தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

தமிழகத்தில் மைத்திரியின் கொடும்பாவியை எரிக்க முயன்ற 10 பேர் கைது

வத்தளையில் கைத்துப்பாக்கியுடன் மூன்று பேர் கைது!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 05:16.58 AM GMT ]
வத்தளையில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டக்களும், ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வத்தளை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மூலம் இவை மீட்கப்பட்டுள்ளன.
வத்தளை புனித அன்னம்மாள் கல்லூரிக்கு அருகில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் கைத்துப்பாக்கி ஒன்றும் அதற்கான தோட்டக்களும், ஒரு கைக்குண்டும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முச்சக்கர வண்டி மற்றும் வான் ஒன்றையும் சோதனையிட்ட போது 0.38 ரக கைத்துப்பாக்கியும் ஏனைய வெடிப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
அவற்றை வாகனங்களில் எடுத்துச் சென்ற 23 மற்றும் 35 வயதுக்குட்பட்ட மூன்று இளைஞர்கள் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றச் செயல் ஒன்றில் ஈடுபடும் நோக்கில் இவ்வாயுதங்களுடன் குறித்த இளைஞர்கள் சென்ற போதே, கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் இன்று வத்தளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.

இலங்கையர்களுடன் செங்கடலில் பயணிக்கும் இரகசிய கப்பல்கள்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 05:54.04 AM GMT ]
அவன்கார்ட் பாதுகாப்பு நிறுவனம் சர்வதேச ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் வெளிநாடுகளில் செயற்படும் பல்வேறு அமைப்புகளுக்கு ஆயுதங்களை விநியோகித்தமை தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
எகிப்திற்கு அருகில் செங்கடல் பகுதியில் இந்த பாதுகாப்பு நிறுவனத்திற்கு சொந்தமான களஞ்சியங்களுடன் கூடிய இரு கப்பல்கள் இருப்பதாக, இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் பாதுகாப்பு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த இரண்டு கப்பல்களில் ஒன்று சவூதி அரேபியாவின் ஜெட்டா (Jeddah) நகருக்கு அருகில் உள்ள கடலில் நங்கூரமிட்டுள்ளது
ஆயுத களஞ்சியங்களை கொண்ட இந்த கப்பல்கள் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் இயங்கும் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் விநியோகிக்கப்பட்டனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அத்துடன் இந்த இரண்டு கப்பல்கள் மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவன்கார்ட் நிறுவனத்தில் பணியாற்றிய 15 அதிகாரிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதேவேளை குறித்த நிறுவனம் நைஜீரியாவின் பொக்கோ ஹாராம் தீவிரவாதிகளுக்கும் ஆயுதங்களை விநியோகித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேபோல் மாலைதீவு அரசாங்கத்தை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சருக்கு, அவன்கார்ட் நிறுவனத்தின் பணிப்பாளர் நிஷ்சங்க சேனாதிபதியே கடற்படை புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசகராக இருந்தார்.
இதனால், மேற்படி சதித்திட்டத்திற்கு தேவையான ஆயுதங்களை சேனாதிபதி வழங்கியிருக்கலாம் என்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இவை குறித்து பாதுகாப்பு தரப்பினர் விரிவான விசாரணைகளை நடத்தி வருவதுடன் அதனை சர்வதேச மட்டத்தில் விரிவுப்படுத்தியுள்ளனர்.


தமிழகத்தில் மைத்திரியின் கொடும்பாவியை எரிக்க முயன்ற 10 பேர் கைது
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 05:56.21 AM GMT ]
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கொடும்பாவியை எரிக்க முயற்சித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் உறுப்பினர்கள் 10 பேரை இந்திய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் தமிழக மீனவர்கள் வந்தால் கைது செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே கொடும்பாவி எரிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் தஞ்சாவூரின் வடக்கு மாவட்ட செயலாளரினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் உறுப்பினர்களே கொடும்பாவியை எரிக்க முற்பட்டுள்ளனர்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியதை போலவே கடந்த நாட்களில் கூறியிருந்தார் என்றும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் குறிப்பிட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkryJ.html

Geen opmerkingen:

Een reactie posten