இது குறித்து கட்சியின் பொதுச் செயலர் வை.காவேரி, ஒருங்கிணைப்புச் செயலர் எம்.பி.காமராஜ் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் நேற்று அளித்துள்ள மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இலங்கையில் நடைபெற்ற இனப் படுகொலையில் அப்பாவித் தமிழ் சிறுவன் பாலச்சந்திரன் இராணுவ வீரர்களால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
இது தமிழகத்தில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் அனுதாபத்தையும் இன உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து பாலச்சந்திரனின் நினைவைப் போற்றும் வகையில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க உள்ளோம்.
எனவே சேலம் ஐந்து ரோடு பகுதியில் பாலச்சந்திரனுக்கு சிலை வைக்க இடம் ஒதுக்கிக் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten