தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 22 mei 2013

இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்


சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு கோரிக்கை
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 04:16.20 AM GMT ]
சவூதி அரேபியாவில் சட்டவிரோதமான முறையில் தங்கியிருக்கும் இலங்கையர்களை நாடு திரும்புமாறு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் டிலான் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
சவூதி அரேபியாவில் கடமையாற்றும் 5000 தொடக்கம் 6000 வரையான இலங்கையர்கள் நாடு திரும்பமுடியாத நிலையில் உள்ளனர். இவர்கள் அவ் அரசாங்கம் அறிவித்துள்ள பொது மன்னிப்பு காலத்தை சாதகமாக பயன்படுத்தி, நாடு திரும்ப வேண்டும் என கோரிக்கையை விடுத்துள்ளார்.
ஜூலை மாதம் 3ஆம் திகதிவரை சவூதியில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை வெளியேறுமாறு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்காலத்திற்கு பின்னதாகவும் சட்டவிரோதமான முறையில் அந்நாட்டில் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் இரண்டு வருட சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என சவூதி அரேபிய சட்டம் கூறுவதாக டிலான் பெரேரா குறிப்பிட்டார்.
சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் நாடு திரும்பும் முகமாக சவுதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதுவராலயம் 24 மணிநேரமும் தனது சேவையை வழங்குவதாக அமைச்சர் கூறினார்.
இந்நிலையில் சவூதியிலுள்ள இலங்கையர்கள் 400 பேர் நாடு திரும்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக்கு தொடர்ந்தும் நிதி உதவிகள் வழங்கப்படும்: ஐரோப்பிய ஒன்றியம்
[ செவ்வாய்க்கிழமை, 21 மே 2013, 05:22.48 AM GMT ]
இலங்கைக்கு தொடர்ச்சியாக நிதி உதவிகள் வழங்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டைப் போன்றே நிதி உதவிகள் வழங்கப்பட உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இலங்கைப் பிரதிநிதி பெர்னாட் செவாஜ் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கைக்கு 587 மில்லியன் யூரோ நிதி உதவிகளை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி உதவிகளாக இந்த உதவிகள் வழங்கப்படவுள்ளது.
இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு சிறந்த சாத்தியங்கள் காணப்படுவதாகத் அவர் தெரிவித்துள்ளார்.
நிதி வழங்கப்படவுள்ளதாக தெரிவித்த போதும், எவ்வளவு நிதி என்பது தொடர்பில் தெரிவிக்கப்படவில்லை.

Geen opmerkingen:

Een reactie posten