[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 03:21.12 PM GMT ]
மாணவர்கள் பேரணியாக வந்து தமது மனுவை கையளிக்க மறுக்கப்பட்ட போதே மோதல் இடம்பெற்றது.
இதன்போது கண்ணீர் புகைப்பிரயோகமும் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து மாணவர்களும் பொலிஸார் பலரும் காயங்களுக்கு உள்ளாகினர்
இந்தநிலையில் பிரதமர் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தமது கோரிக்கையை பிரதமர் அலுவலகத்தில் கையளிப்பதற்கு மாணவர்கள் அனுமதியை பெற்றிருக்கவில்லை.
இதற்கு பதிலாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கே மனுவை கையளிக்கவிருந்தனர். எனினும் கொள்ளுப்பிட்டிக்கு பேரணியாக வந்த அவர்கள் தமது முடிவை மாற்றி பிரதமர் அலுவலகத்தை நோக்கி சென்றனர்.
இதன்போது ஐந்து மாணவ பிரதிநிதிகளுக்கு மனுவை கையளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இருப்பினும் ஏனைய மாணவர்களின் நடவடிக்கை இயல்பு நிலையை மாற்றியது. எனவே இது ஒரு துரதிஸ்ட நடவடிக்கையாகும் என்று பிரதமர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த தாக்குதல் சம்பவத்தை ஜே.வி.பியும் வன்மையாக கண்டித்துள்ளது.
பான் கீ மூனின் உதவிச் செயலாளர் இலங்கை வருகிறார்!
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 03:36.01 PM GMT ]
ஏதிர்வரும் 4ம் திகதி முதல் 10ம் திகதி வரை அவர் இலங்கையில் தங்கியிருப்பார்.
அவருடன் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்ட ஆசிய பசுபிக் நிர்வாகியும் பணிப்பாளரும் இலங்கைக்கு வருகின்றனர்.
இதன்போது ஐக்கிய நாடுகளின் உதவிச்செயலாளர் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரை சந்திக்கவுள்ளார்.
புதிய அரசியல் சூழ்நிலை மற்றும் ஐக்கிய நாடுகளின் ஆதரவு என்பன தொடர்பில் அவர் பேச்சுவார்த்தையை நடத்துவார்.
இதனைத்தவிர அவர் வடக்கு, வடமத்திய மாகாணங்களுக்கும் விஜயம் செய்யவுள்ளார்.
சிங்கள மொழிக் கொள்கையே இயல்பற்ற சூழ்நிலையை உருவாக்க காரணம்: லீ குவான் யூ
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 03:51.51 PM GMT ]
அவர் கடந்த வாரம் மறைந்துபோன நிலையிலேயே அவருடைய கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
1956ஆம் ஆண்டு தாம் இலங்கைக்கு வந்து கோல்பேஸ் ஹோட்டலில் தங்கியிருந்தமை, உட்பட்ட விடயங்களை அவர் குறிப்பேட்டில் எழுதியுள்ளார்.
எஸ் டபில்யூ ஆர் டி பண்டாரநாயக்கவுடன் இணைந்து உணவருந்தியமை, டட்லி சேனாநாயக்கவும் கோல்ப் விளையாடியமை போன்றவைகளை குறிப்பிட்ட அவர், உலகில் முதல் பெண் பிரதமரான ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க கடுமையானவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
லண்டனில் இருந்து இலங்கைக்கு 1956ஆம் ஆண்டு சென்ற தாம், கொழும்பின் பல கட்டிடங்களை பார்க்கின்றபோது அவை போரினால் பாதிக்கப்பட்டிருக்கவில்வைல என்று தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் அதே ஆண்டு சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்பே டயஸ் பண்டாரநாயக்க சிங்கள மொழியை தேசிய மொழியாக பிரகனப்படுத்தினார்.
இதுவே இலங்கையின் இயலாமைக்கு முதல் காரணமாக அமைந்துவிட்டது என்று லீ குவான் யூ சுட்டிக்காட்டியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp1I.html
Geen opmerkingen:
Een reactie posten