தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தாவிட்டால் அரசின் முயற்சிகள் தோல்வியடையும்: சந்திரிக்கா



இலங்கையில் நல்லிணக்கம் ஏற்படுத்தப்படாவிட்டால் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகள் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் உருவாக்கப்பட்ட நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியை தேசிய ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிரந்தர அலுவலகமாக மாற்றவுள்ளோம்.
கடந்த அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை முற்றாக சீர்குலைத்துள்ளதை தொடர்ந்து அதனை சரி செய்து, இந்தியாவுடனான நல்லுறவை மீள கட்டியெழுப்புவதற்கு இலங்கை பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு மாதங்களுக்குள் இந்திய பிரதமர் நரேந்திரமோடி முதல் முறையாக இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். அவரது விஜயத்தின் மூலம் நட்புறவு பற்றிய வலுவான செய்தியொன்றை அவர் இலங்கைக்கு வழங்கியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மோசமான ஆட்சிக்காகவே மக்கள் அவரை தோற்கடித்தார்கள். மகிந்த ஆட்சியில், அவரது குடும்பத்தின் ஊழல்கள், மனித உரிமை மீறல், பல கொலைகள் மற்றும் ஒட்டுமொத்தத்தில் சுதந்திரம் இல்லாதநிலையே இலங்கையில் காணப்பட்டது.
ராஜபக்ச தோற்கடிக்கப்பட்ட பின்னர் நாங்கள் அனுபவிக்கின்ற சுதந்திர உணர்வு மிகப்பெரியது என அவரது ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்களே தெரிவிக்கின்றார்கள்.
இலங்கையில் மைத்திரி அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பின்னர் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் சுமூகமான உறவு நிலவுகின்றது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தங்கள் அடையாளத்தை காப்பாற்றுவதற்காக அவ்வப்போது உரத்துக்குரலெழுப்புவார்கள். எனினும் எங்கள் மத்தியில் சிறந்த உறவு ஒன்று காணப்படுகின்றது. விமுக்தி குமாரதுங்க அரசியலுக்குள் நுழைவாரா என்று எனக்கு தெரியாது அவர் குறித்து நான் கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால் நான் நிச்சயமாக மீண்டும் ஒருமுறை அரசியலுக்குள் நுழைய மாட்டேன், நான் மீண்டும் அரசியலுக்கு வருவது அசிங்கமான விடயம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq2B.html

Geen opmerkingen:

Een reactie posten