புதுவருடப் பிறப்பிற்கு ஜனாதிபதியால் மக்களின் சுபீட்சத்திற்கு வாழ்த்துத் தெரிவித்து செய்தி வெளியிட்ட வேளை யாழில், உதயன் பத்திரிகை மீதான தாக்குதல் ரணில் விக்கிரமசிங்க யாழில் தெரிவித்த கூற்றை மெய்ப்பிப்பது போல் உள்ளது என ஜனநாயக மக்கள் முன்னணியின் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சி. பாஸ்க்கரா தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி அவர்களால் தமிழ் சிங்கள புதுவருட வாழ்த்துச் செய்தி தெரிவித்து பத்திரிகைகளில் வெளிவந்த நாளில் உதயன் மீதான தாக்குதல் இராணுவ புலனாய்வாளர்களுடன் சம்மந்தப்படுத்தி பலத்த குற்றச்சாட்டுக்கள் பல இடங்களில் இருந்து வெளிவந்த வேளையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழில் தெரிவித்த கருத்தான வடக்கில் தனியான ஒரு படை இராணுவத்தளபதியின் கீழ் செயற்படுகிறது என்ற கூற்றை மெய்ப்பிப்பது போல் உள்ளது.
முழுக்க முழுக்க இராணுவக்கட்டுப்பாடு உள்ள இடத்தில் ஒரு உதயன் பத்திரிகையாலய மீது நடத்தப்பட்ட கண்மூடித்தனமான தாக்குதல் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்று. மேலும் மக்கள் புதுவருடகொண்டாட்டத்திற்கு தயார்படுத்திக்கொண்டிருந்த வேளையில் இப்படியான மிளேச்சத்தனமான தாக்குதல் இன்னும் புரிந்தணர்வுக்கான சாத்தியப்பாடுகள் எல்லளவும் ஏற்படவில்லை என்பதை தெட்டத்தெளிவாகக் காட்டுகிறது.
இப்படியான பத்திரிகை மீதான தாக்குதல்கள் சுதந்திர கருத்துப் பரிமாற்றத்திற்கே ஆப்பு வைக்கும் நிகழ்வாக காணப்படுகின்ற வேளையில் அரசியல் தீர்வு என்பதோ எல்லளவும் எதிர்பார்க்க முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. இனியும் உலக நாடுகள் தமது கவனத்தை இலங்கை பத்திரிகை சுதந்திரம் மீது அக்கறை எடுக்காது போனால் இலங்கையில் சுதந்திர பத்திரிகை இல்லாமல் போய்விடும்.
இப்படியான தாக்குதலை எமது கட்சி வன்மையாக கண்டிப்பதுடன் தாக்குதல்களை நடத்தியவர்களை கைது செய்து அரசின் நியாயத்தன்மை, இராணுவத்தின் நியாயத்தன்மையை நியாயப்படுத்தி தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை வழங்கி புரிந்துணர்வுக்கு வித்திட வேண்டும் என பாஸ்க்கரா தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten