கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 50 பேர் கொண்ட செயற்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் ஆளும் கட்சித் தரப்பில் 25 பேரும் எதிர்கட்சிகளின் தரப்பில் 25 பேரும் உள்ளடக்கப்பட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.
கிளிநொச்சியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே எதிர்க்கட்சித் தலைவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்.
வட மாகாண சபைத் தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும்.
ஏனைய மாகாணங்களில் தேர்தல்கள் இடம்பெற்ற போது, வடக்கில் நடத்துவதற்கு இயலாது என்று கூறுவதில் அர்த்தமில்லை.
அத்துடன், எவ்வாறான குறைபாடுகள் இருந்த போதும், நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உடனடியாக நடைமுறைக்கு வரவேண்டும்.
அதற்காக 50 பேர் கொண்ட செயற்குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும்.
இதற்கு தாமதிக்கக் கூடாது. செயற்படுத்த முடியாத, திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டிய பரிந்துரைகள் இருப்பின் அது குறித்து எதிர்க்கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten