தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

ஹைட்பாக்கில் பேரணி நடத்தி கட்சியை அசிங்கப்படுத்த வேண்டாம்: மகிந்த கோரிக்கை



மீனவர் பிரச்சினை தொடர்பில் இலங்கை ஜனாதிபதியை அழைத்து பேசுங்கள்: தொல்.திருமாவளவன்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 09:33.09 AM GMT ]
இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கிருக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும் தமிழக மீனவர் பிரச்சனையில் ஆதாயம் தேட முனைந்துள்ளன. அதனால் தமிழக மீனவர்களின் துயரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்திட தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை கடற்பரப்பில் வைத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை கண்டித்து ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
அவ்வறிக்கை வருமாறு,
தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்வதும், அவர்களது படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாகி வருகிறது. நேற்று மீன் பிடிக்கச் சென்ற நாகை மாவட்டம், அக்கரைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 37 மீனவர்களையும் அவர்களது 5 படகுகளையும் இலங்கைக் கடற்படையினர் வளைத்துப் பிடித்துச் சென்றுள்ளனர்.
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். பிடித்துச் செல்லப்பட்ட மீனவர்களையும் படகுகளையும் உடனே விடுவிக்க வேண்டுமென இலங்கை அரசை வலியுறுத்துகிறோம்.
மார்ச் மாத இறுதியில் இலங்கை-தமிழக மீனவர்களுக்கிடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது தமிழக மீனவர்களின் சார்பில் முன்வைக்கப்பட்ட ஏழு அம்சக் கோரிக்கைகளைப் பரிசீலித்து முடிவைத் தெரிவிப்பதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இதனிடையே, அண்மையில் இது குறித்துப் பேசிய இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தமிழக மீனவர்களைக் கைது செய்யவும், படகுகளைப் பறிமுதல் செய்யவும் உத்தரவிட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
சுமூகமாக நடைபெற்றுவந்த பேச்சுவார்த்தையைச் சீர்குலைக்கும் வகையில் அவரது பேச்சு அமைந்திருந்தது. அதை இந்திய அரசு கண்டிக்கவோ, அதற்கு மறுப்புத் தெரிவிக்கவோ இல்லை.
அதன் காரணமாகவே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையின் தாக்குதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீனவர் பிரச்சனையை உடனடியாகத் தீர்த்து விடுவோம் என்று தேர்தல் நேரத்தில் வாய்ச்சவடால் பேசிய பா.ஜ.க.வினர் இப்போது மௌனம் காப்பது ஏன் எனத் தெரியவில்லை.
மீனவர் பிரச்சனைக்குத் தீர்வு காண தமிழகத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்துவதற்குத் தயாராக இருக்கிறேன் என இலங்கை ஜனாதிபதி கூறியிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனவே, தமிழக அரசு முன்முயற்சி எடுத்து இலங்கை ஜனாதிபதியை தமிழ்நாட்டிற்கு வரவழைத்து, மீனவப் பிரதிநிதிகளின் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது என அவர் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr0G.html

ஊழல்களை மறைக்க நாடு பூராகவும் பேரணி நடத்தும் மகிந்த!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 10:11.47 AM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினூடாக தனக்கு நெருக்கமான உறுப்பினர்களை பாராளுமன்றத்திற்குள் இணைத்துக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த எதிர்பார்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மகிந்த ராஜபக்ச ஒரு போதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினை பிளவுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள மாட்டார். பொது தேர்தலின் பின்னர் அதிகாரத்தை பெற்றுக்கொள்வதே அவரது நோக்கம் எனவும் மகிந்தவிற்கு நெருக்கமான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் சிங்கள ஊடகமொன்றிற்கு தெரிவித்துள்ளார்.
எப்படியிருப்பினும் மகிந்த ராஜபக்சவை கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக நியமிக்குமாறு வலியுறுத்தி பல்வேறு மாவட்டங்களில் இடம்பெறும் பேரணிகளுக்கு மகிந்த ராஜபக்சவின் முழுமையான ஆதரவு கிடைப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் குடும்பத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊழல் மோசடி குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதனை தடுக்கும் வகையில், புதிய ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் மகிந்த ராஜபக்ச நாடு பூராகவும் பேரணிகளை நடத்துவதாக ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன்  தனது அடையாளங்களை வெளிப்படுத்த வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றில் தன்னிச்சையாக செயற்பட தயாராகும் மகிந்தவின் சகாக்கள்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 10:45.12 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு நெருக்கமான சிலர் பாராளுமன்றத்தினுள் தன்னிச்சையாக செயற்பட  தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில், பந்துல குணவர்தன தலைமையில் இரகசியமான கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றுவருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக இடம்பெறவுள்ள ஒழுக்காற்று விசாரணை தொடர்பாகவும் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் இரத்தினபுரியில் இடம்பெற்ற பேரணியில் கலந்துக்கொண்ட உறுப்பினர்கள் பலரும், இரகசிய கலந்துரையாடலில் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹைட்பாக்கில் பேரணி நடத்தி கட்சியை அசிங்கப்படுத்த வேண்டாம்: மகிந்த கோரிக்கை
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 11:52.42 AM GMT ]
சிறிய மைதானமாக காணப்படும் ஹைட்பாக்கில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பேரணியை நடத்தி கட்சிக்கு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.
இம்முறை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மே தின பிரதான ஒருங்கிணைப்பாளர் மகிந்த அமரவீரவிடம் அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார் எனவும்,
முன்னாள் ஜனாதிபதியின் இவ் ஆலோசனையை கட்சி தலைவரின் கவனத்திற்கு மகிந்த அமரவீர கொண்டு சென்றுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2015ம் ஆண்டிற்கான மேதின கொண்டாட்டங்களை ஹைட்பாக் மைதானத்தில் நடத்துவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தீர்மானமொன்றை மேற்கொண்டது.
இந்நிலையிலேயே சிறிய மைதானங்களில் மேதின கூட்டங்களை நடத்தி கட்சியின் நற்பெயருக்கு சேறு பூச வேண்டாம் பெரிய மைதானமொன்றை தெரிவு செய்து பேரணி நடத்துமாறு முன்னாள் ஜனாதிபதி கேட்டு கொண்டுள்ளார்.
அத்துடன் தானும் கட்சியின் ஆலோசகர் எனும் காரணத்தினாலேயே இவ்வாறு ஆலோசனை வழங்கியதாகவும்,
கட்சி உறுப்பினர்கள் விரும்பியது போன்று பேரணியை நடத்துமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உரிய தரப்பினரிடம் கேட்டு கொண்டுள்ளார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr1F.html

Geen opmerkingen:

Een reactie posten