தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 23 mei 2013

கள்ளநோட்டுக் குழுவுக்கும் புலிகளுக்கும் தொடர்பு: தமிழகப் பொலிசார் !

ஈரோட்டில் மதுபானக் கடையில் கள்ளநோட்டு மாற்றிய குற்றவாளிகளுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஈரோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள வீரபத்திர வீதியில் உள்ள அரசு மதுபான கடைக்கு2 பேர் மது குடிக்க சென்றனர். பின்னர் அவர்கள் இந்திய ரூ.500 நோட்டு கொடுத்து மதுபானம் வாங்கி கொண்டு பாரில் அமர்ந்து குடித்தனர். அப்போது மதுக்கடை விற்பனையாளருக்கு அவர்கள் கொடுத்த ரூ.500 நோட்டு கள்ளநோட்டு போல இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து விற்பனையாளர் வீரப்பன் சத்திரம் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் சம்பவ இடம் விரைந்து வந்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார். இதில் பிடிபட்டவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் முதல்நாடு பகுதியை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 46). திருவண்ணாமலை மாவட்டம் பாப்பம்பட்டி பவித்ரம் பகுதியை சேர்ந்த ராஜீவ்காந்தி (28) என்பதும், அவர்கள் கள்ளநோட்டு வைத்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பொலிஸார் 2 பேரையும் கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த 100 ரூபாய் கள்ள நோட்டுகள் 48, 500 ரூபாய் நோட்டுகள் 7 ஆகியவற்றை கைப்பற்றப்பட்டன. கைதான ராஜீவ்காந்தி பெருந்துறையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் கடந்த சில வாரங்குளுக்கு முன்பு அவர் அங்குள்ள ஒரு மதுக்கடையில் மது குடிக்க சென்றபோது முத்துராமலிங்கத்துடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். இந்த கள்ள நோட்டுகள் எங்கிருந்து வந்தது என்று விசாரித்தபோது பெருந்துறையில் உள்ள செல்வராஜ் என்பவரிடம் இருந்து வாங்கியதாக முத்துராமலிங்கம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து பொலிஸார் அவர் சொன்ன முகவரியில் செல்வராஜை சென்று தேடிபார்த்தனர். ஆனால் அது போலி முகவரி என்பது தெரியவந்தது. இதற்கிடையே முத்து ராமலிங்கம் பற்றி விசாரணை நடத்தியபோது திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. 

கடந்த 2007 ஆம் ஆண்டு முத்துராமலிங்கம் மீது விடுதலைப் புலிகளுக்கு பொருட்கள் கடத்தியதாக ராமநாதபுரம் கியூ பிரிவு பொலிஸார் கைது செய்தனர். அதன்பின்னர் பிணையில் வந்த அவர் தற்போது கள்ளநோட்டு வழக்கில் சிக்கியுள்ளார். எனவே இவரே ஈரோட்டில் கள்ள நோட்டுகளை புழக்கத்தில் விட்டு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். எனவே அவரை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கள்ள நோட்டு வழக்கில் முத்துராமலிங்கம் கைதான தகவல் அறிந்து கோவை சிபிசிஐடி பொலிஸாரும் ஈரோடு வந்து விசாரணை நடத்தி சென்றனர். அடைதுக்கும் புலிகளுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ப்பீர்கள். தமிழ் நாடு பொலிசாருக்கும், சிங்கள இராணுவத்துக்கும் ஒரே ஒரு சொறி வருத்தம் இருக்கிறது. அது என்னவென்றால் தடக்கி விழுந்தாலும் அதற்கு காரணம் புலிகள் தான் என்று சொல்வது. தச்சு தவறி செருப்பு அறுந்தால் கூட அதுவும் புலிகளின் திட்டமிட்டசெயல் என்று தான் இவர்கள் கூறுவார்கள் !

Geen opmerkingen:

Een reactie posten