தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 7 april 2015

தமிழர்களுடைய கலைகள் பாதுகாக்கப்படுவது பல்லின சமுதாயத்திற்கு இன்றியமையாதது!– பற்றிக் பிரவுண்

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் தூதரகங்களின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படும்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:24.09 AM GMT ]
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் வெளிநாடுகளுக்கான இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகராலயங்களின் நிர்வாக நடவடிக்கைகள் பாதிக்கப்படும் என தெரிவிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 23ம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் சுமார் ஆறு மாத காலத்திற்கு 26 தூதரகங்களுக்கு தூதுவர்கள் இல்லாத நிலைமை உருவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்கா, நோர்வே, ஜப்பான், இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, நெதர்லாந்து, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, இந்தோனேசியா, ரஸ்யா, வியட்நாம், பங்களாதேஸ், சீசெல்ஸ், உகண்டா, தென்னாபிரிக்கா, போலந்து, மியன்மார், பிரேசில், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளின் இலங்கைத் தூதரகங்கள் இந்த நெருக்கடி நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.
23 தூதரகங்களும் 3 கொன்சோல் காரியாலயங்களும் இவ்வாறு தூதுவர்கள் மற்றும் கொன்சோல் அதிகாரிகள் இன்றி இயங்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருகின்றது.
புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டதும் குறித்த நாடுகளின் தூதுவர்கள் மீள அழைக்கப்பட்டதுடன், அந்த வெற்றிடங்கள் இன்னமும் நிரப்பப்படவில்லை.
உயர் பதவி தொடர்பிலான பாராளுமன்றத் தெரிவுக்குழுவின் அனுமதி பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த நாட்டுக்கு தெரிவு செய்யப்பட்ட தூதுவர் பற்றிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படும்.
இந்த தகவல்களை பரிசீலனை செய்யும் குறித்த நாடு, அதிகாரியை ஏற்றுக்கொண்டதன் பின்னரே அவர் தூதுவராக கடமையாற்ற முடியும்.
இந்த செயன்முறைகளுக்கு குறைந்த பட்சம் மூன்று மாத கால அவகாசம் தேவைப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இந்தத் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடையும் எனவும், இதனால் முக்கிய நாடுகளுக்கான இராஜதந்திர சேவைகளில் பாதிப்பு ஏற்படக்கூடுமெனவும் இராஜதந்திர சேவை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 01:37.23 AM GMT ]
இலங்கையில் படையினருக்கு அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பு காலத்தில் 1619 பேர் இராணுவத்தை விட்டு விலகியுள்ளனர்.
உத்தியோகபூர்வமாக அறிவிக்காமல் அல்லது விடுமுறை எடுக்காமல் இராணுவ சேவையிலிருந்து வெளியேறியவர்கள், முறையாக இராணுவத்தை விட்டு விலகிக்கொள்ள சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டது.
கடந்த 2ம் திகதி முதல் 5ம் திகதி வரையில் இவ்வாறு படையினர் விலகிக் கொண்டுள்ளனர்.
பதவி விலகுதவற்காக இராணுவத்திற்குச் சென்ற 1619 பேரில், 1239 பேர் வந்த தினத்திலேயே பதவி விலகிக் கொண்டுள்ளனர்.
எதிர்வரும் 16ம் திகதி வரையில் இந்தப் பொது மன்னிப்புக்காலம் அமுலில் இருக்கும்.
புத்தாண்டுக்கு முன்னதாக பதவி விலகி, சுதந்திரமாக புத்தாண்டை கொண்டாடுமாறு இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவிர தெரிவித்துள்ளார்.
பதவி விலக வரும் இராணுவ வீரர்கள் ஆவணங்களுடன் வங்கி கணக்கு விபரங்களையும் கட்டாயம் கொண்டு வர வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவையில்லை: சட்டமா அதிபர், பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 02:16.23 AM GMT ]
19ம் திருத்தச் சட்டத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டிய அவசியமில்லை என சட்டமா அதிபர் யுவன்ஜன விஜயதிலக்க உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டத்தில் காணப்படும் எந்தவொரு விடயத்திற்கும் சர்ஜன வாக்கெடுப்பின் மூலம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை.  மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் போதுமானது.
நிறைவேற்று அதிகாரம் என்பது மிகப் புனிதமான அதிகாரங்கள் கிடையாது.
நிறைவேற்று அதிகாரத்தை விசேடமானதாக கருதாது, அதன் மாற்றங்களை காலத்தின் தேவையாக கருதப்பட வேண்டும்.
சர்வஜன வாக்கெடுப்பு சுபலமான வழி என்பதனை ஏற்றுக்கொள்கின்றோம். எனினும் பாராளுமன்ற பெரும்பான்மை பலத்தின் ஊடாகவும் அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய முடியும் என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை: பிரதமர்
நிறைவேற்று அதிகாரத்தை ரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை நாடாளுமன்றின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தின் ஊடாகவே ரத்து செய்ய முடியும்.
அமைச்சரவையின் ஊடாக நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக்கூடிய ஆட்சி முறைமை உருவாக்கப்பட வேண்டும்.
இது தொடாபில் கடந்த தேர்தலில் மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு நிறைவேற்று அதிகார முறைமையில் மாற்றம் கொண்டு வர சர்ஜனவாக்கெடுப்பு அவசியமில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அம்பாறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks6C.html


தமிழர்களுடைய கலைகள் பாதுகாக்கப்படுவது பல்லின சமுதாயத்திற்கு இன்றியமையாதது!– பற்றிக் பிரவுண்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 02:59.03 AM GMT ]
தமிழர்களுடைய பாராம்பரியக் கலைகளும், பண்பாடுகளும் பாதுகாக்கப்படுவதும், அவை தொடர்ந்தும் கனடாவில் வளர்க்கப்பட்டுவருவதும் பல்லின சமூகக் கட்டமைப்பினை ஸ்திரப்படுத்துமென திரு. பற்றிக் பிரவுண் அவர்கள் தெரிவித்தார்.
ஒன்றாரியோ மாகாண புரக்கிரசிவ் கன்சவேட்டிவின் தலைவருக்கான முதன்மை வேட்பாளராகத் திகழும் திரு. பற்றிக் பிரவுண் அவர்கள் திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் நடனக் கல்லூரி கனடாவில் ஆரம்பிக்கப்பட்ட 25வது வருட நிறைவிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
திருமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களின் முதன்மை மாணவிகளில் ஒருவரான பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் பரதநாட்டிய நடன நிகழ்வொன்றை வழங்கியதுடன், சிறப்பு அதிதியாகவும் கலந்து கொண்டார்.
அவ்விழாவில் திரு பற்றிக் பிரவுண் மேலும் பேசுகையில்,
கனடாவிற்கு பல ஆண்டுகளிற்கு முன்னர் புலம்பெயர்ந்து வந்த சமூகங்கங்கள் பலவும் தங்களிற்கான கலச்சார நிலையங்களை அமைத்து தமது கலைகளையும், பாராம்பரிய விளையாட்டுக்களையும் பேணி வருகின்றன.
எனவே யூதர்கள், சீனர்கள், இந்தியர்கள், இத்தாலியர்கள், ஆர்மேனியர்கள் போன்று தமிழர்களும் தங்களுக்கென்றொரு கலாச்சார நிலையத்தை அமைக்க தமது சமூகம் சார்ந்த பங்களிப்புகளையும் வழங்கி தனிப்பட்ட நிதியாளர்கள் மற்றும் மாகாண, மத்திய, மாநகர அரசுகளின் துணையோடு இவ்வாறு செயற்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
http://www.tamilwin.com/show-RUmtyETbSUks6E.html


Geen opmerkingen:

Een reactie posten