மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பஸ்கா பண்டிகையில் ஜனாதிபதி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம் இப்பண்டிகையை ஏற்பாடு செய்துள்ளது.
மட்டக்களப்பு போதகர் ஒன்றியம் இப்பண்டிகையை ஏற்பாடு செய்துள்ளது.
போதகர் ஒன்றியத்தின் தலைவர் குகன் இராசதுரை தலைமையில் நடைபெற்ற இப்பண்டிகை விழாவில் அமைச்சர் ரவூப் ஹக்கீம், கிழக்கு முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர அஹமட், பிரதியமைச்சர் அமீர் அலி உட்பட பல முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கெண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று ஆரம்பமாகிய இந்த பஸ்கா பண்டிகை நாளை வரை நடைபெறவுள்ளது.
இலங்கையில் நடைபெறும் 3வது பஸ்கா பண்டிகை இதுவாகும்.முன்னர் கொழும்பு கண்டி ஆகிய மாவட்டங்களில் இப்பண்டிகை இடம்பெற்றுள்ளன.
ஒரு நாட்டை கட்டியெழுப்ப மதக்கோட்பாடு அவசியம் மட்டுவில் ஜனாதிபதி
இந்த நாட்டில் அனைத்து மக்களுக்கும் அவர்கள் சார்ந்த மத உரிமை மத சுதந்திரமுண்டு.அவர்கள் தமது மதத்தை பின் பற்றுவதற்கான அனைத்து உரிமைகளும் உண்டு.
ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்கு மதக்கோட்பாடும் முக்கியமாகும்.பல மொழி பேசுகின்ற பல விதமான மக்களையும் பின் பற்றுகின்ற அனைத்து மக்களையும் ஒன்றினைத்து அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தி நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்த நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையை எமது அரசாங்கம் செய்து வருகின்றது. சகவாழ்வையும் சகோரத்துவத்தையும் கட்டியெழுப்ப வேண்டும்.
நல்ல சமூகத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டும். நீண்ட கால யுத்தத்தினால் நாம் அனைவரும் பல கஷ்டங்களை அனுபவித்தோம்.
மீண்டும் அவ்வாறான ஒரு யுத்தம் வருவதற்கு நாம் இடமளிக்க கூடாது.மத நம்பிக்கையின் மூலமும் நியாயமான நிலைமையை ஏற்படுத்தல், வறுமையை இல்லாதொழித்தல் கல்வி வளத்தை அதிகரித்தல் எல்லா பிரஜைகளுக்கும் கௌரவத்தை ஏற்படுத்தல், நல்ல பொருளாதார நிலையை ஏற்படுத்தல் போன்றவற்றால் மூலமுமே நாம் மீண்டும் இந்த நாட்டில் யுத்தம் ஏற்படுவதை தடுக்கமுடியும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr2A.html
Geen opmerkingen:
Een reactie posten