[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 07:01.44 AM GMT ]
ஜனாதிபதியின் தம்பியை பொலன்நறுவையிலிருந்து கொழும்பிற்கு கொண்டு செல்ல ஒரு இலட்சத்திற்கும் அதிகமான பணம் செலவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரர் பிரியந்த சிறிசேன கோடரி தாக்குதலுக்கு இலக்காகி தீவிரமான நிலையில் இருந்த போது ஹெலிகொப்டரில் பொலன்னறுவையில் இருந்து கொழும்பு நோக்கி கொண்டு செல்வதற்கு 1,64,887.50 ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது,
தனியார் ஹெலிகொப்டர் நிறுவனம் ஒன்று காயடைந்த நபரை கொழும்பிற்கு கொண்டு செல்வதற்கு ஹெலிகொப்டருக்கு செலுத்திய கட்டணத்திற்கு வழங்கிய பற்றுச்சீட்டு தற்போது இணையத்தளங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளன.
இந்த பற்றுச்சீட்டை பிரியந்த சிறிசேனவின் சகோதரரும் வியாபாரியுமான டட்லி சிறிசேனவின் பெயரில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி தனது சகோதரனின் தீவிர சிகிச்சைக்காக பயன்படுத்தப்ப்ட்ட கெலிகொப்டரின் செலவை தனது சொந்த செலவில் எடுத்துள்ளமை பாரட்டத்தக்கதொரு விடயமாகும். ஜனாதிபதி நினைத்திருந்தால் அதை ஒரு அரச செலவில் காட்டியிருக்க முடியும். ஆனாலும் மைத்திரி தனது சொந்த செலவாக காட்டியமை அவரது நேர்மையை மிகைப்படுத்தியுள்ளது.
இதுவே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எனில் அரச செலவிலேயே உள்ளடக்கியிருப்பாரோ என்னமோ.
ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரத்தில் இருந்த போதிலும் தனது சகோதரரை கொழும்புக்கு கொண்டுவர அரசாங்க பணத்தை செலவிடாது நேர்மையாக நடந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லலித் வீரதுங்கவிடம் விசாரணை
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 07:12.36 AM GMT ]
இவர் இன்றைய தினம் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து காணாமல் போன வாகனங்கள் தொடர்பிலேயே குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புறக்கோட்டை ஸ்ரீஜயவர்தனபுர பல்நோக்கு கூட்டுறவு நிலையத்திற்கு சொந்தமான இடத்திலிருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான புல்லட் ப்ரூப் சொகுசு கார்கள் உட்பட 53 வாகனங்களை பொலிஸார் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.
மேலும் முன்னாள் ஜனாதிபதி செயலாளரிடம் இது தொடர்பில் விசாரித்த போது குறித்த வாகனங்கள் சேவையில் இருந்து நீக்கப்பட்டவை எனவும், அவை அதியுயர் பாதுகாப்புடையவை என்பதினால் சந்தைகளில் விற்கவோ, ஏலத்தில் விடவோ அனுமதிக்கப்படவில்லை எனவும் தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUko7D.html
புதிய அரசின் மீது சிங்கள மக்களின் மோகம் தணிந்து வருகின்றது: பஷீர் சேகுதாவூத்
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 07:16.53 AM GMT ]
சிங்கள கடும்போக்குவாதிகள் புதிய அரசை கவிழ்க்கும் நிலையினை ஏற்படுத்துவார்களானால் சிறுபான்மை மக்களின் பிரச்சினை புறக்கணிக்கப்படும் நிலை உருவாகும் என்றும் அவர் கூறினார்.
ஏறாவூர் பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மத் ஹனீபா தலைமையில் வாவிக்கரையோரப் பூங்காவில் நடைபெற்ற பிரதேச செயலக கலாசாரப் பேரவையினால் நடாத்தப்படும் வருடாந்த கலை இலக்கிய நிகழ்வில் முதன்மை அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் மேலும் குறிப்பிடுகையில்,“இப்பொழுதும் புதிய ஆட்சி மீது இருக்கிற மோகம் சிங்கள மக்களுக்குள் தணிந்து போகத் தொடங்குகின்றது. ஆட்சியாளர்கள் மீதான வெறுப்பு வரத் தொடங்கியிருக்கின்றது. சிங்களக் கடும் போக்குவாதம், புதிய அரசாங்கத்தைக் கவிழ்க்கப் பார்க்கின்றது.
அது உக்கிரமடைந்தால் மீண்டும் சிறுபான்மை மக்களின் பிரச்சினை புறக்கணிக்கப்பட வேண்டியதொன்றாக மாறி இனப்பிரச்சினைத் தீர்வு கிடப்பில் போடப்பட்டு விடும்.
100 நாட்களுக்கு மேல் இந்த அரசு நீடிக்குமாக இருந்தால் 100 நாட்களுக்கு அடுத்து வருகின்ற நாட்களில் அவசரமாகத் தீர்த்து வைக்கின்ற பிரச்சினைகளில் இனப்பிரச்சினைக்கு முக்கியத்துவமளித்து மத்தியில் இருக்கின்ற புதிய அரசு புத்தியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு கிழக்கு மற்றும் மலையக சிறுபான்மை இனத்தவர் சார்பாக நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
இந்தப் புதிய அரசின் மீது சிங்கள மக்களுக்கு வெறுப்புணர்வு வருவதற்கு முன்பாக சிறுபான்மை இன மக்களின் விடயத்திலே சந்திரிக்கா அம்மையார் அக்கறை கொள்ள வேண்டும் என நான் வினயமாக வேண்டிக் கொள்கின்றேன். பணிக்குழுவின் தலைவர் என்கின்ற பதவியின் ஊடாக அவர் இதனை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் சமாதானத் தேவதை என்கின்ற பட்டத்துக்கு சந்திரிக்கா அம்மையார் தான் பொருத்தமானவர்.
சந்திரிக்கா அம்மையார் அவர்கள் யுத்தம் உக்கிரமாக இருந்த அன்றைய சூழ்நிலையிலே அரசியலுக்குள் நுழைந்து சமாதானப் புறாவாக வலம் வந்தார். தமிழ் பேசும் மக்களாலும் சமாதானத்தை விரும்புகின்ற சிங்கள மக்களாலும் விரும்பப்பட்ட இலங்கை மாதாவாக அவர் விளங்கினார்.
சிங்களக் கடும் போக்குவாதத்தை தலைநிமிர விடாமல் நசுக்கி வைத்திருந்தவர் என்ற பெருமையும் அவரையே சாரும். அவரிடமும் இலங்கை இனப்பிரச்சினை பற்றி நிறையவே கற்றுக் கொள்ள பாடங்கள் இருக்கின்றன. முன்னாள் எதிரிகளாக இருந்த அரசியல்வாதிகளை இன்னாள் நண்பர்களாக்கிய பெருமையைக் கொண்டிருக்கின்ற சந்திரிக்கா அம்மையார் அவர்கள் எதிரிகளாக மாற்றப்பட்டிருக்கின்ற சிங்கள,தமிழ்,முஸ்லிம் மக்களையும் நண்பர்களாக மாற்ற வேண்டும்.
ரணிலும் சந்திரிக்காவும், ஜாதிக ஹெல உறுமயவும், ஐ.தே.க.வும், றிசாத்தும், றவூப் ஹக்கீமும் எவ்வளவு பெரிய எதிரிகள். இவர்களெல்லாம் ஒரு இலக்கை மட்டும் நோக்காகக் கொண்டு முன்னாள் எதிரிகள் அனைவரும் இன்னாள் நண்பர்களாகியிருக்கின்றார்கள்.
பின்னணியிலே இருந்து இதனைச் சாதித்தது தற்போதைய பணிக்குழுவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியும் சமாதான தேவதையுமான சந்திரிக்கா அம்மையார்தான்.
இன்றைய நண்பர்கள் நாளைய எதிரிகளாவதற்கிடையில் சந்திரிக்கா அம்மையார் அவர்கள் இப்பொழுதிருக்கின்ற சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சிறுபான்மை மக்களின் இதயங்களை வென்று இந்த நாட்டுக்கு நிரந்தர நிம்மதியைத் தேடித் தரவேண்டும்.
இலங்கையிலே புதிதாக ஆட்சியமைக்கின்ற அரசுகள் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்திலே காலத்தை இழுத்தடிக்குமாக இருந்தால் இலங்கையின் அபிவிருத்தி தொடங்கி மற்ற அனைத்து செயற்பாடுகளும் தோல்விலேயே முடிவுறும்.
காலஞ்சென்ற ஜனாதிபதி பிறேமதாஸ தொடக்கம் யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததன் பின்னர் மஹிந்த ராஜபக்ச வரை ஆட்சி புரிந்த அனைவரும் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தை இதயசுத்தியுடன் அணுகியிருந்தால் இலங்கையில் சமாதானம் ஏற்பட்டிருக்கும்.
இப்பொழுதிருக்கின்ற தேசிய அரசாங்கம் இன்னும் விஸ்தரிக்கப்படுகின்றபோது அதனையும் பயன்படுத்தி அவசரமாக இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும். உள்ளக சுய நிர்ணய உரிமையோடு எல்லாச் சமூகங்களும் இணைந்து வாழ்கின்ற சூழ்நிலையை அவசரமாக ஏற்படுத்தினால் இந்த நாடு நிம்மதியடையும். அப்பொழுது வெளியுலகம் எங்களுக்குப் பாடம் சொல்லித் தரவேண்டிய சூழ்நிலை இருக்காது என்றார்.
ரணிலிடம் அரசியலமைப்பு சூழ்ச்சிகள் இல்லை: அனுர குமார
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 07:37.55 AM GMT ]
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேற்று கலந்துகொண்டு கருத்த தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தின் அனுமதிக்காக முன்வைக்கப்பட்டுள்ள 19ஆம் அரசியலமைப்பு திருத்த சட்டத்தில் பிரதமருக்கான அதிகாரம் அதிகரிப்பது எதிர்வரும் தேர்தலில் தெரிவு செய்யப்படும் அரசாங்கத்திலே என அவர் மேலும் கூறியுள்ளார்.
அதுவரை இவ் அதிகாரங்கள் ஜனாதிபதிக்கே கிடைக்கும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் அதனை பறித்துக் கொள்ள முடியாதெனவும் அவ்வாறு கூறுவது முற்றிலும் பொய்யான ஒரு விடயமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் மாளிகையைப் பார்த்து பிரதமர் ரணில் வாய்பிளந்தது ஏன்?
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 08:15.52 AM GMT ]
ஒரு சில தடவைகள் மாளிகையில் மகிந்த தங்கியிருந்ததும் உண்டு.. கீரிமலையில் அமைக்கப்பட்ட மாளிகையைப் பார்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மறுத்து விட்டார்.
மக்களின் வரிப்பணத்தில், தமிழர்களின் நிலப்பரப்பில் இப்படி ஒரு மாளிகை தேவைதானா? என்பது அவர் உள்ளத்தில் எழுந்த கேள்வி. அதன் காரணமாக மாளிகையைப் பார்க்க ஜனாதிபதி மைத்திரி மனம் கொள்ளவில்லை.
அதுமட்டுமன்றி அந்த மாளிகையை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகமாக பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி மைத்திரி இணக்கம் தெரிவித்தார்.
அதுமட்டுமன்றி அந்த மாளிகையை வடக்கு மாகாண முதலமைச்சரின் அலுவலகமாக பயன்படுத்துவதற்கும் ஜனாதிபதி மைத்திரி இணக்கம் தெரிவித்தார்.
தமிழர் தாயகத்தில் அமைக்கப்பட்ட மாளிகை தமிழ் மக்களின் அரச நிர்வாகத்திற்கு பயன்படுத்துவது நல்லது என்ற உயர்ந்த எண்ணத்தில் ஜனாதிபதி மைத்திரி அப்படி ஒரு நினைப்பைக் கொண்டிருந்தார்.
இது ஒரு புறம் இருக்க அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கீரிமலையில் மகிந்த ராஜபக்ச அமைத்த மாளிகையை நேரில் சென்று சுற்றிப் பார்த்தார்.
உலகில் உள்ள எந்தக் ஹோட்டல்களும் அதற்கு ஈடாகாது என்று விமர்சனம் செய்துள்ளார். உலகில் உள்ள எந்த நட்சத்திர விடுதிகளும் கீரிமலை மாளிகைக்கு ஈடாகாது என்பதன் ஊடாக, இலங்கையில், கீரிமலையில் அப்படி ஒரு மாளிகை என்று கூறுவது ரணில் விக்கிரமசிங்கவின் நோக்கமன்று.
மாறாக, கீரிமலையில் அமைக்கப்பட்ட பெறுமதியான மாளிகை வடக்கு மாகாண சபைக்கு கிடைத்துவிடுமோ என்று ஏக்கம் கொண்ட பிரதமர் ரணில் அதைத் தடுத்து நிறுத்துவதற்காகவே மேற்போந்த கருத்தை முன்வைத்தார் என்று கூறலாம்.
ஏற்கெனவே யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கீரிமலை மாளிகையை வடக்கின் முதலமைச்சரிடம் கையளிக்க விருப்பம் தெரிவித்திருந்தார் அல்லவா?
எனவே, அதைத் தடுக்க வேண்டும். அதற்கான ஒரு உபாயமே உலகில் எங்கும் இல்லாத நட்சத்திர ஹோட்டலாக கீரிமலை மாளிகை அமைந்துள்ளது என பிரதமர் ரணில் முன்மொழிந்தார்.
அத்துடன் கீரிமலையில் உள்ள மாளிகையை ஆறு நட்சத்திர விடுதியாக மாற்ற வேண்டும் என்றும் பிரதமர் ரணில் திருவாய்மலர்ந்துள்ளார்.
தமிழர்களின் பயன்பாட்டிற்கு கீரிமலை மாளிகையை வழங்கக் கூடாது என்பதற்காக பிரதமர் ரணில் திட்டம் தீட்டி விட்டார் என்பது புரிகிறது.
ஆக, கீரிமலையில் அமைக்கப்பட்ட மாளிகை தொடர்பில் பிரதமர் ரணில் சிங்கள மக்களுக்கு ஒரு செய்தியை தெரியப்படுத்தி விட்டார்.
எனவே, கீரிமலை மாளிகையை வடக்கு மாகாண சபைக்கு ஜனாதிபதி மைத்திரி வழங்க முன்வந்தாலும், அதற்கு சிங்கள மக்களும், சிங்கள அரசியல் கட்சிகளும் எதிர்ப்புத் தெரிவிப்பர் என்பது இப்போது உறுதியாயிற்று.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கீரிமலையில் அமைத்த மாளிகை என்பது வடக்கு மாகாண அரசுக்குச் சொந்தமாகும் போதே அதில் நியாயத்துவம் இருக்க முடியும்.
எனவே, கீரிமலை மாளிகையைப் பெற்றுக் கொள்வதற்கு வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
ஜனாதிபதியாக பதவியேற்ற பின் முதற்தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கின் முதலமைச்சரிடம் கூறிய முதலாவது செய்தி கீரிமலை மாளிகையை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் என்பதுதான்.
ஆகவே, மைத்திரி கூறிய முதலாவது வாக்கு காப்பாற்றப்படவேண்டும். இதற்கு எவர் ஊறுவிளைவிக்க முற்பட்டாலும் அதனை வெட்டி ஆள்வது தமிழ் அரசியல் தலைமைகளின் கடமை.
தமிழர்களின் தாயகத்தில் இப்போது ஆறு நட்சத்திர ஹோட்டல்களுக்கு எந்த அவசியமும் கிடையாது என்பதால், கீரிமலை மாளிகை வடக்கு மாகாணத்தின் சொத்தாகட்டும். இதற்கான முயற்சிகள் காலம் தாழ்த்தப்படாமல் முன்னெடுக்கப்பட வேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUko7J.html
Geen opmerkingen:
Een reactie posten