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தையோ தருஸ்மன் அறிக்கையையோ எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.
ஏனெனில் அவை அந்தந்த நாடுகளின் அரசியல் தேவைகளுக்காக கருதப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளதாக அமைந்துள்ளன. ஆதனாலேயேதான் அதனை ஏற்றுக்கொள்ள முடியாதென கூறுகின்றேன்.
இந்த நாட்டில் பிறந்த நாம் வெளிநாட்டவரின் அறிக்கைகளுக்கு ஒருபோதும் அடிபணியத் தேவையும் இல்லை. அடிபணியவும் மாட்டோம்.
கடந்த வருடம் எமது நாட்டிற்கு எதிராக ஐ.நா.வில் அறிக்கை கொண்டுவரப்பட்டது.
சர்வதேசத்தின் அழுத்தத்தின் ஊடாக அரசாங்கத்தை அழித்து அதனூடாக அதிகாரத்தை கைப்பற்றி விடலாம் என்று ஐ.தே.க. நினைக்கக்கூடாது. அவ்வாறு ஒருபோதும் இடம்பெறப் போவதில்லை. அரசியல் அமைப்பில் திருத்தம் தேவையெனில் அது பாராளுமன்றத்தின் ஊடாகவே இடம்பெற வேண்டும்.
கூட்டு அரசாங்கம் என்ற ரீதியில் அரசாங்கத்துக்குள் பல்வேறு அரசியல் கட்சிகள் இணைந்திருந்திருக்கின்றன. அத்ததைய கட்சிகள் தமது கட்சிகள் முன்வைப்பதற்கான ஜனநாயக உரிமை இருகிக்கின்றது.
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. ஒருசாரார் இதனை இல்லாதொழிக்க வேண்டுமென்றும், மறுசாரார் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள இச்சட்டத்தை அவ்வாறு இல்லாதொழிக்க முடியாதென்றும் மற்றுமொரு சாரார் 13வது திருத்தத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
எனினும் இது குறித்து நாம் அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. இவ்விவகாரம் தொடா்பாக தேவைப்பட்ட நேரத்தில் அரசாங்கம் உரிய முடிவுகளை மேற்கொள்ளும்.
வடமாகாண சபைக்கான தேர்தல் குறித்து இங்கு கேள்விகள் எழுப்பப்பட்டன. வடமாகாகாண சபைக்கான தேர்தல் திட்டமிட்டவாறு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறும். இதில் எந்தமாற்றமும் கிடையாது. ஜனாதிபதியும் இது குறித்து அறிவித்துள்ளார். என்றாா்.

Geen opmerkingen:

Een reactie posten