[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:25.09 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவிற்கும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
முன்னாள ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் நெருங்கிய தொடர்புகளை வைத்திருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்களையும் அவர்களின் இரகசிய செயற்பாடுகளையும் ஆராய அரசாங்கம் விசேட குழுவொன்றை அமைத்துள்ளதாக தெரியவருகிறது.
எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது ஐனநாயகத் தேசியக் கூட்டமைப்புடன் சந்திரிக்காவை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளுடன் சந்திரிக்கா தனித்தனியாக சந்திப்புக்களை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சந்திரிக்காவுடன் தொடர்புடையவர்கள் பற்றி ஆராய அரசாங்கத்தில் விசேட குழு
[ ஞாயிற்றுக்கிழமை, 21 ஏப்ரல் 2013, 02:27.03 AM GMT ]
அரசாங்கத்தில் உள்ள இளம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றே இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சிரேஷ்ட உறுப்பினர்களின் ஆலோசனையின் பேரில் செயற்படவுள்ளதாகவும் அரசாங்கத்தின் நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவுடன் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டிருந்ததாகவும், அதனடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள ஜனாதிபதியை களமிறக்கவுள்ளதாகவும் அண்மைக்காலமாக செய்திகள் வெளியாகியிருந்தன.
இந்தநிலையிலேயே அவர்கள் பற்றி ஆராய விசேட குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவானது குறித்த விடயம் தொடர்பாக ஆராய்ந்து அது தொடர்பாக அறிக்கையொன்றினை அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்களைக் கொண்ட குழுவொன்றிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten