[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 10:29.47 AM GMT ] [ விகடன் ]
2007-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையில் தூக்குத் தண்டனைக்கு எதிராக ஒரு தீர்மானம் வந்தபோது, அதை ஆதரித்து 104 நாடுகள் கையெழுத்திட்டன. எதிர்த்துக் கையெழுத்திட்ட 39 நாடுகளில் இந்திய அரசும் ஒன்று.
மே 18ற்கு பிறகு இலங்கைத்தீவில் ஒரு ஆயுதப் போராட்டம் சாத்தியமில்லை என்ற நிலை பலதரப்பாலும் தெளிவாக உணரப்பட்டது. குறிப்பாக சம்பந்தபட்ட தரப்பான தமிழ் மக்கள், அதுவும் தாயகத்திலிருந்த மக்கள் கனவில் கூட இப்படியான எண்ணம் வராமல் பார்த்துக் கொண்டார்கள். எனென்றால் நாம் வீழ்ந்து போன விதம் அப்படி.
இந்திய அரசுக்கு எதிராகப் போர் தொடுத்தல், இராணுவத்தினர் கலகம் செய்தல், ஒரு நிரபராதியைத் தூக்கிலிட போலி ஆவணம் தயாரித்தல், கொலைசெய்தல், குழந்தை, மனநோயாளி, மது அருந்தியோரைத் தற்கொலைக்குத் தூண்டுதல், ஆயுள் தண்டனைக் கைதியாக இருக்கும்போதே கொலைசெய்ய முயற்சித்தல், கொள்ளை அடிக்கும்போது கொலைசெய்தல்... ஆகிய ஏழு குற்றங்களுக்கு மரண தண்டனை தரலாம் என்று நம் சட்டம் சொல்கிறது.
ஆனால், மரண தண்டனை தொடர்பாகப் பேசிய நீதிமான்கள் அனைவரும், 'அரிதினும் அரிதான வழக்குகளுக்கு மட்டுமே மரண தண்டனை தர வேண்டும். மரண தண்டனையை எதற்காக வழங்குகிறோம் என்பதை நீதிபதி மிகச் சரியாகக் குறிப்பிட வேண்டும்’ என்று, தங்களது தீர்ப்புகளில் சொல்லியிருக்கிறார்கள்.
ஓய்வுபெற்ற நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர், தூக்கு தண்டனை வேண்டாம் என்று காரணங்களை அடுக்குகிறார். மரண தண்டனை தவிர்க்க முடியாதது என்று இன்னொரு ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.சி.லஹோதி உறுதியாக இருக்கிறார். இரண்டு பேருமே சட்டம், அடிப்படை நியாய தர்மங்களை வைத்துத்தான் பேசுகிறார்கள். இந்த சட்ட வியாக்கியானங்களுக்குள் ஒரு மனிதனின் உயிர் ஊசலாடுவதுதான் வேதனை.
பஞ்சாபில் சொத்துத் தகராறு சம்பந்தமான வழக்கு சில வாரங்களுக்கு முன் உச்ச நீதிமன்றத்துக்கு வந்தது. குர்வைல்சிங், சட்னம்சிங் ஆகிய இருவரது தூக்குத் தண்டனையையும் 30 ஆண்டு சிறைத் தண்டனையாக நீதிபதிகள் கே.எஸ். ராதாகிருஷ்ணன், தீபக் மிஸ்ரா ஆகியோர் குறைத்துத் தீர்ப்பளித்தனர்.
அப்போது, நீதிபதிகள் ஒரு கருத்தை எழுதினர். 'சில குற்றச் சம்பவங்களால் சமூகம் கடும் வெறுப்பும் அதிகக் கோபமும் கொள்கிறது. இந்தச் சூழ்நிலைகளை மரண தண்டனை அளிக்கும்போது நீதிமன்றம் கவனத்தில்கொள்ள வேண்டியுள்ளது’ என்று சொல்லி இருக்கிறார்கள்.
டெல்லியில் ஒரு கூட்டுப் பாலியல் கொடூரம் ஏற்படுத்திய தாக்கம், 'இந்த மாதிரியான ஆட்களைத் தூக்குலதான் போடணும்’ என்ற கொந்தளிப்பை சமூகத்தில் விதைக்கிறது. அதற்கு நீதிபதிகள் என்ற 'மனிதர்களும்’ விதிவிலக்கு அல்ல.
நாடாளுமன்றக் கட்டடத்தைத் தாக்க வந்த வழக்கிலும் அப்படித்தான். அப்சல் குருவுக்குத் தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. அவர் தூக்கில் ஏற்றப்பட்டார். போன உயிர் திரும்ப வரப்போவது இல்லை. ஆனால், அவருக்கான தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்திய நீதிபதிகள் எழுதியது என்ன தெரியுமா?
அனைத்துக் குற்றங்களையும் அப்சல் ஒப்புக்கொண்டதாக போலீஸுக்கு அவர் கொடுத்த வாக்குமூலம் சொல்கிறது. இதை நிராகரித்த நீதிபதிகள், ''பொடா சட்டப் பிரிவின் கீழ் அப்சல் குற்றவாளி என்பது ஏற்கத்தக்கது அல்ல.
ஏனெனில், காவல்துறையிடம் அப்சல் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் ஏற்கத்தக்கது அல்ல என நீக்கப்பட்ட நிலையில், ஒரு பயங்கரவாதக் குழுவுடன் அல்லது ஒரு பயங்கரவாத அமைப்புடன் அப்சலுக்குத் தொடர்பிருந்தது என்பதற்கு எவ்விதச் சான்றும் இல்லை.
ஆனால், அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய அந்த நிகழ்வு நாடு முழுவதையும் உலுக்கியது. அத்தகைய குற்றம் இழைத்தவருக்கு உச்ச அளவு தண்டனை அளிக்கப்பட்டால்தான், சமூகத்தின் ஒட்டுமொத்த மனச்சான்று மனநிறைவுறும்'' என்று எழுதினர் நீதிபதிகள். நாடாளுமன்றத்தைத் தாக்கவந்த ஐந்து பேரில் முகமது என்பவருக்கு அறை பார்த்துத் தங்கவைத்தவர் அப்சல். அவருக்கு முகமதுவை முன்னர் தெரியாது. அவர் நாடாளுமன்றத்தைத் தாக்கவந்ததும் தெரியாது. நண்பர் ஒருவர் சொன்னதால் அறை எடுத்துக் கொடுத்தார். தவறு அவ்வளவுதான்.
நாடு முழுவதையும் உலுக்கிய நாடாளுமன்ற நிகழ்வுக்குக் காரணமான உண்மையான தீவிரவாத அமைப்பு எது என்று இதுவரை தெரியாது. முக்கியக் குற்றவாளிகளாகச் சொல்லப்படும் காஜி பாபா, மசூத் அஜர், காரிக் அகமது ஆகிய மூவரையும் பிடிப்பதற்கான எந்தக் காரியமும் இதுவரை நடக்கவில்லை. ஆனால், சிக்கியவரை தூக்கு மேடையில் நிறுத்திவிட்டனர்.
இதுதான் ராஜீவ் வழக்கிலும் நடக்கிறது.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோரைக் கைதுசெய்ய எந்த முயற்சியும் எடுக்காமல், 26 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அதில் 4 பேர் நீங்கலாக அனைவரையும் விடுவித்தது. இதில் நளினியின் தண்டனை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரும் நேரடிச் சதிக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக தங்களது வாக்குமூலங்களைப் பதிவுசெய்தவர்கள். சி.பி.ஐ.யின் குற்றப்பத்திரிகையின்படி முதன்மைக் குற்றவாளிகள் பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர்தான். அவர்களைப் பற்றி முடிவான தகவல் இதுவரை இல்லை.
ஆனால், இந்த வழக்கு சம்பந்தப்பட்ட முக்கியமான நபர், இப்போது இலங்கை அரசாங்கத்தின் கையில் இருக்கிறார். அவரை அழைத்து வந்து விசாரித்தால் ராஜீவ் கொலை பற்றிய உண்மை தெரியவரும். அதை காங்கிரஸ் அரசு ஏன் செய்யவில்லை?
அந்த நபர்... கே.பி. எனப்படும் குமரன் பத்மநாபன். ராஜீவ் வழக்கை விசாரித்த புலனாய்வு அதிகாரியான கார்த்திகேயன், ''பிரபாகரனுக்கு இரும்பொறை மூலமாகக் கொடுத்தனுப்பப்பட்ட திருச்சி சாந்தனின் கடிதத்தில், 'சில நண்பர்களின் உதவியுடன் கே.பி. அண்ணாவின் பணியைச் செய்து வருவதாக’ குறிப்பிட்டிருந்தார்.
இதன் மூலமாக 1991 செப்டம்பர் வரை கே.பி. இந்திய எல்லைக்குட்பட்ட இடங்களை புலிகளின் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தியது புலனாகிறது. சிவராசன், பொட்டு அம்மான், சாந்தன், ரவி ஆகியோர் பயன்படுத்திய வயர்லெஸ் செட்களை வாங்கிக் கொடுத்தது கே.பி.தான்.
நமது உளவு நிறுவனங்களின் மூலமும் இன்டர்போல் மூலமும் கேபி.யைப் பிடிக்க முயன்றும் முடியவில்லை’ என்று தனது புத்தகத்தில் எழுதினார். அந்த கே.பி. கொழும்பில்தான் இருக்கிறார். அவரை இந்தியாவுக்குக் கொண்டுவந்து விசாரித்தால், முழு உண்மை தெரியும்.
சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின்படி மிக முக்கியமான மனிதரான அவர் இருக்குமிடம் தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு, வேலூர் சிறையில் இருப்பவர்களை மட்டும் தூக்கில் ஏற்றத் துடிப்பதுதான் ராஜீவுக்கு செலுத்தும் அஞ்சலியா? உண்மைக் குற்றவாளி யார் எனத் தெரிந்துவிடக் கூடாது என்ற தந்திரமா?
ஆயுள் தண்டனை என்பது தோராயமாக 14 ஆண்டு சிறையாக இதுவரை இருந்தது. 'ஆயுள் வரை சிறையில் இருக்கவேண்டும்’ என்ற புதிய வியாக்கியானம் இப்போது சொல்லப்பட்ட நிலையில், மரண தண்டனை மரணம் அடைவதே சரியானது. இதையே வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொன்னார், 'தூக்கைத் தூக்கிலிடுங்கள்’!
எதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும்! அதை எதிரிகளோ வெளித்தரப்புக்களோ தீர்மானிக்க முடியாது!
[ சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2013, 10:45.30 AM GMT ]
மே 18ற்கு பிறகு குறிப்பாக ஆறேழு மாதங்கள் மறந்து போயும் "புலி" என்ற சொல்லை மக்கள் தாயகத்தில் உச்சரித்ததில்லை. சமையலுக்கு "புளி" கூட பயன்படுத்த மக்கள் பயந்தார்கள். கடையில் போய் அதை எப்படி உச்சரிப்பது என்ற அச்சம்தான்.. ஆனால் தற்போது நிலைமை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
ஆனால் இன அழிப்பு அரசு தொடர்ந்து இன அழிப்பை நடத்துவதற்கு வசதியாக புலிப்பூச்சாண்டியை கலர் கலராகக் காட்டியது. விளைவாக கைதுகள், காணாமல் போதல், தடுப்பு காவல்கள் என்று தமிழர்களை தொடர்ந்தும் வேட்டையாடியது சிங்களம். தொடர்ந்தும் இன அழிப்பை துரிதப்படுத்த ஒரு தாக்குதல் குழுவை கட்டமைக்க பெரும்பாடுபட்டது சிங்களம்.
கேபி யின் துணையுடன் வஞ்சகமாக வீழ்த்தப்பட்ட கேணல் ராம் அணி தொடக்கம் சிறீ ரெலோ கும்பல் வரை எமக்கு தெரிந்த வரை 17 கும்பல்களை உருவாக்க சிறீலங்கா புலனாய்வு வலையமைப்பு முற்பட்டது. ஆனால் எல்லா முயற்சிகளும் "X" வலையமைப்பினால் ( இப்போதைக்கு அது "X" என்றே இருக்கட்டும்) முறியடிக்கப்பட்டு போர்க்குற்ற - இனப்படுகொலை விசாரணை நகர்வுகளை நோக்கி தமிழர் தரப்பை வெற்றிகரமாக திருப்பியது.
இது நிற்க. அண்மைக்காலம் வரை இதுதான் நிலவரம்.
மாறிவரும் பூகோள பிராந்திய அரசியலும் நலன்களை மையப்படுத்திய சர்வதேச உறவுகளும் இந்து சமுத்திரப் பகுதியில் குவிந்ததன் விளைவாகவும் தொடரும் இன அழிப்பு குறித்து அதிருப்தியுற்ற மனித உரிமை அமைப்புக்களின் கரிசனையாலும் இலங்கைத்தீவு தற்போது ஒரு கேந்திர முக்கியத்துவத்தை பெற்றுவிட்டது.
விளைவாக ஆளாளுக்கு பகடை காய்களை உருட்ட தொடங்கி விட்டார்கள். அண்மையில் நாம் பார்த்த அமெரிக்காவின் ஜெனிவா தீர்மானம் அப்படியான ஒன்று.
தற்போது மனித உரிமை அமைப்புக்கள் தொடக்கம் அமெரிக்கா வரை "தமிழர்களுக்கு தீர்வை முன்வைக்காவிட்டால் ஆயுதப் போராட்டம் வெடிக்கலாம்" என்று எச்சரிக்கிறார்கள். இது ஒரு வேறொரு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை. "எமது கட்டுப்பாட்டுக்குள் நீ இரு இல்லையென்றால் உன்னை ஐநா விசாரணைக்குள் மாட்டுவோம் அல்லது எமது ஆதரவுடன் ஒரு ஆயுதக்குழுவை உருவாக்குவோம் " என்ற மறைமுக செய்தியாக சிங்களத்திற்கு சொல்லப்படுகிறது.
இப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பு "எக்கொனமிஸ்ட் இன்ரெலிஜென்ஸ் யுனிட்" இதழ் ஆயுதக் கிளாச்சி குறித்து விரிவாக பேசியவுடன் சிங்களம் இப்ப புலிப் பூச்சாண்டியை புரட்டிப் போடுகிறது. இதுவரை காலமும் தாம் சொல்லியதற்கு முரணாக "புனர்வாழ்வளித்த போராளிகள் போராட மாட்டார்களாம், அப்படி பலத்துடன் மீண்டெழ சாத்தியமேயில்லை " என்று அடித்து சத்தியம் செய்யாத குறையாக அலறுகிறது சிங்களம்.
ஆனால் இதே இராணுவ அதிகாரிகளும் அமைச்சர்களும் தான் புனர்வாழ்வு அளித்த போராளிகளை மீள பிடிப்பதற்கு நிறைய பூச்சாண்டியை காட்டியவர்கள். இப்ப முன்னாள் போராளிகளுக்கு "நல்ல பிள்ளை" சான்றிதழ் தருகிறார்கள்.
ஏனென்றால் மூன்றாம் தரப்பு ஒன்றின் ஆதரவுடன் தமிழர் தரப்பு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து விடுமோ என்று இப்ப அஞ்சுவதன் விளைவுதான் இந்த பிதற்றல்.
தமிழர்கள் அடங்க மாட்டார்கள் என்று யாருக்கு தெரியுதோ இல்லையோ சிங்களத்திற்கு தெளிவாகத் தெரியும். மே 18ற்கு பிறகு தமிழர்களின் மனநிலையை அறியவும், இன அழிப்பின் நுண்ணிய வடிவமாகவும் "கிறீஸ் மனதர்களை" ஏவிய போதே சிங்களத்திற்கு எம்மைப்பற்றி தெளிவாக தெரிந்து விட்டது. ஒரு கட்டத்திற்கு மேல் அடக்கினால் வெடித்து விடுவார்கள் என்று.. அதுதான் நுட்பமாக இனஅழிப்பை தொடர்கிறது சிங்களம்.
போதாததற்கு தமிழக மாணவர் எழுச்சி சிங்களத்தின் நிம்மதியை குலைத்து விட்டது. மாணவர் போராட்டத்தின் இராஜதந்திர வெற்றிகளுக்கு அப்பால் ஒரு தெளிவான செய்தி சிங்களத்திற்கு கிடைத்திருக்கிறது. அதாவது எந்த கணத்திலும் தமிழர்கள் தமிழீழத்திலும் வீதிக்கு வந்து விடுவார்கள் என்று.. அத்தோடு புதிய தலைமுறை களத்தில் இறங்கும் அபாயம் இருப்பதையும்.
ஏனென்றால் தமிழக அரசியல் வாதிகளும் அமைப்புக்களும் செய்ய முடியாததை வெறும் 7 லயோலா கல்லூரி மாணவர்கள் பெரும் பொறியாக மாற்றி காட்டினார்கள். விளைவாக தமிழக குக்கிராமங்களில் எல்கேஜி படிக்கும் குழந்தைகள் கூட பாலச்சந்திரனின் முகமூடியை சுமந்தபடி வீதிக்கு வந்தார்கள்.
எனவே எந்தக் கணத்திலும் ஒரு மக்கள் மாணவர் புரட்சி தாயகத்தில் வெடிக்கலாம் என்பது உறுதியாகி விட்டது. அத்தோடு மூன்றாம் தரப்பு ஒன்றின் உதவியுடன் சமகாலத்தில் வீதிக்கு வரும் மக்களையும் மாணவர்களையும் காக்க ஒரு அணியும் களமிறங்கினால் சிங்களம் கடலில்தான் குதிக்க வேண்டி வரும்.
சிங்களம் ஆட வேண்டிய ஆட்டம் எல்லாம் ஆடி முடிந்து விட்டது. இப்போது ஆட்டத்தை ஆரம்பிக்க போறவர்கள் நாம்தான். அதற்காக "சிங்களம் விரும்புகிறது, இந்தியா விரும்புகிறது, மூன்றாம் தரப்பு விரும்புகிறது " என்பதற்காக ஆயுதத்தை தூக்க நாம் முட்டாள்கள் இல்லை.
மே 18ற்கு முன்பும் சரி பின்பும் சரி நாம் ஆயுதத்தை தூக்க வேண்டுமா? கீழே போட வேண்டுமா? என்பதை தீர்மானிப்பது ஒரு சக்திதான்.
எனவே அந்த சக்தியின் வழிகாட்டலில் தேவைப்பட்டால் பொருத்தமான நேரத்தில் எமது இறுதி விடுதலைக்கான களம் திறக்கப்படும். இது எமது விடுதலை தொடர்பானது. எனவே எதையும் நாம்தான் தீர்மானிக்க வேண்டும். அதை எதிரிகளோ வெளித்தரப்புக்களோ தீர்மானிக்க முடியாது.
பரணிகிருஸ்ணரஜனி.
Geen opmerkingen:
Een reactie posten