சிறந்த நாடகம்!!கல்கிஸ்ஸையில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான சண்டேலீடர் செய்தியாளர் பராஸ் சக்குட்அலி, ஜனாதிபதியின் நடவடிக்கை தொடர்பில் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் இந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது.
சக்குட்அலி கடந்த வாரம், அவரது வீட்டில் வைத்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானார்.
இந்தவிடயம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அவைவரையில் பாரிய பிரச்சினையாக முன்கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இதனையடுத்தே ஜனாதிபதி செயலகம் தமது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவுக்கமைய இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன், இது தொடர்பில் பலரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.
அதேவேளை இச்சம்பவம் தொடர்பில் இருவர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten