யுவதி ஆறாவது மாடியிலிருந்து தள்ளப்படுவதற்கு முன் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார்: சட்ட வைத்திய அதிகாரி
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:28.07 PM GMT ]
நீர்கொழும்பு மேல்நீதிமன்றில் நேற்று திங்கட்;கிழமை இடம்பெற்ற வழக்கு விசாரணையின் போது சாட்சியமளிக்கையிலேயே ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மேற்கண்டவாறு சாட்சியமளித்தார்.
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிவிபத்தில் இராணுவ சிப்பாய்கள் 6பேர் படுகாயமடைந்துள்ளதாக இராணுவம் இன்று தெரிவித்திருப்பதுடன், ஒரு படைச்சிப்பாய் படுகாயமடைந்த நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அவர் அங்கு மேலும் சாட்சியமளிக்கையில் தெரிவித்ததாவது,
கொலை செய்யப்பட்ட யுவதியின் உடலில் 67 காயங்கள் இருந்தன. அவரது கழுத்து நெரிக்கப்பட்ட விரல் அடையாளங்களும் காணப்பட்டன.
யுவதியின் உள்ளாடையில் 20 சென்ரி மீற்றர் நீளமான இரத்தக் கறை காணப்பட்டது.
அத்துடன் யுவதியின் உள்ளாடை அவரது உடம்பில் காணப்படவில்லை. அத்துடன் அவரது முதுகுப் பகுதியில் சிராய்ப்புக் காயங்களும் இருந்தன.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் கடமை புரிந்து வந்த சமிளா திசாநாயக்க என்ற 23 வயதுடைய இளம் யுவதியே கொலை செய்யப்பட்டவராவார்.
இச்சம்பவம் தொடர்பில் வைத்தியரான இந்திக சுதர்சனபாலகே ஜயதிஸ்ஸ என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிச்சைக்காக வந்த யுவதியை சந்தேக நபரான வைத்தியர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய பின்னர், வைத்தியசாலையின் ஆறாவது மாடியிலிருந்து கீழே தள்ளி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரிலேயே வைத்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முல்லைத்தீவு-ஒட்டுசுட்டான் இராணுவ முகாமில் வெடிவிபத்து! 6 படைச் சிப்பாய்கள் படுகாயம்
[ செவ்வாய்க்கிழமை, 07 மே 2013, 12:38.17 PM GMT ]
குறித்த முகாமில் படையினருக்கான பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் குண்டு வெடித்துள்ளதாகவும், இதில் உரிய பாதுகாப்பு வசதிகள் முற்கூட்டியே செய்யப்பட்டிருந்த நிலையில் உயிரிழப்புக்கள் தவிர்க்கப்பட்டிருப்பதாகவும் இராணுவம் மேலும் கூறியுள்ளது.
எனினும் இந்த வெடிப்புச் சம்பவம் இராணுவ முகாமில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த படைச்சிப்பாய் ஒருவரின் கைக்குண்டு வெடித்ததினால் ஏற்பட்டதெனவும், இது திட்டமிட்டதாக இருக்கலாமா என்ற கோணத்தில் இராணுவம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் மற்றொரு உறுதிப்படுத்தப்படாத தகவல் தெரிவிக்கின்றது.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினரின் தற்கொலைகள் மற்றும் தற்கொலை முயற்சிகள் அண்மைக்காலத்தில் அதிகரித்திருக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
2ம் இணைப்பு
புலிகளின் பதுங்கு குழியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் 6 இராணுவத்தினருக்கு காயம்
முல்லைத்தீவு உடையார்கட்டுகுளம் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு உடையார்கட்டுகுளம் காட்டுப்பகுதியில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவமொன்றில் ஆறு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் ஐந்து பேர் சிகிச்சைக்காக முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றுமொரு இராணுவ வீரர் சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பபி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
புலிகளின் பதுங்கு குழிகளை இராணுவத்தினர் துப்பரவு செய்து கொண்டிருந்த போதே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தொடர்பட்ட செய்தி: முல்லைத்தீவில் சூட்டுக் காயங்களுடன் இராணுவச் சிப்பாயின் சடலம் மீட்பு
Geen opmerkingen:
Een reactie posten