தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

Dr கருணாநிதியைக் கடத்திய ஜெயாவின் பொலிஸ்! உண்மை நிலவரம்!


Dr கருணாநிதியைக் கடத்திய ஜெயாவின் பொலிஸ்! உண்மை நிலவரம்

கருணாநிதிக்கு மட்டுமல்ல, கருணாநிதி என்று பெயரை வைத்திருப்பவர்களுக்கே சிக்கல்தான் போல”
”தினத்தந்தி பத்திரிகை அதிபர் சிவந்தி ஆதித்தன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை நந்தனத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த 27-ம் தேதி, சிவந்தி ஆதித்தனை நேரில் பார்த்து நலம் விசாரிப்பதற்காக, முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
இதற்கு மறுநாள் அந்த மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் ஒருவரை போலீஸார் தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து நெருக்கடி கொடுத்தனராம்!”
”அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”
‘முதல்வருடன் அவரது பாதுகாப்பு அதிகாரிகளும் உள்ளே வந்தனர். ‘இது ஐ.சி.யு. வார்டு. உங்கள் செப்பல் மற்றும் ஷூவை கழற்றிவிட்டு உள்ளே செல்லுங்கள்.
இன்ஃபெக்ஷன் ஆகிவிடும்’ என்று, அந்த மருத்துவர் சொன்னார். அதற்குள், முதல்வர் அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டார். பாதுகாப்பு அதிகாரிகள் செல்ல முயன்றபோது, அவர்களைத் தடுத்து ஷூவைக் கழற்றிவிட்டுச் செல்லுங்கள் என்று வற்புறுத்தியுள்ளார். இதில் சின்ன வாக்குவாதம். பாதுகாப்பு அதிகாரிகள் உடன் வராததை அடுத்து, வார்டுக்குள் சென்ற முதல்வர் திரும்பி வந்து, என்னவென்று விசாரித்துள்ளார்.
அதன்பிறகு, சந்திப்பை நிகழ்த்திவிட்டு அனைவரும் சென்றுவிட்டனர். அதற்கு மறுநாள் அதாவது 28-ம் தேதிதான் அந்த மருத்துவருக்கு ஏழரை ஆரம்பமானது’ என்கிறார்கள். இந்த மருத்துவரின் பெயர் கருணாநிதி!”
”வேறு வினை வேண்டுமா என்ன?”
”அன்று மாலை 3 மணிக்கு அப்போலோ மருத்துவமனைக்குச் சென்ற போலீஸார், மருத்துவர் கருணாநிதியை சத்தம் இல்லாமல் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்துவிட்டனர்.
இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம்கூட முறைப்படி அவர்கள் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லையாம். அப்படி அழைத்து வந்த கருணாநிதி மீது, காவல் துறை அதிகாரிகளைப் பணிசெய்யவிடாமல் தடுத்ததாகக் குற்றம்சாட்டி வழக்குப் பதிவுசெய்து, அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாலை 5 மணிக்குள் புழல் சிறைக்கு அனுப்பிவிட்டனர்.
இந்த விவகாரம் மருத்துவர் கருணாநிதியின் குடும்பத்தினருக்கோ, மருத்துவமனை நிர்வாகத்துக்கோ, தெரியப்படுத்தப்படவில்லை. போலீஸ் தரப்பிலோ, கருணாநிதியின் குடும்பத்துக்குத் தந்தி அனுப்பி​விட்டதாகச் சொல்கிறார்கள்.
கருணாநிதியைக் காணவில்லை என்று பதறிய மருத்துவமனை நிர்​வாகிகள்,
மருத்துவமனையில் இருக்கும் சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகளைப் போட்டுப் பார்த்தே, அவரை போலீஸ்காரர்கள் அழைத்துச் சென்ற விவரத்தைத் தெரிந்து​கொண்டனர். இதையடுத்து, கருணாநிதியின் குடும்பத்தினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் உடனடியாக வழக்கறிஞரைப் பிடித்து ஜாமின் மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஜாமின் பெற்று, அந்த உத்தரவு புழல் சிறை நிர்வாகத்துக்குச் செல்வதற்கே, அன்று இரவு மணி 9.30 ஆகிவிட்டது. இதையடுத்து, 29-ம் தேதி மதியம் 1 மணிக்கு மேல்தான் டாக்டர் கருணாநிதி விடுவிக்கப்பட்டுள்ளார்.”
”அடக் கொடுமையே…”
”டாக்டர் கருணாநிதியின் வழக்கறிஞர் தூயமணி என்பவர் இந்தச் சம்பவங்களைக் குறிப்​பிட்டு, டி.ஜி.பி-யிடம் இப்போது ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், ‘இத்தனை பரபரப்பான நகரில், ஒரு பிரபலமான மருத்துவமனையில் இருந்து, ஒரு மருத்துவரை யாருக்கும் தகவல் சொல்லாமல், காவல் துறை அழைத்துச் சென்றது கடத்தல் சம்பவம் போன்றது.
தகவல் தொடர்பு அசுர வளர்ச்சி அடைந்துள்ள இந்தக் காலத்தில், ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் மருத்துவர் கருணாநிதியின் வீட்டுக்குத் தந்தி கொடுத்தோம் என்று போலீஸ் சொல்வது ஏமாற்று வேலை.
இந்த சட்ட விரோதக் காரியத்தில் ஈடுபட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்ப்போம்!

Geen opmerkingen:

Een reactie posten