தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 4 april 2015

மகிந்த அரசிற்கு ஏற்பட்டதைப்போன்று புதிய அரசிற்கும் ஏற்படும்: சுனில் அந்துன்நெத்தி

இரு பிரதான கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் வட, கிழக்கிற்கு நியாயமான தீர்வு வழங்க வேண்டும்: லக்ஷ்மன்
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 12:22.34 PM GMT ]
வட, கிழக்கு மாகாணங்களுக்கு நியாயமான அதிகார பரவலாக்கத்தை வழங்குவதற்கு இரு பிரதான கட்சிகளும் ஒரு இணக்கப்பாட்டை எட்ட வேண்டும் என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
கண்டி, ஹாரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போதைய அரசாங்கம் ஆட்சியமைத்து குறுகிய காலத்தில் மேற்கொண்ட பாரிய பணிகளை வேறு எந்த அரசாங்கமும் முன்னெடுக்கவில்லை.
நாட்டில் தற்போது நல்லாட்சி ஏற்பட்டுள்ள நிலையில் உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதில் பெருமளவு ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஆனால் கடந்த காலங்களில் உலக தலைவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதை நிராகரித்து வந்தனர்.
இதேவேளை அடுத்த மாதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடத்தப்பட உள்ளது எனவும்,  
தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்படும். தேசிய அரசாங்கம் என்பது அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வதல்ல மாறாக அனைத்து கட்சிகளும் ஒரு நிலைப்பாட்டில் இருந்து நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதே என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அனைத்து கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டில் இருந்து செயற்பட தவறினால், எதிர்காலத்தில் நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வட, கிழக்கு பிரச்சினை இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது எனவும், இரு பிரதான கட்சிகள் இணைந்து வடக்கு கிழக்கு நியாயமான அதிகார பரவலாக்கத்தை வழங்குவது தொடர்பில் இணக்கம் காணவேண்டும்.
அதேபோல் யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இரு பிரதான கட்சிகளும் இணைந்து முகம் கொடுக்க வேண்டும் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr1I.html

ஊழல்வாதிகளை பிடித்த பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள்: தில்ருக்ஷி விக்ரமசிங்க
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 12:36.47 PM GMT ]
ஊழல் மோசடிகளுடன் தொடர்புபட்ட அனைவரையும் இனங்கண்ட பின்னரே அடுத்த வேலையை பார்க்க போவதாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் தில்ருக்ஷி விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய முன்னாள் அமைச்சர்கள் சிலர் அவருக்கு எதிராக செய்துள்ள முறைப்பாடு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை எனவும், எவ்வாறான போலி குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும், சகல திருடர்களையும் பிடிக்காமல் திரும்பி பார்க்க போவதில்லை எனவும் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
2002ம் ஆண்டு இரண்டு நிறுவனங்களில் தில்ருக்ஷி விக்ரமசிங்க சம்பளம் பெற்று அரச பணத்தை மோசடி செய்துள்ளதாக 5 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இவருக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக மேலும் கருத்து வெளியிட்ட தில்ருக்ஷி, மன ரீதியாக என்னை வீழ்த்தவே சிலர் எனக்கு எதிராக பொய்யான முறைப்பாடுகளை செய்துள்ளனர்.
சதிகாரர்களின் இவ்வாறான மோசடிகளினால் நான் ஒருபோதும் தளர்ந்து போக மாட்டேன்.
எனக்கு எதிராக எந்த சதிமுயற்சியில் ஈடுப்பட்டாலும் உண்மையான திருடர்களை பிடித்து விட்டே மறுவேலை பார்ப்பேன்.
நான் இரண்டு சம்பளங்களை பெற்றதாக கூறுவது பச்சை பொய். எவரது தூண்டுதலிலோ எனக்கு எதிராக சேறுபூசி வருகின்றனர்.
நான் அரச பணத்தை மோசடி செய்தவள் அல்ல மாறாக அரசாங்கத்திற்கு பணத்தை சம்பாதித்து கொடுத்தவள்.
எனக்கு எதிராக செய்துள்ள இந்த முறைப்பாடு குறித்து துரிதமாக விசாரணை நடத்துமாறு நான் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு நேற்று உத்தரவிட்டேன்.
குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க நான் எப்போதும் தயாராகவே இருக்கின்றேன்.
நான் சரியானதை சரியாக செய்யும் பெண். எடுத்து கொண்ட பணியை செவ்வனே செய்வேனே ஒழிய இடைநடுவில் வேிட்டு செல்லும் கோழையல்ல.
இதனால், எந்த நேரத்திலும் கடவுள் என்னை காப்பார் என தில்ருக்ஷி விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETYSUkr1J.html

மகிந்த அரசிற்கு ஏற்பட்டதைப்போன்று புதிய அரசிற்கும் ஏற்படும்: சுனில் அந்துன்நெத்தி
[ சனிக்கிழமை, 04 ஏப்ரல் 2015, 12:44.44 PM GMT ]
ராஜபக்ஸ விண்வெளியில் இருந்தார். வாழ்நாள் முழுவதும் தாமே ஜனாதிபதி என அவர் நினைத்திருந்தார். எனினும், மக்கள் தமது ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி அவரை கீழே இறக்கினர் என பாராளுமன்ற உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
கம்புறுப்பிட்டிய – மாபலானே பகுதியில் கட்சி அலுவலகத்தை இன்று திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் அந்துன்நெத்தி தெரிவித்ததாவது,
ராஜபக்ஸ விண்வெளியில் இருந்தார். வாழ்நாள் முழுவதும் தாமே ஜனாதிபதி என அவர் நினைத்திருந்தார். எனினும், மக்கள் தமது ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி அவரை கீழே இறக்கினர்.
அந்த மக்கள் நல்லாட்சியை எதிர்பார்க்கின்றார்கள். ஆனால் தம்மை தோற்கடிக்க முயற்சித்த எஸ்.பி. திசாநாயக்க போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை தாரைவார்ப்பது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கடமையல்ல.
மக்களும் அதனை எதிர்பார்க்கவில்லை. கடந்த ஆட்சியின் போது ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களை தாலாட்டாது அவர்களுக்கு தண்டனை விதிக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.
தற்போதைய ஆட்சியில் மத்திய வங்கியின் ஆளுநருக்கு சலுகைகள் வழங்கப்படுமானால் அதுவே தற்போதைய ஆட்சியாளர்களினதும் முடிவாக அமைந்துவிடும்.
ஆனால் தற்போது ஊழல்வாதிகள் தண்டிக்கப்படுவதாக தெரியவில்லை.
ஊழல்வாதிகளை இனம் கண்டு அரசாங்கம் தண்டனை வழங்காவிட்டால், மகிந்தவிற்கு நிகழ்ந்ததைப்போன்று இந்த அரசாங்கத்திற்கும் நிகழும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten