குறிப்பிட்ட பெண்களை இராணுவம் நன்றாக அடித்திருந்தால் இப்படி நடந்திருக்காது என்பதே இதன் பொருள். அப்படி என்றால் அடி உதனை போன்ற சித்திரவதைகளை இம் மருத்துவர் ஊக்குவிக்கிறாரா என்ற கேள்விகளும் இங்கே எழுகின்றதல்லவா ? இதனை BBC போன்ற சர்வதேச ஊடகங்களும் ஆதரிக்கின்றதா என்ற கேள்விகளும் எழுகின்றது. எனவே மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செயல்பாட்டாளர்கள் இதனை BBC நிர்வாகத்திடம் கொண்டுசென்றுள்ளார்கள். இதனையடுத்து குறிப்பிட்ட இச் செவ்வி தொடர்பாகவும், மருத்துவர் சிவதாஸ் பேசிய விதம் தொடர்பாகவும் BBC நன்கு ஆராய்ந்துள்ளது. மேற்படி மருத்துவர் பேசியதில் பிழை இருப்பதை உணர்ந்த BBC இச் செய்தியை உடனடியாக தனது இணையத்தில் இருந்து அகற்றியுள்ளது. ஆனால் இதனைக் கேட்ட பல்லாயிரக்கணக்கான தமிழர்களிடம், இவை பிழையான தகவல் என்பதனை கூற BBC தமிழோசை தயாராக இல்லை. வெறுமனவே இச் செய்தியை அகற்றியுள்ளார்கள் அவ்வளவு தான்.
இலங்கை அரசின் பிரச்சாரப் பீரங்கியாக செயற்பட்ட மருத்துவர் சிவதாஸை ஒருதலைப் பட்ச்சமாகப் பேட்டி கண்டு, இலங்கை அரசுக்கு சாதகமாக நடந்துகொண்ட BBC தமிழோசை ஈழத் தமிழர்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும். உண்மையில் என்ன நடந்தது என்பதனை, அவர்கள் வெளிக்கொண்டுவரவேண்டும். இது தொடர்பாக நாம் BBC நிர்வாகத்தினரை அணுக உள்ளோம். எனவே புலம்பெயர் மக்களே, இச் செய்தி தொடர்பாக உங்களுக்கு ஏதாவது கருத்துக்கள் இருப்பின், கீழ் காணும் படிவம் ஊடாக அதனை அனுப்பிவையுங்கள். நான் அதனை BBC நிர்வாகிகளிடம் நிச்சயம் கொண்டுசெல்வோம். நன்றி.
http://athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4535
Geen opmerkingen:
Een reactie posten