[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 01:06.00 AM GMT ]
கடுவெல, கொரதொட்ட பத்தினி தேவாலயத்தில் நடைபெற்ற அங்குரார்ப்பண நிகழ்வு ஒன்றில் நேற்று பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு அவர் தொடர்கையில்,
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை நாடு எதிர்நோக்கியுள்ளது.
40 ஆண்டு கால அரசியல் அனுபவம் உடையவன் என்ற ரீதியில் தேசிய பாதுகாப்பு விடயத்தில் பேரம்பேசக் கூடாது என்ற அறிவுரையை புதிய அரசாங்கத்திற்கு வழங்குகின்றேன்.
நாட்டை ஐக்கியப்படுத்தி சுதந்திரத்தை ஏற்படுத்தியே ஜனவரி மாதம் 9ம் திகதி நான் புதிய அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்தேன்.
தேசிய பாதுகாப்பை உறுதி செய்த என்னை சோதிக்காது, நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களை புதிய அரசாங்கம் கவனிக்க வேண்டும்.
எனினும், எனது பொருட்கள் இருப்பதாகத் தெரிவித்து அங்கும் இங்கும் தேடுதல் செய்வதில் அரசாங்கம் கூடுதல் நேரத்தை செலவிடுகின்றது.
என்னுடன் எவரேனும் பேசினால் நீதிமன்றில் உத்தரவு பெற்றுக்கொண்டு சென்று அவர்களது வீடுகள் சோதனையிடப்படுகின்றன.
வீடுகளை சோதனையிட உரிமை உண்டு என்ற போதிலும் இவ்வாறான இழிவான செயற்பாடுகளில் ஈடுபடக் கூடாது.
பௌத்த விஹாரைக்கு சென்றாலும் சில தலைவியர் என்னை கேலி செய்கின்றார்கள். என்னுடன் வரும் மக்கள் சோற்றுப் பொதிகளுக்காக வருவதாக கிண்டல் செய்கின்றார்.
என்னை அவமானப் படுத்தினால் பரவாயில்லை. எனினும், என்னுடன் வரும் மக்களை அவமானப்படுத்த வேண்டாம் என மஹிந்த ராஜபக்ச கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp3A.html
சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதாள உலகக் குழுவினருக்கு உளவுத்தகவல்களை வழங்குகின்றனர்!
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 01:13.16 AM GMT ]
தெற்கின் பாதாள உலகக் குழுக்களினால் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட கொலைகள், கொள்ளைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் தொடர்பில் நடைபெற்ற பொலிஸ் விசாரணைகள் பற்றிய தகவல்கள் பாதாள உலகக் குழுவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
சில ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வரும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த தகவல்களை வழங்கியுள்ளனர்.
தென் மாகாணத்தில் பிறந்து வளர்ந்து அதே பகுதியில் கடமையாற்றி வரும் உத்தியோகத்தர்களே இவ்வாறு தகவல்களை வழங்கி வருவதாக புலனாய்வு விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
தெற்கின் சில உயர் பொலிஸ் அதிகாரிகள், பாதாள உலகக் குழுத் தலைவர்களுடன் ஒன்றாக பாடசாலையில் படித்தவர்கள் எனத் தெரியவருகிறது. அவர்களிடையே தொடர்ந்தும் நட்புறவு நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக மீடியாகொட முக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்தல், ரத்கம பிரதேச சபையின் தலைவர் மனோஜ் மெண்டிஸ் கொலையாளிகளை கைது செய்தல் போன்றன தொடர்பிலான பொலிஸாரின் ஒவ்வொரு நடவடிக்கையும் சந்தேகநபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல்களின் அடிப்படையிலேயே அவர்கள் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பாதாள உலகக் குழுவினருக்கு தகவல்களை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அதிகாரிகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
லசந்த, மகேஸ்வரன் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்: ஜோன் அமரதுங்க
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 01:56.16 AM GMT ]
நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூன்று கடற்படை உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் கடற்படை அதிகாரியாவார்.
இந்த நபர்களிடம் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கொலைகளுக்கு யார் உதவி வழங்கினார்? ஒரே நபரே இந்த உதவிகளை வழங்கினாரா? போன்ற கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும்.
2006ம் ஆண்டு நவம்பர் மாதம் 10ம் திகதி நடராஜா ரவிராஜ் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இந்தக் காலப்பகுதியில் இடம்பெற்ற வேறும் கொலைகள் தொடர்பிலும் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது என ஜோன் அமரதுங்க குறித்த ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மகேஸ்வரன் மற்றும் லசந்த விக்ரமதுங்க ஆகியோரின் கொலைகள் தொடர்பிலான தகவல்கள் விரைவில் அம்பலப்படுத்தப்படும் என சிங்கள ஊடகமொன்றுக்கு ஏற்கனவே ஜோன் அமரதுங்க தகவல் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய நிறைவேற்று சபை இன்று கூடுகிறது! மக்கள் விடுதலை முன்னணி வெளியேறுமா?
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 04:14.37 AM GMT ]
இந்தக் கூட்டத்தில் புதிய அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் கேள்வி எழுப்பவுள்ளதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
தனியார் ஊடகமொன்றின் கேள்விக்கு பதில் அளித்தபோதே மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சரவை எண்ணிக்கை அதிகரிப்பு, எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் உள்ளிட்ட விடயங்களால் ஜே.வி.பி. அதிருப்தி கொண்டுள்ளதால் தேசிய நிறைவேற்றுச் சபையில் இருந்து ஜே.வி.பி. வெளியேறுவதற்கான சாத்தியம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் தன்னுடைய கேள்விகளுக்கு அரசாங்கம் அளிக்கும் விளக்கத்திலேயே இந்த சபையில் தொடர்ந்து இருப்பதா? அல்லது வெளியேறுவதா என்பது தெரியவருமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETWSUkp3G.html
Geen opmerkingen:
Een reactie posten