தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 3 april 2015

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்

இனவாதப் பேய்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சிக்கின்றன!– ஜயம்பதி விக்ரமரட்ன
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 02:47.33 AM GMT ]
இனவாதப் பேய்கள் நாட்டை ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக ஜனாதிபதி சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரட்ன தெரிவித்துள்ளார்.
நாடு பாரிய ஆபத்துக்களை எதிர்நோக்கும் நிலையை அடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நுகேகொட, கண்டி மற்றும் இரத்தினபுரி போன்ற இடங்களில் கூடிக்குழுமிய இனவாதப் பேய்கள் நாட்டை மீளவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ள முயற்சிக்கின்றன.
நாடு விழுந்திருந்த அதள பாதாள நிலைமை குறித்து இனவாதப் பேய்கள் இன்று மறந்து விட்டன.
நாம் அனைவரும் அச்சத்துடனும், சந்தேகத்துடனும் வாழ்ந்த காலமொன்று இருந்தது.
நாம் எமது சொந்த செல்லிடப் பேசியில் அழைப்புக்களை ஏற்படுத்துவதில்லை, அவ்வாறான ஒர் நிலைமை காணப்பட்டது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையினால் நாட்டுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருந்தது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமைக்கு பொருத்தமற்றவர் நியமிக்கப்பட்டதனால் நாடு எதிர்நோக்கிய ஆபத்தான நிலைமையை மக்கள் மறந்துவிடக் கூடாது.
ஆபத்தான நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க வேண்டியது அவசியமானது என ஜயம்பதி விக்ரமரட்ன அண்மையில் கண்டியில் தெரிவித்திருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1C.html

ரணில் பிரதமராக பதவி வகிக்க நானே காரணம்!- லிலந்த பெரேரா
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 03:06.22 AM GMT ]
ரணில் விக்ரமசிங்க இன்று பிரதமராக பதவி வகிக்க தாமே காரணம் என ஐக்கிய மக்கள் மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட அமைப்பாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான லிலந்த பெரேரா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவை கட்சியிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கப்பட்ட நானே அந்த சூழ்ச்சித் திட்டம் குறித்து அறிவித்தேன்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ரணில் விக்ரமசிங்க இரண்டு தடவைகள் பிரதமராக பதவி வகித்தமை என்னால்தான்.
தற்போதைய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் வீட்டில்ä, காமினி அத்துகோரள தலைமையிலான குழுவினர் ரணிலை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க சூழ்ச்சித் திட்டம் தீட்டினர்.
அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நான், அந்த சம்பாஷணைகளை தொலைபேசி ஊடாக ரணில் கேட்பதற்கு ஏற்பாடு செய்தேன்.
இதன் காரணமாகவே அந்த சூழ்ச்சித் திட்டத்தை ரணில் முறியடித்தார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவி வகிப்பது சந்தோசத்தை தருகின்றது.
நாடாளுமன்றில் ரணில் விக்ரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகிக்க கூடாது என முயற்சிக்கப்பட்டது.
இந்த முயற்சி குறித்து அமைச்சர் மஹிந்த சமரசிங்க, ரணிலின் மனைவி மைத்திரி போன்றவர்களுக்குத் தெரியும் என லிலந்த பெரேரா சிங்களப் பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1D.html

குற்றவாளிகளை கைது செய்வதில் கால தாமதம் ஏற்படவில்லை: பிரதி பொலிஸ்மா அதிபர்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 03:22.15 AM GMT ]
குற்றச் செயல்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை  கைது செய்வதில் கால தாமதம் எற்படவில்லை என சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்களை கைது செய்வதில் ஏன் கால தாமதம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் பொலிஸாரிடம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அவ்வாறான எந்தவிதமான கால தாதமமும் ஏற்படவில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதிலளித்துள்ளனர்.
உரிய சாட்சியங்கள் கிடைக்கப்பெற்றால் சந்தேக நபர்களை கைது செய்வதில் எவ்வித கால தாமதமும் ஏற்படப் போவதில்லை. தற்போதைய அரசாங்க சுயாதீனமாகவும், சுதந்திரமாகவும் கடமைகளை மேற்கொள்ள பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளது.
எனவே குற்றவாளிகளை கைது செய்வதில் எவ்வித பின்னடைவும் ஏற்படப்போவதில்லை என பூஜித ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1F.html

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட வேண்டும்: சிவசக்தி ஆனந்தன்
[ வெள்ளிக்கிழமை, 03 ஏப்ரல் 2015, 04:16.28 AM GMT ]
விசேட தேவைக்குட்பட்டோருக்கு நிரந்தர வாழ்வாதார உதவிகளும், மருத்துவ உதவிகளும் வழங்கப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம்  வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார் .
கடந்த 29 ஆம் திகதி  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு விஜயம் செய்து, மாவட்டத்தின் குறைகள் மற்றும்  தேவைகள் குறித்து கலந்துரையாடிய போதே பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் மேலும் வலியுறுத்தியதாவது,
போரினால் மிகவும் மோசமான அழிவுகளை சந்தித்துள்ள முல்லைத்தீவு மாவட்டத்தில்,போரினால் உடல் அவயவங்களை இழந்தும், கடும் காயமுற்றும் ஆயிரக்கணக்கானோர் வாழ்ந்து வருகின்றனர். வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல மாவட்டங்களிலும் இதேநிலைமையே காணப்படுகின்றது.
முள்ளந்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், இரண்டு கால்களையும், கைகளையும், கண்களையும் இழந்துள்ளோர், கண் அல்லது கை அல்லது காலை இழந்துள்ளோர் என்று வாழ்ந்துவரும் நிலையில், இவர்கள் தமது நிரந்தர வாழ்வாதாரத்துக்கு வழியேதுமின்றி பல்வேறு துன்பங்களை நாளாந்தம் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர்.
எனவே இவ்வாறானவர்களின் தகவல்களை முழுமையாக திரட்டி, அவர்களுக்கு நிரந்தர மருத்துவ உதவிகளும்,வாழ்வாதார உதவிகளும் வழங்கப்படல் வேண்டும். அத்துடன் மாதாந்த கொடுப்பனவு வழங்குவது குறித்தும் கூடுதல் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.
அதேபோல் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை, குறிப்பாக பாடசாலை செல்லும் மாணவர்கள் உள்ளடங்கலாக தலை முதல்  கால் வரைக்கும் உடலில் எறிகணைச்சிதறல்கள், குண்டுகளை சுமந்தவாறு கடும் இன்னல்களுக்கும், அவஸ்தைகளுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள்.
இவற்றை அகற்ற விசேட வைத்திய நிபுணர்களை அழைத்து சிகிச்சை அளிக்கப்படல் வேண்டும். மேலும் இறுதிக் கட்டப்போரினால் இடம்பெயர்ந்து செட்டிக்குளம் முகாமுக்கு சென்ற நிலையில் விவசாயிகளின் உழவு இயந்திரங்களும், உபகரணங்களும் பொதுமக்களின் பல்வேறு வகையான வாகனங்களும்,முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ தென்னிலங்கைக்கு கடத்தி செல்லப்பட்டுள்ளன.
இதனால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்படுதல் வேண்டும் என்றும், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்களின் காணிகளிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டு, அக்காணிகளில் உரித்துடைய மக்கள் மீளக்குடியமர்த்தப்படுதல் வேண்டும் என்றும் ஆனந்தன் எம்.பி வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, புனர்வாழ்வு அமைச்சும் மாகாணசபையும் இணைந்து குறித்த விபரங்களின் பிரகாரம் தகவல்களை திரட்டுமாறும், போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கிளிநொச்சியில் புனர்வாழ்வு மத்திய நிலையம் ஒன்றை நிறுவி, அதனூடாக மருத்துவ மற்றும் வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கு ஒழுங்குகள் செய்யவுள்ளதாகவும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyETXSUkq1H.html

Geen opmerkingen:

Een reactie posten