[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 04:07.53 PM GMT ]
இன்று காலை கிளிநொச்சியில் சிவில் சமூக உறுப்பினர்களுடன் நடத்திய சந்திப்பில் தமிழ் சிவில் சமூக அமையமும் கலந்து கொண்டது. இதன் போதே ஐ. நா சிறப்பு அறிக்கையாளரிடம் இவ் அறிக்கையினை கையளித்தாக தமிழ் சிவில் சமூகத்தின் இணைப் பேச்சாளர் குமாரவடிவேல் குருபரன் தெரிவித்துள்ளார்.
அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்ட முக்கிய விடயங்கள் பின்வருமாறு:
1. ஐ. நா மனித உரிமை ஆணையாளர் கடந்த மார்ச் 5, 2015 அன்று ஜெனீவாவில் ஆற்றிய உரையில் பாதிக்கப்பட்ட நபர்களோடு கலந்தாலோசித்தே ஓர் உள்ளகப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாலும்இலங்கை அரசாங்கம் இது வரையிலும் அத்தகைய ஓர் கலந்தாய்வுச் செயன்முறையை ஆரம்பிக்கவில்லை என்பதை அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது.
2. அண்மையில் பாராளுமன்றிலும் வேறு உத்தியோகபூர்வத் தளங்களிலும் இலங்கை சனாதிபதி மற்றும் வெளி விவகார அமைச்சர் உள்ளக விசாரணையின் நோக்கம் இலங்கை இராணுவத்தின் நற்பெயரைக் காபாற்றுவதற்கே என்று குறிப்பிடப் பட்டுள்ளமையை ஆதரங்களுடன் சுட்டிக்காட்டி இவை உண்மையான நம்பத்தகுந்த விசாரணையை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்துக்கு விருப்பம் இல்லை என்பதையும் ஆகவே தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழும் உள்ளக விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை தமிழ் சிவில் சமூக அமையத்தின் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
3. அண்மையில் இலங்கை பிரதமர் யாழ்ப்பணத்தில் ஆற்றிய உரையில் ஓர் உண்மை மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை அமைப்பதே எமது நோக்கம் எனக் கூறியுள்ளமை குற்றம் செய்தவர்கள் தொடர்பில் குற்ற விசாரணை மற்றும் வழக்குத் தாக்கல் செய்வது தொடர்பில் இந்த அரசாங்கத்திற்கு நாட்டமில்லை என்பதையே காட்டுகின்றது என்பதையும் அறிக்கை சுட்டிக் காட்டுகின்றது. மேலும் இலங்கையில் உள்ளக விசாரணை ஒன்று ஏன் ஒரு போதும் வெற்றியளிக்காமைக்கான வராலாற்று ரீதியான காரணிகளையும் அறிக்கை எடுத்தியம்புகின்றது.
4. மீள மீள உள்ளகப் பொறிமுறைகள் நீதியைப் பெற்றுத் தர முடியாதவை என தமிழ் மக்கள் எவ்வளவு தடவை தான் சரவதேச முறைமைக்கு நிரூபிக்க வேண்டும் என்று கேள்வியை சிவில் சமூக அமையத்தின் அறிக்கை முன் வைத்துள்ளது.
5. நிலைமாறு நீதிக்கான (Transitional Justice) செயற்திட்டத்தின் முக்கிய அம்சம் நிறுவன மறுசீரமைப்பு என்பதை சுட்டிக் காட்டியுள்ள அமையத்தின் அறிக்கை இலங்கையின் ஒற்றையாட்சி அரசு மறு சீரமைக்கப்படாத வரை இந்த நிறுவன மறுசீரமைப்பு பூர்த்தியாகாது என்றும் சிவில் சமூக அமையத்தினரால் ஐ. நா சிறப்பு அறிக்கையாளரிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp1J.html
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்?
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 05:43.18 PM GMT ]
சர்வமதத் தலைவர்களின் பங்குபற்றலுடன் வடக்கு கிழக்கு மக்களின் நாளாந்த வாழ்க்கை தொடர்பில் அமைச்சில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் சர்வமதத்தலைவர்களால் எழுப்பட்ட கேள்விகளுக்கு அமைச்சர்களான விஜேதாச ராஜபக்ஸ, மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
இந்தக் கலந்துரையாடலில் சர்வமதத்தலைவர்களால் எழுப்பட்ட கேள்விகளும் அதற்கு அமைச்சர்கள் அளித்த விளக்கங்களும்,
வடக்கு கிழக்கு மாத்திரமல்ல இலங்கையின் ஏனைய பிரதேசங்களிலும் இந்த குற்றாச்சாட்டுக்கு உள்ளாகியவர்கள் உள்ளனர். பத்து அல்லது பதினைந்து வருடங்களாக எந்தவித விசாரணைகளும் இன்றி சிறையில் உள்ளனர். இது அநீதியாகும்.விசேட நீதிமன்றங்களினூடாக இந்த வழக்குகள் விசாரிப்பதற்கான முறைகள் இல்லையா என்று இந்த இடத்தில் அறிய விரும்புகின்றோம்.
ஏனெனில் இவ்வாறு அவர்களை ஒரு நாளிலேனும் சிறையில் வைத்திருப்பது மனிதவுரிமை மீறலாகும். என சர்வ மதத்தலைவர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸ,
வழக்குகள் துரிதமான மேற்கொள்ளப்பட்டு விசாரணைகள் நடத்தப்படுவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்று அனுராதபுரத்தில் ஆரம்பிக்கப்பட்டு அங்கு பணிகள் முன்னெடுக்கப்படுக்கின்றன.கொழும்பு மேல் நீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்குகள் காணப்படுகின்றன என்றார்.
இதேவேளை மீள் குடியேற்றம் தொடர்பான பிரச்சினைகள் பற்றி எழுப்பட்ட கேள்விக்கு கருத்துரைத்த அமைச்சர் சுவாமிநாதன்,
கடந்த இரண்டரை மாதத்திற்குள் ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவிக்க முடிந்ததாகவும் மிதிவெடிகள் தொடர்பாக சான்றிதழ்களின் தாமதமே காணிகளை மீள கையளிப்பதில் சிக்கலாக இருந்தது என்றும். எனினும் முதல் உரிமையாளர்களுக்கு காணிகள் பெற்றுக்கொடுக்கப்படும். அதனை தெளிவாக கூற வேண்டும்.
2015 மார்ச் மாதம் 25ம் திகதி முன்னர் மூன்று கிராம சேவகர்கள் பிரிவில் உள்ள 280 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளன.இன்னும் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் காணி இருந்தால் மீள்குடியேற்றப்பிரச்சினை தீர்க்கப்படும் என்று அமைச்சர் கூறிய வேளை குறுக்கிட்ட சர்வ மதத்தலைவர்கள்,
பத்து வருடமாக ஒரு காணியில் வசித்து நீதிமன்றம் சென்றால் அந்த காணி அந்த நபருக்கு சொந்தமாகிவிடும். இந்த நிலையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் அதனை செய்யப்போனால் பிரச்சினைகள் ஏற்படும். காணிகளை பிடித்து கொண்டுள்ளனர்.இலங்கை அகதிகள் இந்தியாவில் உள்ளனர்.அவர்கள் இந்தியா சென்று 20வருடங்கள் கடந்துள்ளன.
அவர்கள் இலங்கைக்கு வருகின்றனர்.அப்படியாயின் அவர்களுக்கு காணியுமில்லை வீடுமில்லை,இதற்கு தீர்வு என்ன என கேள்வி எழுப்பினர்.
அதற்கு விசேட முறமை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும் அடையாளம் காண முடியாவிடினும் அவர்களின் காணி உறுதிப்பத்திரம் காணப்படுமாயின் அவர்களுக்கு வேறு காணிகளை வழங்கும் உரிமை மீள்குடியேற்ற அமைச்சினூடாக முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர்கள் கூட்டாக பதிலளித்தனர்.
இந்த சந்திப்பு நீதி அமைச்சில் இடம்பெற்றது. தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தல் மற்றும் வடக்கு கிழக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஜனாதிபதியின் ஆலோசனையின் பிரகாரம் இந்த கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp2B.html
Geen opmerkingen:
Een reactie posten