மகிந்த அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த டக்ளஸ் தேவானந்தா இலங்கை நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபைக்கு செலுத்த வேண்டிய பல லட்சம் ரூபா நீர் கட்டணத்தை மக்கள் மீது சுமத்தியுள்ளதாக தெரியவருகிறது.
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு-5, பார்க் வீதியிலும் கொழும்பு-4, லேயாஸ் வீதியிலும் இரண்டு வீடுகள் உள்ளன.
இந்த வீடுகள் இரண்டுக்குமான தண்ணீர் கட்டணமாக 2010 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் செலுத்தப்பட வேண்டியிருந்தது.
10-13-856-135-14 என்ற புதிய கணக்கு இலக்கமாக மாற்றப்பட்டிருந்ததுடன் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் செலுத்த வேண்டிய முழு கட்டணம் 1 கோடியே 19 இலட்சத்து 88 ஆயிரத்து 267 ரூபா 95 சதமாக அதிகரித்திருந்தது.
இந்த நிலையில், திடீரென அரசியல் அதிகாரம் ஒன்றினால் செலுத்த வேண்டிய இந்த கட்டணத்தில் இருந்து 7 இலட்சத்து 78 ஆயிரத்து 483 ரூபா 50 சதமாக குறைக்கப்பட்டுள்ளது.
செலுத்த வேண்டிய தொகை 48 லட்சமாக குறைக்கப்பட்டது.
லேயாஸ் வீதி வீட்டின் தண்ணீர் கட்டணம் 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தண்ணீர் கட்டண கணக்கிற்கு அமைய 22 இலட்சத்து 38 ஆயிரத்து 694 ரூபா 76 சதமாக இருந்தது.
அதுவும் அரசியல் தலையீட்டின் ஊடாக 10 லட்சமாக குறைக்கப்பட்டது.
எவ்வாறாயினும் இந் நடவடிக்கைகளின் போது நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தனவின் அமைச்சின் கீழ் இருந்தது.
அத்துடன் நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் தலைவராக கருணாசேன ஹெட்டியாராச்சி என்பவர் பதவி வகித்தார்.
அவர் 6 நீர் வழங்கல் திட்டங்கள் ஊடாக 2 ஆயிரம் கோடி ரூபாவை மோசடி செய்தவர் எனக் கூறப்படுகிறது.
சிறையில் இருக்க வேண்டிய அவர், தற்போது நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் செயலாளராக இருப்பதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாக இருந்த போதும் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் 88 லட்சம் ரூபா தண்ணீர் கட்டணத்தின் நஷ்டத்தை இலங்கை மக்கள் சுமக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr1G.html
Geen opmerkingen:
Een reactie posten