[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 07:46.26 AM GMT ]
ஆனால், அது எந்தவகையில், நாட்டுக்குப் பயனுள்ள விதத்தில் அமைந்திருந்தது என்பது கேள்விக்குரிய விடயம்தான். ஏனென்றால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு மேற்கொண்ட பயணம், முதலீடுகளை ஈர்த்தல், இந்தியாவுடனான உறவுகளை சமநிலைப்படுத்தி, சீனாவுடனான உறவுகளை உறுதிப்படுத்தல் என்பனவற்றுக்கும் அப்பால் சீனாவிடம் பெறப்பட்ட கடன்களுக்கான வட்டி வீதங்களையும் குறைக்கின்ற நோக்கத்தைக் கொண்டிருந்தது.
இந்த விடயங்களில் இலங்கைக்கு எந்தளவுக்கு சாதகமான நிலை சீனாவில் காணப்பட்டது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். ஆனால், ஒருவகையில் இந்தப் பயணம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைகொடுத்திருக்கிறது.
கோடரியால் வெட்டப்பட்டு கொல்லப்பட்ட தனது இளைய சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் தவிர்ப்பதற்கு, சீனப் பயணம் அவருக்கு உதவியிருக்கிறது. தனது சகோதரரான பிரியந்த சிறிசேன மீது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிருப்தி கொண்டிருந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழலில், அவர் உள்நாட்டில் இருந்திருந்தால், நிச்சயமாக இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும்.
சீனாவில் இருந்த காரணத்தைக் காட்டி அவர், இறுதிச் சடங்களில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார். சீனப் பயணம், கடந்த மாதம் 29ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும், 31ஆம் திகதி அதிகாலையில் தான் அவர் நாடு திரும்பினார். சில வேளைகளில் மஹிந்த ராஜபக் ஷவும் இவ்வாறு அரசு முறைப் பயணத்துக்குப் பின்னர், தனிப்பட்ட பயணத்தை நீடிப்பதுண்டு.
அதே உத்தியை கையாண்டு தனது சகோதரரின் இறுதிச்சடங்கில் பங்கேற்காமல் நழுவிக் கொண்டார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. இது அவருக்கு வாய்த்த நல்லதொரு சந்தர்ப்பம். இது தவிர, சீனப் பயணத்தின் மூலம், அவர் பெரியளவில் நன்மைகளை அடைந்துள்ளார் என்று கூறப்படுவதற்கில்லை. ஏனென்றால், சீனாவுக்கான பயணத்தை அவர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக, சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான பல பிரச்சினைகள் காணப்பட்டன.
அதில் மூன்று முக்கியமானவை. 1. கொழும்புத் துறைமுக நகரத் திட்ட விவகாரம். 2. சீனாவின் கடன் திட்டங்களை மீளாய்வு செய்தல். 3. இந்தியாவுடனும், சீனாவுடனும் உறவுகளை சமநிலைப்படுத்தல். இந்த மூன்றும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்பாக இருந்த முக்கியமான சவால்களாகவே கருதப்பட்டன.
கொழும்புத் துறைமுக நகரத் திட்டத்தை இடைநிறுத்திய அரசாங்கம், அதற்காக வழங்கப்பட்ட அனுமதிகளை மீளாய்வு செய்வதில் உறுதியாக உள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் அவ்வப்போது, முன்னுக்குப் பின்னாக நடந்து கொண்டாலும், இதுவரை அந்த திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கவில்லை.
சீனாவோ இந்த திட்டத்தை மீள ஆரம்பிக்க அனுமதி வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவே உள்ளது. ஆனால், இலங்கை அரசாங்கமோ, சுற்றுச்சூழல் காரணங்கள் உள்ளிட்டவற்றை முன்னிறுத்தி இதனைத் தடுத்து விடுவதில் ஆர்வம் காட்டுகிறது.
சீனத் தரப்பு, இது முன்னைய அரசாங்கத்துடன் செய்யப்பட்ட உடன்பாடு என்றும், இதற்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி, இந்த உடன்பாட்டை தொடர்ந்து முன்னெடுப்பது தற்போதைய அரசாங்கத்தின் கடமை என்றும் வலியுறுத்தி வருகிறது. இந்த விவகாரம் குறித்து பீஜிங்கில் பேசப்படும் என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சீனப் பயணத்துக்கு முன்னரே எதிர்வு கூறப்பட்டது.
சீன ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சீனாவின் உதவி வெளிவிவகார அமைச்சர் லியூ ஜியான்சோ, துறைமுக நகரத் திட்டத்தை தொடர இரு தலைவர்களும் விருப்பம் வெளியிட்டதாகவும், விரைவில் இதனை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.
ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த செய்தியை பின்னர், இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. அப்படி எந்த இணக்கப்பாடும் ஏற்படவோ வாக்குறுதி கொடுக்கப்படவோ இல்லை என்று வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பெரேரா கொழும்பில் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
அதுமட்டுமன்றி, கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் குறித்து பேசப்படவேயில்லை என்றும் அவர் கூறியிருந்தார். கடந்த புதன்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜித சேனாரத்னவும் இதனையே குறிப்பிட்டார். சீன ஜனாதிபதியோ அவரது குழுவினரோ இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பவில்லை என்றும், ஆனாலும், அதுகுறித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளக்கமளித்திருந்தார் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
சீனாவைப் பொறுத்தவரையில் இந்த திட்டம் மிகமுக்கியமானது, ஆனாலும் அது பற்றிப் பேசப்படவேயில்லை என்று இலங்கை கூறுவது ஆச்சரியமளிக்கிறது. அதேவேளை, இருதரப்பும் திட்டத்தை தொடர விருப்பம் தெரிவித்ததாக சீனத் தரப்பு கூறியுள்ளது. இவையெல்லாம் குழப்பமான விடயங்களாகவே உள்ளன.
இந்த திட்டத்தை மீளாய்வு செய்யும் அரசாங்கம், சீன நிறுவனத்திடம் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த அனுமதிகள் தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க இரண்டு வார காலஅவகாசம் கொடுத்திருந்தது. ஆனால், அந்தக் காலஅவகாசத்துக்குள் சீன நிறுவனம், உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறிவிட்டதாக, சீனாவில் இருந்த போதே, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, 'சவுத் சைனா மோர்னிங் போஸ்ட்' நாளிதழிடம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீன வானொலிக்கு அளித்த பேட்டியில், இலங்கையின் நிலப்பரப்பை எந்தவொரு நாட்டுக்கும் விட்டுத்தர முடியாது என்றும், இந்த திட்டம் மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருக்கிறார். ஆக, இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டை வலியுறுத்துவதிலும், சீன அரசாங்கம் தனது நலனைப் பேணுவதிலும் தான், கவனம் செலுத்தியுள்ளனவே தவிர இந்தப் பிரச்சினைக்கு முடிவு காண்பதற்குத் தவறியுள்ளன என்பதே உண்மை.
அடுத்து, இலங்கைக்கு சீனா வழங்கியுள்ள பல்வேறு கடன்களுக்கான வட்டி வீத்த்தைக் குறைப்பது குறித்துப் பேச, புதிய அரசாங்கம் ஆர்வம் கொண்டிருந்தது. மஹிந்த ராஜபக் ஷ அரசாங்கம், சீனாவிடம் பெற்ற கடன்களுக்கு அதிக வட்டி செலுத்தப்படுவதாக தற்போதைய அரசாங்கம் கருதுகிறது. சில கடன்கள் 6 அல்லது 7 வீத வட்டிக்குப் பெறப்பட்டுள்ளன.
இவை மிக அதிகம் என்றும், இந்தக் கடன் திட்டங்களை மீளாய்வு செய்து வட்டியைக் குறைப்பது குறித்து பேச்சு நடத்தப்படும் என்றும், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனாவுக்குச் சென்றிருந்த போதே கூறியிருந்தார். இதுகுறித்துப் பேசுவதற்கு, நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க விரைவில் சீனாவுக்கு வருவார் என்று அவர் கூறிய போதே, அதெல்லாம் முடியாது என்று சீனா கூறியிருந்தது.
கடன்களுக்கான வட்டியை மீளாய்வு செய்வது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பயணத்தின் முக்கியமான நோக்கம். ஆனால், அவரது பயணத்துக்கு முன்னரே, இலங்கைக்குக் கடன் வழங்கிய சீனாவின் முக்கியமான இரண்டு வங்கிகளில் ஒன்றான, சீன அபிவிருத்தி வங்கியின் பிரதிப் பணிப்பாளர், கடன்களை மீளாய்வு செய்ய முடியாது என்று கூறியிருந்தார்.
ஏற்கனவே இதற்கு இலங்கை அரசாங்கம் இணங்கியிருந்தது என்றும், இதற்குத் தேவையான ஒப்புதல்கள் பெறப்பட்டன என்றும் சுட்டிக்காட்டியிருந்த அவர், இனி மீளாய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். தமது வட்டி வீதம், 5.9 வீதமே என்றும், ஆனால் இலங்கை அரசாங்கம் 6, 7 வீத வட்டிக்கு பிணை முறிகளை வழங்கியுள்ளதாகவும் நியாயப்படுத்தியுள்ளார்.
இந்தநிலையில், சீனா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த விவகாரம் குறித்தும் பேசவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்ட சீன வெளிவிவகார உதவி அமைச்சர் லியூ ஜியான்சோ, இரண்டு நாட்டுத் தலைவர்களும், எந்தவொரு கடன்கள் தொடர்பான வட்டி வீதம் குறித்த முக்கியமான மீள்பேச்சுக்களை நடத்தும் அளவுக்குச் செல்லவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை அரசாங்கத் தரப்பு இந்த விவகாரம் குறித்து இன்னமும் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவும் பீஜிங் சென்றிருந்தார். என்றாலும், இந்த விடயத்திலும் இலங்கை அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை.
இந்த இரண்டு விவகாரங்களிலும், இணக்கப்பாடு எட்டப்படாத போதிலும், 2000 இலங்கை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தல், பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்தல், வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் பாதிப்புக் குறித்து ஆய்வு செய்வதற்கு உதவவும், அத்தகைய நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையை உருவாக்கவும் சீனா உதவ முன்வந்துள்ளது.
மேலும், எந்த நிபந்தனையும் விதிக்காமல், 1 பில்லியன் ரூபா மானியங்களை வழங்க சீனா முன்வந்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டிருந்தார். அதேவேளை, மூன்றாவது விடயமான, இந்தியாவுடனான உறவுகளை சமப்படுத்திக் கொள்வதிலும், இலங்கை பெரிய முன்னேற்றங்களை எட்வில்லை. கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் மற்றும் தனது நீர்மூழ்கிகளுக்கு கதவடைப்புச் செய்தது எல்லாமே இந்தியாவின் வேலை தான் என்று சீனா சந்தேகிக்கிறது.
எனவே, இந்தியாவுடன் இலங்கை கொண்டுள்ள உறவுக்கு இணையாக தானும் இருப்பதாக சீனாவினால் நம்ப முடியவில்லை. என்றாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த சீனத் தலைவர்கள் அனைவருமே, சீனாவுடனான உறவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்பதையே வலியுறுத்தியிருந்தனர்.
முக்கியமாக, சீன நிறுவனங்களின் நலன் களைப் பாதுகாக்க வேண்டும் என்று, திரும் பத் திரும்ப சீன ஜனாதிபதி மற்றும் சீனப் பிரதமரால் வலியுறுத்தப்பட்டதை சாதாரண விடயமாக கொள்ள முடியாது. இப்படியான நிலையில், தனது சீனப் பய ணத்தின் மூன்று முக்கிய இலக்குகளையும் எட்டுவதில் மைத்திரிபால சிறிசேனவுக்கு தோல்வியே ஏற்பட்டுள்ளது.
இந்த மூன்று விவகாரங்களும் தீர்க்கப்படாமல் சீனாவுட னான உறவுகள் ஒருபோதும் சுமுகமான நிலைக்குத் திரும்ப முடியாது. சீனாவைப் பொறுத்தவரையில் இலங்கை அரசாங்கத்தைக் கைக்குள் போட்டுக் கொள்ள விரும்பினாலும், தனது வர்த்தக நலன்களை இழந்து அந்த நிலையை அடைவதற்குத் தயாராக இல்லை. இதுதான், சீன � இலங்கை உறவுகளை புதுப்பிப்பதற்குத் தடையாக இருக்கிறது.
இந்த தடையை, ஏதாவதொரு பக்கம் அகற்ற முன்வராமல், சீன -� இலங்கை உறவு கள் மீண்டும் பழைய நிலைக்குச் செல்வது கடினமானதே.
- ஹரிகரன் -
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr6C.html
பிரபாகரன் என்னுடைய தலைவர், ஆனால் நரேந்திரமோடி எனது அரசியல் வழிகாட்டி: சிறீதரன்
[ ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2015, 07:59.25 AM GMT ]
விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கேர்ணல் தீபன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் மைத்துனர் என்பதும் இதற்கு வலுசேர்க்கிறது என இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஈழப் போரின் இறுதிக்கட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டமை தொடர்பான விடயத்தில் சிறீதரன் இந்தியா அலட்சியமாக நடந்து கொண்டதாக அவர் இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்துள்ளார்.
எனினும் சிறீதரனின் இந்த அரசியல் நிலைப்பாட்டில் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கிளிநொச்சியில் அவரது அலுவலகத்தில் அவருடன் நடத்திய நேர்காணலில் அறிய முடிந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
� இன்னும் எனது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்� சிறீதரன் உறுதியாக கூறினார். � ஆனால் மோடி எனது அரசியல் முன்மாதிரி� எனவும் அவர் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சுவாமி விவேகானந்தா, ராமகிருஷ்ண பரமஹம்சர், சுபாஸ் சந்திரபோஸ், அன்னை இந்திரா காந்தி, அன்னை தெரேசா போன்ற நீண்டகாலம் நிலையில் நிலைத்து நிற்க கூடிய இந்திய தலைவர்களின் வரிசைக்குரியவர் எனவும் சிறீதரன் கூறியுள்ளார்.
மோடி ஏன் எதற்காக நீங்கள மோடியை அரசியல் முன்மாதிரியாக எடுத்து கொண்டுள்ளீர்கள் என கேட்டதற்கு பதிலளித்துள்ள சிறீதரன், அவரது தெளிவான சிந்தனை கொண்டவர், சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்து மிகவும் உயர் மட்டத்திற்கு வந்தவர் என சிறிதரன் கூறினார்.
எல்லாவற்றிக்கும் மேல் கடவுளின் கருணை வேண்டும். அவர் கீரிமலை கோயிலில் வாழிபாடு செய்த போது அவரது கடவுள் பக்தியை பார்த்தேன்.
அத்துடன் அவர் உள் கண் கொண்டு அவரது எமது பிரச்சி்னைகளை தெளிவாக பார்த்தார் என நான் உணர்ந்தேன்.
மோடி இலங்கை தமிழர்களுக்கு சுய உத்தரவாதத்தையும் அதிக நம்பிக்கையையும் கொடுத்தார்.
தமிழர்கள் மத்தியில் அவர் தைரியமாக இந்தியில் பேசியதன் மூலம் சுய உத்தரவைவாதம் தேவை என்பதை உணர்த்தினார்.
அவரது நாட்டின் மொழியில் பேசியதை நான் பாராட்டுகிறேன். அவர் வணக்கம் போன்ற தமிழ் வார்த்தைகளை கூறிய போது அதில் அதிகமான அர்த்தங்கள் இருந்தன.
தமிழர்களின் பிரச்சினைக்கு குறித்து பேச காலஅவகாசத்தை வழங்குமாறும் மைத்திரிபால சிறிசேனவின் புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து செயற்படுமாறும் மோடி கூறிய அறிவுரையை தமிழர்கள் ஏற்றுக்கொண்டனர்.
பிரபாகரனின் கோட்டில் இருந்து பார்ப்பதை இந்தியர்கள் தவிர்த்து கொண்டனர்.
பூகோள அரசியல் எதார்த்தத்தின்படி இந்தியாவின் உதவியின்றி எம்மால் எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாது. அத்துடன் இந்தியாவின் சொந்த பாதுகாப்புக்கு நாங்கள் இந்தியாவுக்கு அவசியமானவர்கள்.
இந்தியாவுக்கு அமைதியான யாழ்ப்பாணம் தேவைப்படுகிறது. காரணம் யாழ்ப்பாணம் என்பது தென் இந்தியாவை அதிரவைக்கும் வெடிப்பொருளின் வெடி திரி எனவும் சிறிரதன் கூறியுள்ளார் என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETZSUkr6F.html
Geen opmerkingen:
Een reactie posten