[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 06:07.35 AM GMT ]
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியை தற்போது பீடித்திருக்கும் காய்ச்சல் மருந்தினால் குணமாகாது எனவும், பதவியொன்றை வழங்கினால் மாத்திரமே குணமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் தன்னை நிராகரித்து விட்டார்கள் என்ற யதார்த்தத்தை மஹிந்த ராஜபக்ச ஏற்க மறுத்து வருகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் அனாதைகளான விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோரே மஹிந்தவை போற்றிப் புகழ்ந்து வருகின்றனர்.
மஹிந்த ஆட்சியில் இருந்தால் மாத்திரமே தமக்கு அரசியல் எதிர்காலம் உண்டு என்பதனை புரிந்து கொண்டமையினால் இவ்வாறு மகிந்தவுக்கு பின்னால் போலியாக கோஷமெழுப்பி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கடந்த காலங்களில் ஓய்வு பெற்ற முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் தமது ஓய்வின் பின்னர் நேர்மையானவர்களாக நடந்து கொண்டு வருகின்றார்கள். ஆனால் மஹிந்த ராஜபக்ச கொஞ்சம் கூட நேர்மையான செயற்பாடுகளில் ஈடுபடவில்லை என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை வரலாற்றிலேயே முன்னாள் ஜனாதிபதிகளில் மஹிந்த மாத்திரமே மக்களால் தோற்கடிக்கப்பட்ட ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 33 பேர் யாழ்.கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பு- இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 06:36.59 AM GMT ]
யாழ்.குடாநாட்டின் நெடுந்தீவு கடற்பகுதியில் வைத்து எல்லைத்தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் 5 இந்திய இழுவைப் படகுகளையும். 33 இந்திய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் நேற்றைய தினம் கைது செய்திருந்தனர்.
குறித்த இந்திய மீனவர்கள் 33பேரும் தமிழகத்தின் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மேற்படி மீனவர்கள் இன்றைய தினம் யாழ்.கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திடம், ஒப்படைக்கப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
நேற்று முன்தினம் கொழும்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பினருக்கும், ஜனாதிபதிக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் எல்லைதாண்டும் இந்திய மீனவர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி கடற்படைக்கு பணிப்புரை விடுத்திருந்ததனால், உடனடியாக இந்தக் கைது இடம்பெற்றிருக்கின்றது.
இதேவேளை இன்றைய தினம் ஒப்படைக்கப்பட்ட, இந்திய மீனவர்கள் ஊடகவியலாளர்களுடன் பேசுகையில், வழமைப் போன்றே தாம் திசைமாறி இலங்கை கடற்பகுதிக்குள் வந்துவிட்டதாக தெரிவித்ததுடன், கைது செய்தபோது இலங்கை கடற்படை தம்மை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மீனவர்கள் 06 பேர் இந்தியாவில் கைது: தொடர்கதையாக நீடிக்கும் மீனவர் பிரச்சினை
இந்திய கடல் எல்லையில் அத்துமீறி பிரவேசித்த, இலங்கை மீனவர்கள் ஆறு பேர் இந்திய நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன் போது இலங்கை மீனவர்கள் பயணித்த படகுகளும், குறித்த அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது, இவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சென்னையிலிருந்து 150 மைல்கல் தொலைவில் உள்ள இந்திய கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணையை இந்திய கடற்பரப்பு பாதுகாப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkrzB.html
அரசியல் அநாதைகளுக்கு மீண்டும் அரசியலில் இடமளிக்க வேண்டாம்: ரில்வின்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 06:41.36 AM GMT ]
பதுளையில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அநேக தரப்பினர் பல்வேறு கோஷங்களுடன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் ஆட்சிக்கு வந்த போதிலும் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எந்த நன்மையும் ஏற்படவில்லை.
அத்துடன் அரசியல் ரீதியாக அநாதைகளாக்கப்பட்டுள்ள தரப்பினர் மீண்டும் அரசியலுக்குள் பிரவேசிப்பதற்கு தற்போதைய அரசாங்கம் இடமளிக்கக் கூடாது.
பொதுத் தேர்தலுக்கு செல்ல அச்சம் கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றுவதில் தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இதனை தோற்கடிக்க வேண்டியது மக்கள் மாத்திரமல்ல, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் கடமை என ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
யாழ்.குடிநீர் மாசு அவலம்: சர்வதேச ஆய்வு அறிக்கை இம்மாத இறுதியில்!
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 07:00.40 AM GMT ]
தூய நீர், பெற்றோலியப் பொருட்கள், சூழல் மாசடைதல், நிலத்தடி நீர் மற்றும் உடல்நலம் போன்ற துறைகளில் நீண்ட கால அனுபவம் உள்ள அவுஸ்திரேலிய மற்றும் வடஅமெரிக்க நிபுணர் குழு ஒன்று விரைவில் தமது விஞ்ஞான ரீதியான அறிக்கையை வெளியிடுகிறது.
விஞ்ஞான ரீதியான ஆய்வுகளின் அடிப்படையில், சர்வதேச தரம் மிக்க இரசாயனவியல் பகுப்பாய்வு நிலையங்களில் (இலங்கை மற்றும் சிங்கப்பூர்) நடைபெற்ற சோதனை முடிவுகளை இந்த அறிக்கை உள்ளடக்கியதாக இருக்கும்.
மேலதிகமாக, குடிநீர் மாசு தொடர்பில் பல தரப்பினர் பல்வேறு முரண்பட்ட தகவல்களை வழங்கி மக்களைக் குழப்பத்திற்குள்ளாக்கி வரும் இந்த நிலையில்,
இந்த சர்வதேச நிபுணர் குழு, யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக நீர்த்தரம் குறித்த தரவுகளைத் திரட்டிய அனைவரையும் அணுகி அவர்கள் மேற்கொண்ட விஞ்ஞான ஆய்வு அறிக்கைகளைத் தம்மிடம் வழங்குமாறு கேட்டுள்ளனர்.
இந்த அறிக்கைகளை ஒன்றுதிரட்டி வெளியிடும் தேவையையும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
யாழ் குடிநீர் மாசு அவலம், ஒருமுகப்பட்ட விஞ்ஞான ரீதியாக அணுகப்படாமல் உணர்வுபூர்வமானதும் அரசியல் மற்றும் தனிப்பட்ட பிரச்சினைகளாலுமான குறுகிய வட்டத்தினுள் சிக்கி இன்னும் தெளிவு காணப்படாமல் இருப்பது கவலைக்குரியது.
இந்த சர்வதேச ஆய்வு அறிக்கை உள்ளூர்க் குழப்பங்களை தவிர்த்து, அனைவரையும் ஒரு தீர்வை நோக்கி, ஒற்றுமையாக செயற்பட வழிவகுக்கும் என புத்திஜீவிகள் எதிர்பார்க்கின்றனர்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkrzD.html
Geen opmerkingen:
Een reactie posten