[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:17.29 AM GMT ]
அவர் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் முன்னாள் பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகரவிடம் அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து தண்டப்பணம் அறவீட்டு பத்திரமொன்றை வழங்கியிருந்தார்.
இதனால் அவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது பழிவாங்கல் நோக்கத்திற்காகவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லலித் ஜயசூரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 25ம் திகதி அல்லது அதற்கு அண்மித்த திகதியொன்றில் 10 ஆயிரம் ரூபாவை இலஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் 5 வருடங்களின் பின்னர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் ஊடாக பொலிஸ் கான்ஸ்டபிள் சுமிந்த சமன், மற்றும் பிரதி பொலிஸ் பரிசோதகர் பண்டார ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் பிரதி அமைச்சர் ஹேமால் குணசேகரவிற்கு எதிராக அதிவேக நெடுஞ்சாலையில் வைத்து தண்டபணம் அறவீட்டு பத்திரம் வழங்கப்பட்டமைக்கு பழி வாங்கும் நோக்கிலேயே குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என குற்றவாளிகள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி அநுர மெத்தகொட தெரிவித்துள்ளார்.
சட்டவிரோத போதைப்பொருள் வைத்திருந்த பெண்ணொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட கசிப்பு எனும் போதைப்பொருளை குறைந்தளவாக நீதிமன்றில் காட்டுவதற்காகவே 10 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெறப்பட்டதாக தெரிவித்தே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் மனுதாரர் தற்போது வெளிநாடொன்றில் தங்கி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஆராய்ந்ததன் பின்னரே நீதிபதி குறித்த இருவரையும் வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளார்.
இதேவேளை அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தையடுத்து சுமிந்த சமன் எனப்படும் பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், அவரது வாகனத்தையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.
சுமிந்த சமனினாலேயே குறித்த வாகனம் தீக்கிரையாக்கப்பட்டது என தெரிவிக்க பொலிஸார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அது தொடர்பிலான பொலிஸ் விசாரணைகள் பாதியிலேயே இடைநிறுத்தப்பட்டன.
அதன் பின்னர் சுமிந்த சமன் பொலிஸ் சேவையிலிருந்து நீங்கியமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp3H.html
முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசத்திற்கான தடை இன்று முதல் அமுல்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:41.42 AM GMT ]
மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் முகத்தை முழுமையாக மூடும் வகையிலான பாதுகாப்பு தலைக் கவசத்தை அணியக் கூடாது என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இன்றைய தினம் முதல் இந்த சட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.
இந்த சட்டத்தை முதல் தடவையாக மீறுவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட உள்ளது.
நாட்டில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில் அரசாங்கம் இவ்வாறு முகத்தை மூடும் வகையிலான தலைக் கவசங்கள் அணிவதற்கு தடை விதித்துள்ளது.
இந்த தடை தொடர்பில் எதுவித சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும், குறித்த தடை மே மாதம் முதல் சட்டரீதியாக அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,
பொலிஸார் முகத்தை முழுமையாக தலைக்கவசத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர்களுக்கு ஆலோசனைகளை வழங்கி வருவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்று மாத்தறை பௌத்த இளைஞர் கழகத்தினால் இந்த தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp3I.html
Geen opmerkingen:
Een reactie posten