தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் இரத்து! ஆளுநர் செயலகம் விளக்கம்

வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்ற விடயத்தில் ஆளுநர் சட்டத்திற்கு மாறான வகையில் தலையீடு செய்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என வடமாகாண ஆளுநர் செயலகம் தெரிவித்திருக்கின்றது.
குறித்த விடயம் தொடர்பில் ஆளுநர் செயலகம் இன்றைய தினம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வடக்கு மாகாண சபையின் கீழ் கடமையாற்றும் சில சிரேஷ்ட அதிகாரிகளின் இடமாற்றங்கள் பிற்போடப்பட்டமை பற்றி ஊகத்தின் அடிப்படையிலான தவறான செய்திக் கட்டுரை அல்லது செய்தி அறிக்கையிடல் வெவ்வேறு செய்தி ஊடகத்தில் வெளியாகியுள்ளமை வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
போதியளவு அனைத்து அம்சங்களையும் ஆலோசிக்காமலும், கருத்திலெடுக்காமலும் இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என சுட்டிக்காட்டப்பட்டுள்ளதனால் இவ்விடயங்கள் தொடர்பான மீளாய்விற்கும் ஆலோசனைக்கும் கால அவகாசம் கொடுக்கும் வகையில் மேற்சொன்ன இடமாற்றங்கள் ஆளுநரினால் பிற்போடப்பட்டுள்ளன.
வடக்கு மாகாண சபையின் பேரவைத் தலைவர் உட்பட சம்பந்தப்பட்ட அக்கறையுள்ள தரப்பினரால் மேற்படி இடமாற்றங்கள் தொடர்பில் கரிசனைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை வாரியத்தினால் சம்பந்தப்பட்ட தரப்புகளின் மத்தியில் மீளாய்வும் ஆலோசனைகளும் மேற்கொள்ளப்பட்டு இணக்கம் காணப்படும் சிபாரிசுகளுக்கு அமைவாக, சுமுகமான சேவைச் சூழலை இலகுபடுத்தும் வகையில் அவசியமான இடமாற்றங்கள் அமுலுக்கு வரும்.
அவ்வாறான நியமனங்களை மேற்கொள்வதற்கு சட்டபூர்வமான ஆணை வழங்கப்பட்ட அதிகாரத்தரப்பாக மாகாண ஆளுநர் விளங்கும்போது, இந்த சம்பவம் தொடர்பில் "வடக்கு மாகாண சபை விவகாரங்களில் சட்டத்திற்கு முரணாக ஆளுநர் தலையிடுகிறார்" என்ற ரீதியில் கூறமுற்படுவது முற்றிலும் ஆதாரமற்றதும் தவறான திசைதிருப்பலும் ஆகும்.
இந்த இடமாற்ற விடயத்தில் ஆளுநருடைய முயற்சியானது வட மாகாண சபையில் பரஸ்பரம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் தீர்மானங்களை உருவாக்குவதற்கு அனுசரணை வழங்கும் நோக்கத்தை உண்மையில் கொண்டதாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அமைச்சுக்களின் செயலாளர்கள் இடமாற்றம் தொடர்பில் அவற்றை நிறுத்தவோ, மாற்றம் செய்யவோ எந்தவிதமான சிபார்சுகளையும் நான் செய்யவில்லை என மாகாணசபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பில்,
பாதிக்கப்பட்ட உத்தியோகஸ்த்தர்கள் என கூறி ஒப்பமிடாது தமது குறைபாடுகள் தொடர்பாக ஜனாதிபதிக்கு எழுதிய மனுவின், பிரதி ஒன்றை எனக்கும் அனுப்பியிருந்தனர்.
இந்தக் கடிதத்தில் எனது பொதுவான கருத்தை தெரிவித்து முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தேன். அதன் பிரதி ஆளுநருக்கும் அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் எந்த இடத்திலும் இந்த இடமாற்றங்களை மாற்றவோ, இடைநிறுத்தவோ வேண்டும் என நான் சிபார்சு செய்யவில்லை.
மேலும் இடைநிறுத்த உத்தரவு 31.03.2015ம் திகதியே வழங்கப்பட்டது. எனது கடிதம் 01.04.2015ம் திகதியே அளுநருக்கு அனுப்பப்பட்டிருந்தது. இந்த இடமாற்றங்களிலோ, அல்லது அவற்றின் இடைநிறுத்தங்களிலோ எனது வகிபாகம் எதுவும் இல்லை என அதில் அவைத்தலைவர் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்தி-
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr1H.html



Geen opmerkingen:

Een reactie posten