அகதி அந்தஸ்து கோரும் வகையில் அவுஸ்திரேலியா நோக்கிச் சென்ற மேலும் ஒரு படகினை அவுஸ்திரேலிய பாதுகாப்புத் தரப்பினர் இடைமறித்துள்ளனர்.
அவுஸ்திரேலிய கடற்படையினரும் மேற்கு அவுஸ்திரேலிய காவல்துறையினரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது 72 பேருடன் பயணித்த படகினை கைப்பற்றியுள்ளனர்.
அவர்களில் சிலர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக கரையோர பாதுகாப்பு தரப்பினர் இன்று தெரிவித்தனர்.
மிகுதியானவர்கள் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்படுவதற்காக கிறிஸ்மஸ் தீவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் 66 இலங்கையருடன் 5 ஆயிரம் கிலோமீற்றர் தூரம் பயணித்த நிலையிலேயே அவுஸ்திரேலிய அதிகாரிகள் கப்பல் ஒன்றை தம்வசமாக்கியுள்ளனர்.
இதேபோல கடந்த வாரம் டார்வின் கடற்கரையோர பகுதியில் வைத்து 75 பேருடன் பிறிதொரு படகு மீட்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தற்போதைய அவுஸ்திரேலிய சட்டத்திட்டத்திற்கு அமைய அவுஸ்திரேலிய நிலப்பரப்பை சென்றடையும் அகதிகள் நௌரு தீவிற்கோ அல்லது பப்புவாநிவ்கினியிலுள்ள மனுஸ் தீவிற்கோ அனுப்பி வைக்கப்படமாட்டார்கள்.
இந்த புதிய நடைமுறைக்கு அமைய மேலதிகமாக அகதி அந்தஸ்து கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten