[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 04:27.01 AM GMT ]
அவர் இன்றைய தினம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கும் உதவிச் செயலாளர், பலதரப்பட்டவர்களுடன் சந்திப்பில் ஈடுபடுவார்.
ஆட்சி மாற்றத்தின் பின்னர் இலங்கையில் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களுக்கான தேவைகளை இனங்காண்பது குறித்து அரசின் சிரேஷ்ட அதிகாரிகள், அபிவிருத்திப் பங்காளிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுடன் கலந்துரையாடவுள்ளார்.
ஐ.நா உதவி பொதுச் செயலாளர், வட மத்திய மற்றும் வட மாகாணங்களுக்கும் விஜயம் செய்வதற்கு தீர்மானித்துள்ளார் எனவும்,
குறித்த மாகாணங்களிலுள்ள அரசின் உயரதிகாரிகள், பிரஜைகள் குழுக்களின் பிரதிநிதிகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்களின் பயனாளிகளையும் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை விமானம் மூலம் மீட்க சீனா நடவடிக்கை
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 04:45.32 AM GMT ]
பஹ்ரேனுக்கு அழைத்து செல்லும் இலங்கையர்களை சொந்தமான விமானத்தின் மூலம் தாய்நாட்டிற்கு அழைத்து வர திட்டமிட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
யேமனில் இடம்பெறும் பதற்றநிலை காரணமாக 91 இலங்கையர்கள் நிர்க்கதியாகியுள்ளனர் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
யேமன் வான்பரப்பில் சீன விமானங்கள் பயணிப்பதற்கு இதுவரை அனுமதி வழங்கப்படாத காரணத்தினால் இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரும் செயற்பாடுகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையிலும் நிர்க்கதியான 3 இலங்கையர்கள் நேற்று நாடு திரும்பியதுடன், அவர்கள் தனிப்பட்ட ரீதியில் நாட்டிற்கு திரும்பியுள்ளனர் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிரதி பொது முகாமையாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
யேமனிலிருந்து பாதுகாப்பாக வெளியேறிய 08 இலங்கையர்கள்
யேமனில் மோதல்களினால் நிர்க்கதியாகியுள்ள இலங்கையர்களில் 08 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் பொது தொடர்பு பிரிவு பணிப்பாளர் சத்யா ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வெளியேற்றப்பட்ட இலங்கையர்கள் மூவர் தற்பொழுது ஆபிரிக்கா, ஜிபூட்டி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாகவும் ஏனைய 05 பேர் குறித்த நகரத்தை நெருங்கிக்கொண்டிப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
யேமனில் சிக்கியுள்ள இலங்கையர்களை விமானம் அல்லது கடல் வழியாக அந்நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் 87 இலங்கையர்கள் யேமனில் இருப்பதாக தகவல் வெிளியாகியுள்ளது.
இரு அரசியலமைப்பு திருத்தங்கைளை சமர்ப்பித்து பாராளுமன்றை கலைக்க ஐ.தே.க. திட்டம்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 05:05.01 AM GMT ]
ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களுக்கிடையில் கடந்த வியாழக்கிழமை சிறிகொத்தவில் இடம்பெற்ற கூட்டத்தின் போதே இது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பாராளுமன்றத்தில் இம்மாத இறுதிக்குள் குறித்த இரு அரசியலமைப்புக்களையும் ஒருமித்து சமர்ப்பித்து, பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசிய கட்சி தீர்மானித்துள்ளது.
20வது அரசியலமைப்பில் தேர்தல் முறைமையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளல், கலப்பு தேர்தல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தல் உள்ளிட்ட யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஐக்கிய தேசிய கட்சி புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு உடன்பட்ட போதிலும் எதிர்வரும் 23ம் திகதியின் பின்னர் இந்த அரசாங்கம் ஆட்சியமைப்பதற்கு எவ்வித அதிகாரமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
பாராளுமன்றத்தை இம்மாதம் கலைப்பதாயின் சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டும் எனவும், புதிய தேர்தல் முறைமையில் எதிர்வரும் பொது தேர்தலை நடத்துவதற்கான காலம் போதாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் பல்வேறு வழிகளிலும் முன்னேற்றங்களை எட்டியுள்ளது, இது தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தனது கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தேசிய நிறைவேற்று சபை கூட்டத்தின் போது மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அநுரகுமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 19வது அரசியலமைப்பிற்கு ஆதரவு வழங்குவதாக தெரிவித்துள்ளார் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி 19வது அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ள தேசிய நிறைவேற்று சபையும் ஆதரவு தெரிவித்துள்ளது என பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை தேர்தல் முறைமையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டதன் பின்னரே 19வது அரசியலமைப்பு அமுல்படுத்தப்பட வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkryE.html
Geen opmerkingen:
Een reactie posten