[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 02:49.40 AM GMT ]
விமானங்களை யேமனுக்குள் தரையிறக்க முடியாத நிலை காணப்படுவதே இந்த சிக்கல் நிலைக்கு பிரதான காரணம் எனக் கூறப்படுகின்றது.
அங்கு ஏற்பட்டுள்ள யுத்த சூழ் நிலையினால் தரை மார்க்கமாகவோ, கடல், வான் மார்க்கமாகவோ நாட்டை விட்டும் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
எது எவ்வாறிருப்பினும், இந்தியாவும், சீனாவும், இந்தோனேசியாவும் அங்கு சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க உதவ முன்வந்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.
புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு கிளர்ச்சிக் குழுக்களுக்கு விற்பனை?
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 02:59.06 AM GMT ]
இறுதிக்கட்ட போரின் பின்னர் புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள் வெளிநாட்டு ஆயுத குழுக்களுக்கு விற்கப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இது குறித்து மோசடி தடுப்பு விசாரணை குழுவும், குற்ற புலனாய்வு பிரிவினரும் விசாரணை நடத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
உக்ரேன் இலங்கை தூதுவர் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதம் வழங்கிய விடயம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. அவரை தேடி வருகிறோம். இது குறித்து உக்ரேன் அரசு எமக்கு அறிவித்துள்ளது.
இலங்கையிலும் அண்மையில் ஆயுதக் கப்பல்கள் பிடிக்கப்பட்டன. வேறு நாட்டு அரசாங்கங்களுடன் ஆயுத கொடுக்கல் வாங்கல் செய்ததாக கோத்தபாய கூறியிருந்தார்.
நைஜீரியாவுக்கு ஆயுதம் வழங்கியதாகவும் கூறப்பட்டது. ஆனால், நைஜீரிய போகோஹராம் அமைப்பிற்கு ஆயுதம் வழங்கியதாக சந்தேகம் இருக்கிறது.
இறுதிக்கட்ட யுத்தத்தின் போது புலிகளிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதம் மற்றும் நகைகளுக்கு என்ன நடந்தது என தகவல் கிடையாது.
இவை வேறு நாட்டு ஆயுத குழுக்களுக்கு கடல் நடுவில் வைத்து விற்கப்பட்டதா என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சி.ஐ.டி. மோசடி தடுப்பு விசாரணை குழு என்பன விசாரணை நடத்தி வருகிறது.
உக்ரேன் தூதரக ஊழியரின் மரணம் குறித்தும் விசாரணை நடைபெறுகிறது. அவரது பிரேத பரிசோதனை கிடைக்கும் வரை காத்திருக்கிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkq7I.html
காணாமற்போனோர் ஆணைக்குழு அமர்வு அம்பாறையில்: புறக்கணிக்குமாறு சிவில் சமூகம் வேண்டுகோள்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 03:51.45 AM GMT ]
இவ்விசாரணை எதிர்வரும் திங்கட்கிழமையிலிருந்து வியாக்கிழமை வரை தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெறவுள்ளது.
அந்த வகையில் 06ஆம் மற்றும் 07ஆம் திகதிகளில் கல்முனை பிரதேச செயலாளர் பிரிவிலும் 08ஆம் மற்றும் 09 ஆம் திகதிகளில் ஆலையடி வேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலும் அமர்வுகள் நடைபெறவுள்ளது.
இதேவேளை காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைகுழு அமர்வுகளில் பொது மக்கள் சென்று சாட்சியமளிப்பதை புறக்கணிக்குமாறு தமிழ் சிவில் சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்ஆணைக்குழு கடந்த ஜனைவரி மாதம் தமது பகிரங்க விசாரணைகளை ஆரம்பித்தது.
அந்தவகையில் அம்பாறை தவிர்ந்த வடக்கு,கிழக்கில் உள்ள ஏனைய மாவட்டங்களில் விசாரணைகளை மேற்கொண்டு சாட்சியங்களை பதிவு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkryB.html
Geen opmerkingen:
Een reactie posten