வடமாகாண சபையில் அதிரடி அமைச்சுக்களின் செயலாளர்கள் திடீர் இட மாற்றம்
[ Apr 01, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 1080 ]
வடமாகாண அமைச்சுக்களின் செயலாளர்களாக கடமையாற்றியோர் இன்று ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வடமாகாண ஆளுநர் எச்.எம்.ஜி.எஸ்.பளிஹக்காரவினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வட மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராக இதுவரைகாலமும் கடமையாற்றிய இ.ரவீந்திரன் கல்வி அமைச்சின் செயலாளராகவும் கல்வி அமைச்சின் செயலாளராக பணிபுரிந்த எஸ்.சத்தியசீலன் மீன்பிடி அமைச்சின் செயலாளராகவும் மீன்பிடி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய இ.வரதீஸ்வரன் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராகவும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய சி.திருவாகரன் சுகாதார அமைச்சின் செயலாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை மனிதவள அபிவிருத்தி பயிற்சி பிரதி பிரதம செயலாளராக அ.சிவபாதசுந்தரன் நியமிக்கப்படவுள்ளார். இவர் இதுவரை காலமும் வடமாகாண சபையின் சபைச் செயலாளராக கடமையாற்றி வந்தார். இதுவரைகாலமும் உள்ளூராட்சி உதவி ஆணையாளராக கடமையாற்றிய ம.ஜெகூ புதிய சபைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
http://www.athirvu.com/newsdetail/2707.html
யாழ் - வடலியடைப்பு கிராமம் பிரான்பற்று கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடலியடைப்பு கிராம மக்கள் அதிருப்தி
[ Apr 01, 2015 07:14:56 AM | வாசித்தோர் : 1235 ]
நடைபெறவுள்ள உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பிலான வட்டாரங்களின் அடிப்படையிலான கிராமங்கள் தெரிவு செய்யப்படும் நடவடிக்கையில் வலி.தென் மேற்கு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வடலியடைப்பு கிராமம் பிரான்பற்று கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் வடலியடைப்பு கிராம மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பில் வடலியடைப்பு கிராம அபிவிருத்திச் சங்கம் அரச அதிபர் மற்றும் பிரதேச செயலருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
வலி. தென் மேற்கு பிரதேசசபை மானிப்பாய் பண்டத்தரிப்பு பட்டின உப அலுவலக பிரிவு வடலியடைப்பு து / 145 வட்டாரத் தெரிவில் எமது கிராமம் பிரான் பற்று கிராமத்துடன் இணைக்கப்பட்டது தொடர்பாக பண்டத் தரிப்பு பட்டினம் பட்டினசபையாக இருந்த காலத்திலும் அதற்கு முன் கிராமசபையாக இருந்த காலத்திலும் வடலியடைப்பு கிராமம் தனிவட்டாரமாக இருந்து இரு பிரதிநிதிகளை தெரிவு செய்த கிராமமாகும். எமது கிராம மக்கள் மூன்று வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
அப்படிப்பட்ட ஒரு பெரிய கிராமம் இன்னு மொரு பெரிய கிராமத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்துள்ளது.
ஏனைய சில்லாலைக் கிராமம் பண்டத்தரிப்புக் கிராமம் தனி அலகுகளாக வட்டாரமாக பிரிக்கப்பட்டது போன்று எமது கிராமத்தையும் தனி வட்டாரமாக பிரித்து எமது கிராமத்தின் தொன்மையையும் கிராமத்தின் அபிவிருத்திக்குப் பயன்படுத்தக்கூடிய முறையிலும் எமது கிராமத்தில் இருந்தும் ஒரு பிரதிநிதி பிரதேச அளவில் அங்கம் வகிக்கக் கூடியதாகவும் ஒரு வட்டாரத்தை பண்டத்தரிப்பு பட்டினத்தில் அதிகரித்து எமது வடலியடைப்பு கிராமத்தை முன்னிலைப்படுத்தித் தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/2708.htmlயாழ் - வடமராட்சி கிழக்கு சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழு
[ Apr 01, 2015 07:31:22 AM | வாசித்தோர் : 1670 ]
வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்த 15பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும் என வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் லலித் ஏ.ஜெயசிங்க தெரிவித்தார்.
யாழ். மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்கூட்டத்தின்போது 'மணற்காட்டு பகுதியில் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. பதிவு இல்லாத உழவு இயந்திரங்களில் வருவோரே அவ்வாறான நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்' என்று சுட்டிக்காட்டப்பட்டது.
இது தொடர்பில் எடுத்துக்கூறிய பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் பூபாலசிங்கம் சஞ்ஜீவன் 'உழவு இயந்திரத்தில் பொய்யான இலக்கதகடுகளை பொருத்தி வருகின்றனர். ஒவ்வொரு உழவு இயந்திரங்களிலும் 10க்கும் மேற்பட்டவர்கள் வருகின்றார்கள். அவர்களை ஊர்மக்களால் தடுக்க முடியவில்லை' என்றார்.
அத்துடன் 'நாளொன்றுக்கு இவ்வாறாக 40 உழவு இயந்திரங்கள் மண் எடுத்துச் செல்கின்றன. அவர்கள் வேகமாக உழவு இயந்திரத்தை ஓட்டிச் செல்வதனால் விபத்துக்களும் அதிகளவில் இடம்பெறுகின்றன. சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தவிசாளர் கோரினார்.
இதற்கு பதிலளித்த சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் இப்பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத மண் அகழ்வு நடவடிக்கையை கட்டுப்படுத்த 15பேர் கொண்ட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்படும்' என்று கூறினார்.
http://www.athirvu.com/newsdetail/2709.htmlசி.வி.விக்கினேஸ்வரனுக்கும் ரணிலுக்கும் இடையில் என்ன பிரச்சினை: ஜேர்மன் தூதுவர் கேள்வி
[ Apr 01, 2015 07:43:49 AM | வாசித்தோர் : 9005 ]
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் யாழ். வருகை வடமாகாண சபைக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நல்லதொரு இணக்கத்தை கொண்டு வருவதாக அமைந்திருக்கும். ஆனால் பிரதமர் - வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையேயான நெருக்கம் ஏற்படுத்தப்படவில்லை. அதற்கான காரணம் என்ன என்று ஜேர்மன் குடியரசின் தூதுவர் ஜோர்யின் மோர்ஹாட் தன்னிடம் வினாவியதாக யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜேர்மன் தூதுவர் யாழ். ஆயரை ஆயர் இல்லத்தில் புதன்கிழமை(01) சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தச் சந்திப்புக் குறித்து யாழ். ஆயர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
பிரதமரின் யாழ்ப்பாண விஜயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதா? என்று அவர் என்னிடம் வினாவினார் அதற்கு நான் ஆம் என்று கூற பிரதமர் - முதலமைச்சர் இடையில் நெருக்கம் இல்லாமைக்கான காரணம் என்ன என என்னிடம் வினாவினார்.
இருவருக்கும் இடையில் விரிசல் காணப்படுவது உண்மை. அது கொள்கை ரீதியான முரண்பாடாக இருக்கலாம் என்று கூறினேன். மக்கள் தற்போது எதை விரும்புகின்றார்கள்? எதை எதிர்பார்க்கின்றார்கள் என்று அவர் என்னிடம் வினாவினார்.
ஆட்சி மாற்றத்துக்கு தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் பங்காற்றியுள்ளனர். மக்கள் தொடர்ந்தும் மாற்றத்தில் இணைந்து கொள்ள விரும்புகின்றார்கள். பிரதமர் தனது விஜயத்தில் சில நல்ல காரியங்களை செய்துள்ளார்.
குறிப்பாக மக்களிடம் இருந்து அபகரிக்கப்பட்ட 1000 ஏக்கர் காணிகளை மீளக் கையளிப்பதாக உறுதியளித்து அதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளார். இது மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவுள்ளது.
மீளக்கையளிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் மீளக்குடியமர உதவுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார். வளலாய் பகுதியில் குடியமர்ந்த கத்தோலிக்கர்கள் தமக்கு வழிபாட்டுத்தலம் தேவை என்று கோரினர் என்றும் அவருக்கு பதிலளித்தேன் என்றார்.
http://www.athirvu.com/newsdetail/2710.html
Geen opmerkingen:
Een reactie posten