[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 02:43.00 PM GMT ]
இன்று பிற்பகல் கல்லடியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பில் இருந்து கல்முனை நோக்கி பயணித்தவேளை, முன்னால் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச்சென்றவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் தனக்கும், தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்பட வில்லையென பொன்.செல்வராசா எம்.பி. தெரிவித்தார்.
இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
பொன்.செல்வராசா எம்பியின் வாகனத்தில் மோதி காயமடைந்தவர் பலி
மட்டக்களப்பு –கல்முனை பிரதான வீதியில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் வாகனத்தில் மோதுண்டு படுகாயமடைந்தவர் மரணமானதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் வாகரை பிரதேசத்தைச் சேர்ந்த நல்லதம்பி கணேசலிங்கம் (62) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு கல்லடி, உப்போடை சிவானந்தா வித்தியாலயத்துக்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் இருந்து பிரதான வீதியை குறுக்கறுத்துச்செல்ல முற்பட்ட மோட்டார் சைக்கிளின் மீது, மட்டக்களப்பில் இருந்து ஆரையம்பதி சென்ற பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் வான் மோதியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது படுகாயமடைந்தவர் உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டார். எனினும் சிகிச்சைக்குப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இறந்தவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp1D.html
கெய்டி நாடுவரை வரை நீண்ட சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை
[ புதன்கிழமை, 01 ஏப்ரல் 2015, 02:45.06 PM GMT ]
சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திடம் சிறிலங்காவை பாரப்படுத்துமாறு ஐ.நா வகை கோரும் மில்லியன் (பத்து இலட்சம்) கையெழுத்து இயக்கம் சமீபத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கி வைத்திருந்தது.
இதன் ஒரு அங்கமாக கெய்டியில் பிரான்சினை தளமாக கொண்டு இயங்கும் CNRJ அமைப்பின் உறுதுணையுடன் கெய்டியில் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன்னர் ஐ.நா அமைதிப்படையில் இணைந்திருந்த சிறிலங்கா சிப்பாய்கள், கெய்டியில் பெண்கள் மீது பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டிருந்த விடயம் அங்கு கொந்தளிப்பிiனை ஏற்படுத்தியிருந்ததோடு விசாரணைகளும் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில் தற்போது சிறிலங்காவுக்கு எதிரான கையெழுத்து வேட்டை தீவிரமாக அங்கு தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்குப் முற்றிலும் எந்தப் பொறுப்பேற்பும் இல்லை என்பதால், சிறிலங்காவில் தற்போதைய சூழ்நிலை ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ் 'அமைதிக்கான அச்சுறுத்தல்' தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது' என்று இந்த கையொப்ப மனுவில் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மனு தமிழ், சிங்களம், ஆங்கிலம், இந்தி, பிரெஞ்சு, உட்பட 15 மொழிகளில் தொடங்கப்பட்டுள்ள இக்கையெழுத்து இயக்கத்தில் www.tgte-icc.org குறித்த இந்த இணையத்தளத்தின் வழியே உலகெங்கும் உள்ளவர்கள் ஒப்பமிட்டுக் கொள்ளலாம்.
சிறிலங்கா இராணுவத்தின் முன்னால் படைத் தலைவர் தற்போதைய அரசாங்கத்தின் ஓர் உறுப்பினராக இருக்கிறார் என்பதும், புதிய அதிபர் சிறிசேனாவின் உள்ளார்ந்த குற்றத்தன்மை நீதி வழங்கப்படுவதற்கு உகந்ததாக இருக்காது என்பதும் எந்த விதத்திலும், சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துவது தவிர வேறு வழியில்லை எனபதும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyETVSUkp1E.html
Geen opmerkingen:
Een reactie posten