ஈழத் தமிழர்கள் மீது ’ஜெயலலிதா மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்ள முயற்சிக்கிறார், இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் அவர் போடும் இரட்டை வேடம் குறித்து தமிழ் மக்கள் நன்கு அறிவர்’’ என கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’8-2-2013 அன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பதிலுரை வழங்கிய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை அரசின் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று பேரவையில் அ.தி.மு.க. ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது என்றும், அதை மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டதோடு, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்த போது, அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக, மத்திய அரசு வாக்களிக்க வேண்டுமென்று பிரதமரிடம் தான் வலியுறுத்தியதாகவும், முதலில் அதை ஆதரிப்பது பற்றி எதுவும் தெரிவிக்காத இந்திய அரசாங்கம், தனது தொடர் வலியுறுத்தல் காரணமாக அந்தத் தீர்மானத்தை ஆதரித்தது என்றும் கூறியிருக்கிறார்.
ஆனால் இதே முதலமைச்சர் ஜெயலலிதா தான்; 16-4-2002 அன்று, அ.தி.மு.க. ஆட்சியிலே, இதே தமிழகச் சட்டப் பேரவையிலே இலங்கைப் பிரச்சினை பற்றி ஒரு தீர்மானத்தை முன் மொழிந்தார். அதன் முக்கிய பகுதிகள் வருமாறு:-
இலங்கை விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப் பிள்ளை பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப் பேரவை வற்புறுத்துகிறது.
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் இயக்கத்தைச் சார்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டி ற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வற்புறுத்துகிறது. இந்தியாவின் பாதுகாப்புக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இறையாண்மைக்கும் குந்தகம் விளைவிக்கும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும், அதன் தலைவர் பிரபாகரனும், இந்திய மண்ணில் காலூன்றுவது ஒரு போதும் ஏற்கப்பட மாட்டாது, அனுமதிக்கப்பட மாட்டாது.
பிரபாகரனை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கு ஸ்ரீலங்கா அரசோடு சட்டப்படியாகவும், தூதரக நடை முறைப்படியும், அனைத்து விதமான முயற்சியையும் மேற்கொள்ள வேண்டும் என்றும், பிரபாகரனை அவர் புரிந்த குற்றங்களுக்காக இந்தியாவில் உள்ள நீதி மன்றத்தில் உரிய விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்றும் தமிழக சட்ட மன்றப் பேரவை மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.
ஸ்ரீலங்கா அரசினால் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரகாரனை பிடித்து நாடு கடத்த இயலவில்லை என்றால், ஸ்ரீலங்கா அரசின் அனுமதி யோடு, இந்திய இராணுவத்தை ஸ்ரீலங்கா அரசின் உதவிக்கு அனுப்பி, பிரபாகரனை சிறை பிடிப்பதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக சட்டமன்றப் பேரவை கேட்டுக் கொள்கிறது. இந்தத் தீர்மானத்தை முன் மொழிந்தவர் ஜெயலலிதாதான்!
அது மாத்திரமல்ல; 17-1-2009 அன்று இதே ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “இலங்கைத் தமிழர்களைக் கொல்ல வேண்டுமென்று இலங்கை ராணுவம் எண்ணவில்லை. ஒரு யுத்தம் - ஒரு போர் நடக்கும்போது அப்பாவி மக்கள் கொல்லப்படுவது சகஜம் தான்” என்றும் குறிப்பிட்டார்.
மேலும் இலங்கையில் தமிழ் இனப் படுகொலையைக் கண்டித்து, போர் நிறுத்தம் உடனே அறிவிக்கப்பட வேண்டுமென்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது, ஜெயலலிதா விடுத்த அறிக்கையில், “விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக கருணாநிதி செயல்படு கிறாரோ என்ற சந்தேகம் தான் தமிழக மக்கள் மனதில் எழுந்துள்ளது, இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம் இந்திய அரசிடம் இல்லை” என்றே மத்திய அரசுக்கு அப்போது வக்காலத்து வாங்கினார்.
4-11-2007இல் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவுத் தலைவராக இருந்த தமிழ்ச் செல்வன் மறைந்த போது ஒரு இரங்கல் கவிதையை நான் எழுதினேன் என்பதற்காக ஜெயலலிதா விடுத்த அறிக்கையில் புலிகளுடன் கருணாநிதிக்கு ரகசியத் தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதுவே சான்று, இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தவர் தான் ஜெயலலிதா.
இதையெல்லாம் ஈழத் தமிழர்கள் மறந்திருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு நேற்று, 8-2-2013 அன்று சட்டப் பேரவையில் ஜெயலலிதா ஈழத் தமிழர்களிடம் தான் மிகுந்த அக்கறை கொண்டவரைப் போல தன்னைக் காட்டிக்கொள்கிறார். இதில் இருந்து அவரது உண்மை உருவத்தை, ஈழத் தமிழர்களும், இங்குள்ள தமிழர்களும் புரிந்து கொள்ள வேண்டும்’’என்று கூறியுள்ளார்.

Geen opmerkingen:
Een reactie posten