தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 3 april 2013

இலங்கையில் தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும்!- சுஸ்மா !


பௌதீக ஒருமைப்பாட்டுக்கு பங்கம் ஏற்படாத வகையில் அரசியல் தீர்வுத் திடட்மொன்று முன்வைக்கப்பட வேண்டுமென இந்திய எதிர்க்கட்சித் தலைவி சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களை மீள்குடியேற்றுவது தொடர்பில் நம்பகமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
தமிழ் மக்கள் கௌரவமாக வாழக்கூடிய ஓர் சூழ்நிலை உருவாக்கப்பட வேண்டும் சுஸ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, கற்றுக்கொண்ட பாடங்ங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை அரசாங்கம் உரிய முறையில் அமுல்படுத்தத் தவறியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க குற்றம் சுமத்தியுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2ம் இணைப்பு
ரணில் இந்தியத் தலைவர்களை சந்தித்த பேச்சுவார்த்தை
இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நேற்று பி.ஜே.பியின் நாடாளுமன்றத் தலைவர் சுஸ்மா சுவராஜ் மற்றும் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரை சந்தித்துள்ளார்.
அவர்களுடன் இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் குறித்து ரணில்  விக்ரமசிங்க தெளிவாக பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக எதிர்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்றைய தினம் அவர் இந்திய பிரதமரையும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் சந்திக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Geen opmerkingen:

Een reactie posten