| 10ம் வகுப்பு மாணவி கடத்தி கற்பழிப்பு |
| [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 09:16.44 AM GMT +05:30 ] |
| இவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறார். கடந்த 15ம் திகதி ராகி தனது தோழி வீட்டுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து சரவணன் மகளை பல இடங்களிலும் தேடிப் பார்த்தார். ஆனால் கண்டுபிடிக்க முடிய வில்லை. இதுபற்றி சரவணன் எம்.கே.பி. நகர் பொலிசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்தமிழ் முதல்வன் தனிப்படை அமைத்து மாணவி ராகியை தேடி வந்தார். இந்த நிலையில் ராகி காணாமல் போன நாளில் இருந்தே அவர் வாடகைக்கு குடியிருந்த வீட்டின் உரிமையாளர் முனியப்பன் என்ற சுரேஷ் (40) என்பவரையும் காண வில்லை. சுரேஷ் அந்த பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்தார். எனவே சுரேஷ் மீது பொலிசாரின் சந்தேகப்பார்வை விழுந்தது. அவரது உறவினர்களிடம் பொலிசார் விசாரித்தனர். அப்போது ராகியை சுரேஷ் கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கண்டுபிடிக்க பொலிசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இந்த நிலையில் ராகியை சுரேஷ் ஆந்திர மாநிலம் ராஜமுந்திரிக்கு கடத்தி சென்று கற்பழித்தது தெரிய வந்தது. இதையடுத்து பொலிசார் ராஜமுந்திரி சென்று மாணவி ராகியை மீட்டனர். சுரேசை கைது செய்தனர். அவர் மீது கடத்தல் மற்றும் கற்பழிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. http://india.lankasri.com/view.php?224MC303lOI4e2DmKcb240Mdd204Kbc2mDXe43OlH023WAo2 |
| பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி சொகுசு வாழ்க்கை வாழ்ந்த இந்தியர்கள் |
| [ வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2013, 07:44.41 மு.ப GMT ] |
சிங்கப்பூரில் வாழ்ந்து வருகின்ற தமிழ்ச்செல்வன்(28), ஆனந்த பிரபு(25) ஆகியோர் நான்கு பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி அவர்களின் வருமானத்தில் உல்லாசமாக வாழ்க்கை நடத்தியுள்ளனர்.
இதையறிந்த பொலிசார் தமிழ்ச்செல்வன், ஆனந்த பிரபு மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்துள்ளனர்.
அவர்கள் மீதான வழக்கு வருகின்ற 29ம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், விபசாரத்தில் ஈடுபடுத்த பெண்களை அழைத்துவந்த குற்றத்திற்காக தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி அபராதமும் விதிக்கப்படும்.
மேலும் பாலியல் தொழிலாளர்கள் வருமானத்தில் வாழ்ந்த குற்றத்திற்காக கூடுதலாக தலா 5 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் சிங்கப்பூர் வெள்ளி அபராதமும் விதிக்கப்படும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
|
Geen opmerkingen:
Een reactie posten