[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 07:31.25 AM GMT ]
அவர் இன்றைய தினம் இந்திய ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பது தொடர்பில் 40 வருடங்களுக்கும் மேலாக பிரச்சினைகள் நீடித்து வருகின்றன.
கச்சதீவை இலங்கைக்கு தாரைவார்த்த பின்னரே இந்த பிரச்சினை மிகவும் தீவிரமடைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியதுடன்,
இதற்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24ம் திகதி சென்னையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வருடமொன்றிற்கு 83 நாட்கள் மாத்திரம் இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து எல்லை தாண்டும் மீனவர்களை கைது செய்யுமாறு நேற்று முன்தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் கடற்படையினருக்கு உத்தரவிட்டிருந்தார்.
இதன் முதற்கட்ட நடவடிக்கையாக நேற்றைய தினம் 33 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினராலும், 6 இலங்கை மீனவர்கள் இந்திய கடற்படையினராலும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையிலேயே இருநாட்டு மீனவர்களுக்கும் வங்ககடலில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு உரிமையுண்டு என இந்திய அரசாங்கம் இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு வலியுறுத்த வேண்டும் எனவும்,
அவ்வாறு வலியுறுத்தும் சந்தர்ப்பத்தில் அவர்களால் மறுப்பு தெரிவிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கை, இந்திய மீனவர்களுக்கு இடையில் எத்தனை தடவைகள் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும் இந்த பிரச்சினை தொடர்கதையாகவே அமைந்துள்ளது என திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தொடர்கதையாக அமைந்துள்ள மீனவ பிரச்சினைக்கு இந்திய மீனவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து இலங்கை ஜனாதிபதியுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும்,
இந்திய மத்திய அரசு தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திடும் வழிவகைகளுக்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டுள்ளார்.
இந்த முயற்சிகளை இந்திய அரசாங்கம் இதுவரை மேற்கொள்ளாமல் அசமந்த போக்கில் செயற்படுவது தமிழக மீனவர்களை மிகவும் வேதனைக்குள் தள்ளியுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்திய அரசாங்கம் முயற்சித்தால் ஐ.நா அமைப்பினால் உருவாக்கப்பட்ட சர்வதேச நீதிமன்றத்தில் முறையிட்டு இந்த உரிமையை நிலைநிறுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறு செய்யும் போது இருநாட்டு மீனவ பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணமுடியும் எனவும், இலங்கையை ஒரு வழிக்கு கொண்டு வரமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் மீது இந்தியா கருணை காட்டாமல் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வங்ககடலில் தமிழக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட சட்டபூர்வமான உரிமையை பெற்று தர முனைய வேண்டும் என அவர் மேலும் கேட்டு கொண்டுள்ளார்.
கல்வியினாலேயே எமது சமூகத்தை உயர்த்த முடியும்: கிழக்கு மாகாண அமைச்சர் துரைராஜசிங்கம்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 07:17.04 AM GMT ]
இதுவரை காலமும் நம் நமக்காக மட்டும் படித்திருந்தாலும் இனிவரும் காலங்களில் எமது சமுதாயத்திற்காகவும் படிக்க வேண்டும்.இவ்வாறு செயற்படும் போதே எமது இனத்தினை முன்னேற்றமுடியும். தற்போதைய சூழ்நிலையில் எமது தமிழ் இனத்தின் பலமும் கல்வியில் தான் தங்கியிருக்கின்றது.
மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட உதயன்மூலை விவேகானந்தா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,ஆசிரியர்கள் தமக்குள் இருக்கும் கல்வியை,மாணவர்களுக்கு ஊட்டி அவர்களை தாமாகவே முன்வரச் செய்வது தான் கல்விச் செயற்பாடு. கல்வி என்பது ஏழை மாணவர்களுக்கு ஊன்றுகோலாகவே விளங்குகின்றது.
ஏழைகளின் முக்கிய பலமும் கல்விதான். கல்வியின் மூலம் தான் சமுதாயத்தில் உயர்ந்த இடத்தினைப் பெற முடியும். அது மாணவர்களுக்கு மட்டுமல்லாது அவர்களின் பெற்றோருக்கும் நமது சமூகத்திற்கும் பெருமையைத் தேடித் தரும். மாணவர்கள் உறுதியுடன் இதற்கான கனவினைக் காண வேண்டும்.
நாம் சாப்பிடுவதற்கு மட்டும் பிறந்தவர்கள் என்று அல்லாமல் சாதிக்கவும் பிறந்தவர்கள் என்பதை இந்த சமூகத்திற்கு வெளிப்படுத்தும் அளவிற்கு எமது செயற்பாடுகள் இருக்க வேண்டும். பூவில் இருந்து ஒரு வண்ணத்துப்பூச்சி எவ்வாறு தேனை உறிஞ்சி எடுக்கின்றதோ அது போல் மாணவர்களும் புத்தகம் எனும் பூவில் இருந்து கல்வி எனும் தேனை தேடி உறிஞ்சிக் குடிக்க வேண்டும்.
நாம் நினைப்பது தான் நடக்கும்,நினைக்காதது கிடக்கும் என்பார்கள் அதுபோல் எமது விடயங்கள் பற்றி எப்போதும் நினைக்க வேண்டும்.நினைத்து நினைத்து அதனை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். வேட்டை வாளிக் குழவிகள் எவ்வாறு ஒரு புழுவினை வேட்டைவாளியாக மாற்றி எடுக்கின்றதோ அதுபோல் பெற்றோர்களும்,ஆசிரியர்களும் மாணவர்களை கல்வி மான்களாக மாற்ற வேண்டும்.
அந்தப் பாரிய பொறுப்பு இவர்களிடத்தே அதிகம் தங்கியிருக்கின்றது. பிள்ளைகளை வளர்ப்பதில் மாத்திரம் கண்ணும் கருத்துமாக இருத்தல் கூடாது அவர்களின் கல்வி விடயத்திலும் கண்ணும் கருத்துமாக செயற்பட வேண்டும்.
உழைப்பு என்பது எமக்கு பரம்பரையாக இருக்கும் சொத்து. நாம் பயிர்களை வளர்ப்பதைப் போன்றே எம் உயிரான பிள்ளைகளையும் வளர்க்க வேண்டும். பிள்ளை படிப்பதற்கு பெற்றோர்கள் படித்திருக்க வேண்டும் என்பதில்லை.
பிள்ளை படிக்கும் போது அதன் அருகில் ஆதரவாக இருந்து அப்பிள்ளையைத் தட்டிக் கொடுத்தாலே போதும். எமது பிள்ளைகளை எமது மனதில் நினைத்து அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் அவர்களுக்கு கல்வியைக் கொடுக்க வேண்டும்.
எமது பிள்ளைகளை குறைந்தது உயர்கல்வி வரைக்குமாவது உயர்த்திச் செல்வது பெற்றோர்களின் கடமையாகும். அதுபோல் ஆசிரியர்களுக்கும் இதில் பாரிய பங்கு உண்டு. ஆசிரியர்கள் இதயத்தில் இருந்து பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டும் பல ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றார்கள். அது போல் அனைத்து ஆசிரியர்களும் இதயத்தில் இருந்து கல்வி சொல்லிக் கொடுத்தால் கல்வித்துறையில் நிச்சயம் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம்.
இன்றைய காலத்தில் எமது தமிழ் இனத்தின் பலமும் கல்வியில் தான் தங்கியிருக்கின்றது. கல்வி இல்லா விட்டால் எமது சமுதாயத்திற்கு எந்த பலாபலனையும் பெற்றுக் கொடுக்க முடியாது. இதுவரை காலமும் நமக்காக மட்டும் படித்திருந்தாலும் இனி எமது சமுதாயத்திற்காகவும் படிக்க வேண்டும்.
இவ்வறு செயற்படும் போதே எமது இனத்தினை முன்நிலைக்கு கொண்டு வர முடியும். தற்போதைய கால கட்டத்தில் அனைவருக்கும் சட்டம் ஒன்று என்ற ரீதியில் அனைவரும் அதனை மதிக்க வேண்டும். சட்டம் தெரியாது என்று யாரும் சொல்ல முடியாத சூழ்நிலையே தற்போது இருக்கின்றது.
எமது பிரதேசத்தைச் சேர்ந்த பெண்மணி சீகிரிய சுவரில் எழுதியமையால் சிறை தண்டணை அனுபவித்து வருகின்றார். ஆனால் தற்போது அப்பெண்ணிற்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை நம் அனைவருக்கும மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
இவரின் விடுதலைக்காக பல தரப்பாலும் பல கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. இவ்வாறான விடயம் தெரியாமல் செய்ததாக யாரும் சொல்ல முடியாது அவ்வாறு விண்ணப்பித்திருப்பின் அவை நிராகரிக்கப்பட்டிருக்கும்.
எனவே நாம் எமது குற்றத்தை ஒப்புக் கொண்டு தவறு செய்து விட்டோம் இனி தவறு நடக்காது எமக்கு மன்னிப்பு தாருங்கள் என்றே எமது விண்ணப்பங்கள் அமைந்தன அப்போதுதான் மன்னிப்பு வழங்குபவருக்கு அதனைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் சிறிதாவது ஏற்படும்.
ஏனெனில் ஜனாதிபதி எடுக்கின்ற நடவடிக்கை எதிர்காலத்தில் பாதிப்புகளை ஏற்படுத்தாத வகையிலே அமைய வேண்டும். அந்தவகையில் முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டே அப்பெண் தற்போது விடுதலை பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே இது எமது சமுகத்திற்கான ஒரு படிப்பினையாகவே இருக்கின்றது. எனவே மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சட்டத்தை மதிக்க வேண்டும். நன்றாகப் படிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkrzF.html
இனவாத- மதவாத தண்டனை சட்டத்தை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன்: மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 07:10.22 AM GMT ]
இனவாதம் எது, மதவாதம் எது, இனவுரிமை எது, மதவுரிமை எது என்பன பற்றி இந்நாட்டு அரசியல், மத தலைவர்கள் குறிப்பாக பெரும்பான்மை தரப்பை சேர்ந்தவர்கள் விளங்கி கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு மாநகர சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஜனநாயக மக்கள் முன்னணி மாநகர சபை உறுப்பினரான எம். திருபாகரகுமார், கட்சி தலைவரின் முன்னிலையில் உறுதியுரை பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வு இன்று கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
புதிய மாநகரசபை உறுப்பினருக்கு உறுதியுரை செய்து வைத்து இந்நிகழ்வில் உரையாற்றிய மனோ கணேசன்,
தட்டி பறிக்கப்படும் நமது உரிமைகளுக்காக தமிழ் பேசும் மக்கள் குரல் எழுப்புவது, போராடுவது, எழுதுவது இனவாதம் அல்ல.
அடுத்த இனத்தின் உரிமைகளை தட்டி பறிப்பது, வெட்டிக்குறைப்பது இனவாதம்தான் ஆகும். இந்த தெளிவு அரசாங்கத்திலும், எதிர்க்கட்சியிலும் இருக்கின்ற பெரும்பான்மை கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் இருக்கவேண்டும்.
இந்த தெளிவுடன்தான் இந்த சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். இந்த சட்டம் நல்லது. ஆனால், இந்த தெளிவு சிலருக்கு இல்லை. ஆகவே இனவாதம், மதவாதம் பேசினாலோ, எழுதினாலோ இரண்டு வருடம் சிறைதண்டனை என்று குற்றவியல் சட்டக்கோவையில் திருத்தம் கொண்டு வர அமைச்சரவை முடிவு செய்திருப்பதை எச்சரிக்கையுடன் வரவேற்கின்றேன்.
இந்த நாட்டில் இன, மதவாதம் பல்வேறு ரூபங்களில் இருக்கின்றது. வெறுமனே கோவில்களையும், பள்ளிகளையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும் இடிப்பது மாத்திரம் இனவாதம் அல்ல.
இந்நாட்டில் சனத்தொகையை கணக்கிட்டு, கொழும்பு மாவட்டத்தில் மூவர், நுவரேலியா மாவட்டத்தில் ஐவர், பதுளையிலும், கண்டியிலும் தலா இருவர் என தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படும் முகமாக புதிய தேர்தல் முறையில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என கூறினால் கொழும்பிலும், மலையகத்திலும் அரசியல் செய்கின்ற சிலருக்கு கோபம் வருகிறதாம்.
இவர்கள் யார்? இவர்கள், தேர்தல் காலங்களில் தமிழ் வாக்குகளை குறி வைத்து, தமிழர்களை வாக்கு வங்கியாக மட்டும் பயன்படுத்துகின்றவர்கள் ஆகும். இங்கே யார் இனவாதி? எனது இனத்தின் உரிமையை உறுதி படுத்த விளையும் நான் இனவாதியா? அல்லது எங்கள் வாக்குகளை தட்டி பறித்து ருசி பார்க்க துடிக்கும் இவர்கள் இனவாதியா?
இன்று யுத்தம் இல்லை. புலிகளும் இல்லை. அவர்களது எறிகணைகளும் இல்லை. ஆகவே அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்கான தேவையும் இல்லை. ஆகவே எங்கள் நிலங்களை திருப்பி கொடுங்கள் என்று நாம் கோருவது எப்படி இனவாதமாகும்?
இதையும் இனவாதமாக காட்ட சிலர் முயல்கிறார்கள். முஸ்லிம் சகோதர்களின் பள்ளிகளை உடைக்காதே என்று நான் சொன்னால், என்னை பார்த்து முதலில் சுன்னத் செய்துவிட்டு வந்து பிறகு முஸ்லிம்களை பற்றி பேசுங்கள் என்று சொல்லுபவர் இனவாதியா? அல்லது முஸ்லிம் சகோதர்களுக்காக குரல் எழுப்பும் நான் இனவாதியா?
இலங்கை தாய் திருநாட்டை சிலாகிக்கும் தமிழ் மொழியிலான தேசிய கீதத்தை பாடுவது மீதான அதிகாரபூர்வமற்ற தடையை நீக்குங்கள் என்று நான் ஜனாதிபதியை கேட்டேன். அவரும் உடன்பட்டார்.
அதன் பிறகு இந்த தடை நீக்கம் என்ற செய்தி உலகம் முழுக்க போனது. அதை நமது புதிய அரசின் நல்லெண்ண செயற்பாட்டின் அடையாளம் என்று நமது வெளிவிவகார அமைச்சர் ஜெனீவாவில் சென்று சொல்கிறார்.
நமது பிரதமர் அதை யாழ்ப்பாணத்தில் நினைவூட்டுகிறார். இந்நிலையில் நேற்று முதல்நாள் தேசிய நிறைவேற்று சபை கூட்டம் முடிந்த பின் என்னிடம் வந்த ஒரு பெரும்பான்மை அரசியல்வாதி இரகசியமாக ஒரு வேண்டுகோளை விடுக்கின்றார்.
அது என்ன வேண்டுகோள்? "மனோ, நீங்கள் கடந்த முறை இங்கே தமிழில் தேசிய கீதம் பாடும் விவகாரம் பற்றிய பிரச்சினையை எழுப்பினீர்கள். இனி இப்படியான சர்ச்சைக்குரிய பிரச்சினைகளை எழுப்பாமல் இருங்கள். அது நமது ஜனாதிபதியை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்கி விட்டது" என்று அவர் கோரிக்கை விடுக்கின்றார்.
தமக்கு தர்மசங்கடம் என்று ஜனாதிபதி என்னிடம் சொல்லவில்லை. அவரிடம் அப்படியான ஒரு அடையாளம் கூட தெரியவில்லை. ஆனால், ஜாதிக ஹெல உறுமய கட்சியை சார்ந்த ஒரு தேரர் என்னிடம் இப்படி சொல்கிறார். அவருக்கு நான் என்ன பதில் சொன்னேன் வேறு விடயம்.
ஆனால், தமிழ் மொழியில் இலங்கை தேசிய கீதம் பாடுவதை பற்றிகூட பேசாதீர்கள் என சொல்லும் இவர்கள் இனவாதிகளா? தாய் நாட்டை பற்றி தாய்மொழியில் தேசிய கீதம் பாடும் உரிமையை கோரும் நான் இனவாதியா? இவைபற்றி நாம் சிந்திக்க வேண்டும்.
இனவாதம் எது என்பது பற்றி அனைவருக்கும் .அறிவுறுத்த வேண்டும். எச்சரிக்கையுடன் இந்த சட்டங்களை வரவேற்க வேண்டும் என்றார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkrzE.html
Geen opmerkingen:
Een reactie posten