வடமாகாண சபை உறுப்பினர் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறுங்கள் என்று முல்லைத்தீவு நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாக்கல் செய்திருந்த வழக்கு மீதான விசாரணை இன்றைய தினம் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
இந்நிலையில் மேற்படி வழக்கிற்கு வடமாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் சென்றிருந்த நிலையில் அனந்தியின் கணவர் எழிலனால் பிடிக்கப்பட்டு காணாமல் போனவர்களுக்கு பதில் கூறு என்றும்,
அனந்தியே உனது கணவன் காணாமல் போனதாக நீ கூறும் நாடகம் எப்போது முடிவுக்கு வரும்?, எங்கே எமது பிள்ளைகள் ஒழிந்திருக்கும் உன் கணவரிடம் கேட்டு சொல்? போன்ற பதாகைகள் தாங்கியவாறே மேற்குறித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஏனினும் குறித்த ஆர்ப்பாட்டம் முல்லைத்தீவு நகரிலிருந்து நீதிமன்றம் வரையில் ஊர்வலமாக சென்ற போதும் அதற்கு பொலிஸார் ஒத்துழைக்கவில்லை.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்ட, அரசாங்க அதிபர் திருமதி ரூபாபதி கேதீஸ்வரனை சந்தித்த ஆர்ப்பாட்டக்காரர்கள் எழிலனால் பிடிக்கப்பட்டுக் காணாமல் போனவர்கள் எங்கே எனக்கேட்டு மகஜர் ஒன்றினை கையளித்துள்ளதுடன், குறித்த மகஜரினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் கவனத்திற்கு கொண்டுவருமாறும் கோரியிருக்கின்றனர்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டம் படையினரின் ஒழுங்கமைப்பில் நடத்தப்பட்டதாகவும், அதில் கலந்துகொண்டவர்கள் படையினரின் சிவில் பாதுகாப்பு படையை சேர்ந்தவர்கள் என்றும் தமிழ்தேசிய கூட்டமைப்பு சுட்டிக்காட்டியிருக்கின்றது.
எனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் கோரிக்கைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஏன் பதிலளிக்காமல் மௌனம் காக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் மௌனம் காத்தால் சாகும்வரையில் உண்ணா விரதப்போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
மேலும் தொடர்ந்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பில் மௌனம் காத்தால் சாகும்வரையில் உண்ணா விரதப்போராட்டத்தை முன்னெடுப்போம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் எச்சரித்துள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp2A.html
Geen opmerkingen:
Een reactie posten